படுக்கைக்குச் சென்ற பிறகு ஒவ்வொரு மணி நேரமும் போன் ஸ்கிரீனைப் பார்த்து பயன்படுத்துவது தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை 59% அதிகரிக்கிறது, மேலும், தூக்கத்தின் கால அளவை 24 நிமிடங்கள் குறைக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
மனிதர்கள் ஒவ்வொரு இரவும் 7 முதல் 8 மணிநேரம் வரை தூங்க வேண்டும். முந்தைய ஆய்வுகள் தூக்கமின்மையை சோர்வு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகள் முதல் பதற்றம் மற்றும் மனச்சோர்வு வரை பல உடல் மற்றும் மன நோய்களுடன் தொடர்புபடுத்தியுள்ளன.
இந்த ஆய்வு எப்படி மேற்கொள்ளப்பட்டது?
'போன் ஸ்கிரீன் எப்படி, எப்போது பயன்படுத்தப்படுகின்றன: நோர்வே பல்கலைக்கழக மாணவர்களில் வெவ்வேறு திரை செயல்பாடுகள் மற்றும் தூக்கத்தை ஒப்பிடுதல்' என்ற சமீபத்திய பகுப்பாய்வு, திங்கட்கிழமை (மார்ச் 31) ஃபிரான்டியர்ஸ் இன் சைக்கியாட்ரி இதழில் வெளியிடப்பட்டது. இது நார்வே, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடனை தளமாகக் கொண்ட ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
நார்வே பல்கலைக்கழக மாணவர்களில் வெவ்வேறு ஸ்கிரீன் செயல்பாடுகள் மற்றும் தூக்கத்தை ஒப்பிடுதல்' என்ற சமீபத்திய பகுப்பாய்வு, திங்கட்கிழமை (மார்ச் 31) ஃபிரான்டியர்ஸ் இன் சைக்கியாட்ரி இதழில் வெளியிடப்பட்டது. இது நார்வே, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடனை தளமாகக் கொண்ட ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆராய்ச்சியாளர்கள் 2022-ம் ஆண்டு நார்வேயின் மாணவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு கணக்கெடுப்பின் தரவைப் பயன்படுத்தினர். இது 18 முதல் 28 வயதுக்குட்பட்ட 45,000 நார்வே வளர்ந்தவர்களின் தகவல்களைப் பெற்றது.
இந்த கணக்கெடுப்பு, மற்றவற்றுடன், பதிலளித்தவர்களிடம் படுக்கைக்கு முன் அவர்களின் போன் ஸ்கிரீன் பயன்பாட்டு நடத்தை, அவர்கள் பார்த்த இணைய உள்ளடக்கம் மற்றும் அவர்களின் தூக்கத்தின் தரம் குறித்து கேட்டது.
இந்த ஆய்வில் என்ன கண்டறியப்பட்டது?
பின்னடைவு பகுப்பாய்வுகள் - மாறிகளுக்கு இடையிலான உறவின் கட்டமைப்பைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு புள்ளிவிவர முறை - போன் ஸ்கிரீன்களைப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது, படுக்கையில் போன் ஸ்கிரீன்களைப் பயன்படுத்தாதவர்களுக்கு தூக்கமின்மையின் அறிகுறிகளைப் புகாரளிக்கும் வாய்ப்புகள் 24% குறைவாக இருப்பதைக் காட்டியது. ஆனால், ஸ்கிரீன் பார்க்கும் செயல்பாட்டின் வகை உண்மையில் ஒரு பொருட்டல்ல என்று இந்த ஆய்வு கூறுகிறது.
“சமூக ஊடகங்கள் பார்ப்பது மற்றும் பிற ஸ்கிரீன் பார்க்கும் செயல்பாடுகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை, இது தூக்கக் கலக்கத்திற்கு போன் ஸ்கிரீன் பார்க்கும் பயன்பாடுதான் முக்கிய காரணி என்பதைக் குறிக்கிறது” என்று நார்வே பொது சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரும் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான கன்ஹில்ட் ஜான்சன் ஹெட்லேண்ட், டாய்ச் வெல்லிடம் கூறினார்.
"நேர மாற்றம்" - அதாவது ஸ்கிரீன் பயன்பாடு தூக்கத்தை தாமதப்படுத்தி, ஓய்வெடுக்கும் நேரத்தை எடுத்துக்கொள்வதை விட - ஸ்கிரீன் பார்க்கும் நேரம் தூக்கத்தைப் பாதிக்கும் முக்கிய காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
“ஸ்கிரீன் பயன்பாடு தூக்கத்திற்கு பயன்படுத்தக்கூடிய நேரத்தை மாற்றினால், இது தூக்க கால அளவைக் குறைப்பதை விளக்கக்கூடும்” என்று ஹெட்லேண்ட் நியூஸ்வீக்கிற்கு தெரிவித்தார்.
"அதிகமாக விழித்திருப்பது" மோசமான தூக்கத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்திருந்தால், "பல்வேறு ஸ்கிரீன் பார்க்கும் செயல்பாடுகளுக்கு ஸ்கிரீன் பார்க்கும் நேரத்திற்கும் தூக்கத்திற்கும் இடையிலான தொடர்புகளை" ஆய்வு காட்டியிருக்கிறது.
‘இரவில் ஒருவர் ஸ்கிரீன் பார்க்கும் நேரத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்?’
ஒருவரின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த, தூங்குவதற்கு முன் ஸ்கிரீன் பார்க்கும் நேரத்தைக் குறைப்பது அவசியம் என்று பகுப்பாய்வு கூறுகிறது.
"உங்களுக்கு தூக்கம் வராமல் சிரமமாக இருந்தால்... படுக்கையில் ஸ்கிரீன் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்யுங்கள், தூங்குவதற்கு குறைந்தது 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பு ஸ்கிரீன் பார்ப்பதை நிறுத்துவது நல்லது. நீங்கள் ஸ்கிரீன்களைப் பயன்படுத்தினால், இரவில் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க அறிவிப்புகளை முடக்குவதைக் கருத்தில் கொள்ளுங்கள்” என்று ஹெட்லேண்ட் டாய்ச் வெல்லிடம் கூறினார்.
நியூஸ் வீக்கிற்கு அளித்த பேட்டியில், நரம்பியல் விஞ்ஞானியும் தூக்க நிபுணருமான செல்சி ரோர்ஷெய்ப், மக்கள் படுக்கைக்கு செல்வதற்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தொடங்கி, இரவு நேர ஓய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
“முக்கியமாக, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஓய்வெடுப்பதற்கும் கவனம் செலுத்த, படுக்கைக்கு முந்தைய வழக்கத்தை நீங்கள் பரிசீலிக்க வேண்டும்” என்று அவர் கூறினார். “இதில் உங்கள் மின்னணு சாதனங்களை ஒதுக்கி வைப்பதும் அடங்கும்.” என்று கூறினார்.