How second surge is different : வெள்ளிக்கிழமை அன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக 1350 என்று இருந்தது. அடுத்த நாள் அந்த பலி எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்தது. இரண்டாம் அலையில் இருக்கும் ஒரு நல்ல விசயம் என்னவென்றால் கடந்த ஆண்டினைக் காட்டிலும் தற்போது இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்பது தான். ஆனாலும் அதுவும் கூட அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல் காரணத்தால் மாறிவிடும் என்ற நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது கொரோனா வைரஸிற்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. ஒரு நாளைக்கு 2000 என்ற கணக்கை மிக விரைவில் எட்டினால், நாள் ஒன்றுக்கு அமெரிக்காவின் இறப்பு விகிதமான 3000-த்தை இந்தியா அதி விரைவில் எட்டிவிடலாம். ஆனால் நோய் தொற்றின் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகளே இல்லாத பட்சத்தில் இறப்பு விகிதத்தை நாம் எப்படியும் யூகித்துவிடலாம்.
உண்மையில், இந்த நோய் முந்தைய நேரத்தை விட வேகமாக பரவுகிறது. மக்கள்தொகையில் நோய் பரவுவதைக் குறிக்கும் நேர்மறை வீதமும் முன்பு எப்போதைக் காட்டிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலை மேலும் அதிகரிக்கும்.
இரண்டாம் அலை – இறப்பு விகிதம் குறைவு என்பது பொய்யாகலாம்
பிப்ரவரி மைய பகுதியில் மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இறப்பு விகிதம் அதிகரித்து வரும் பட்சத்திலும் கூட கொரோனா தொற்றினால் கடந்த ஆண்டு உயிரிழந்தவர்களைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. கடாக்த ஆண்டு அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 90 ஆயிரம் வழக்குகள் பதிவானது. அதிகபட்சமாக 1200 நபர்கள் உயிரிழந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக இருந்த போதும் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
மகாராஷ்ட்ராவில் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இறப்பு விகிதம் 400 ஆக உள்ளது. கடந்த ஆண்டு 25000க்கும் குறைவாக தொற்று ஏற்பட்ட போது ஏற்பட்ட மரணங்களைக் காட்டிலும் இது மிகவும் குறைவாகவே உள்ளது. மொத்த இறப்பு விகிதத்தோடு ஒப்பிடும் போது தற்போதைய இறப்பு விகிதம் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. 14 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வின் போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து தான் மரணம் நிகழ்கிறது.

மகாராஷ்ட்ராவின் மொத்த இறப்பு விகிதம் 2.09 சதவிகிதம் ஆகும். வார இறப்பு விகிதம் 0.89% ஆகும். இதே போன்ற நிலை அனைத்து மாநிலங்களிலும் இல்லை. டெல்லி, சத்தீஸ்கர், உ.பி. மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் பெருந்தொற்று காலத்தில் உள்ளன. அம்மாநிலங்களின் இறப்பு விகிதம் மொத்த இறப்பு விகிதத்தைக் காட்டிலும் 2 மடங்கு கூடுதலாக இருக்கிறது. இந்த பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று மிகவும் ஆபத்தானது என்பதை இது குறிக்கிறது.
ஜூலையில் இருந்து இந்தியாவின் ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தைக் காட்டிலும் தற்போதைய இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. மொத்தமாக 1.4 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 1.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு விகிதம் இந்தியாவில் 1.42% மட்டுமே. மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 7800க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். 14 நாட்களுக்கு முந்தைய வாரத்தில் மொத்தமாக 5.13 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் வாராந்திர இறப்பு விகிதம் 1.53% ஆக உள்ளது.
இரண்டாவது அலையின் ஆரம்ப வாரங்களில், குறைந்த தினசரி இறப்பு எண்ணிக்கை வைரஸின் லேசான மாறுபாட்டின் காரணமாக இருந்தது. எவ்வாறாயினும், கடந்த ஒரு வருடத்தில், மருத்துவ மேலாண்மை மற்றும் சிக்கலான பராமரிப்பு உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் நம்பத்தகுந்த விளக்கம்.இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களாக இந்த உள்கட்டமைப்பு முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மருத்துவமனை படுக்கைகள் இல்லாததாலோ அல்லது முக்கியமான பராமரிப்பு வசதிகள் கிடைக்காததாலோ பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அதிகமாக பரவும் தன்மை
இதுவரை இந்தியாவில் 26.6 கோடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 1.47 கோடி சோதனைகள் அல்லது 5.5% பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இது 13.5% ஆக அதிகரித்துள்ளது. 7 நாட்களில் இப்படி தொடர்ச்சியான அதிகரிப்பு இருந்ததில்லை.
கடந்த இரண்டு மாதங்களில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி விட்டது என்பதையே இது காட்டுகிறது. இதனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக் அளவு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. முதல் அலையின் போது ஜூலை இறுதியில் இருந்து தொற்றின் எண்ணிக்கை குறைய துவங்கியது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மிக அதிகமாக பாசிட்டிவ் கேஸ்கள் இருந்த போதிலும் இது குறைய துவங்கியது. அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பது அதிக எண்ணிக்கையில் நடைபெற்றிருக்கும் சோதனைகளையே காட்டுகிறது. ஜூலையில் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதுவும் மாத இறுதியில் தான். பின்னர் அந்த சோதனை செய்யும் எண்ணிக்கை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் 10 லட்சமாக அதிகமானது.
செப்டம்பர் மாதத்தில் செய்ததைக் காட்டிலும் 2.5% அதிகமான தொற்றுகளை தற்போது இந்தியா காண்கிறது. இது டெஸ்ட்களை அதிகரித்தால் அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இருந்த அதே அளவிலான சோதனைகள் தான் இப்போதும் நடத்தப்படுகிறது. ஆனால் இம்முறை அளவுக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் 15%க்கும் குறைவான நேர்மறையே பதிவாகிறது. ஆனால் சத்தீச்ளர் மற்றும் உ.பி. போன்ற மாநிலங்களில் கடந்த ஆண்டு குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது தேசிய சராசரிக்கு இடையேயான இடைவெளியை அது குறைத்துள்ளது. உண்மையில் மகாராஷ்ட்ராவைக் காட்டிலும் சத்தீஸ்கரில் வாராந்திர நேர்மறை விகிதம் அதிகமாகவே உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
மிக அதி வேகமாக பரவக்கூடிய வைரஸ் காரணமாக மக்களிடையே இந்த நோய் அதிக அளவில் பரவுவதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மரபணு வரிசைப்படுத்துதலுக்காக சேகரிக்கப்பட்ட மகாராஷ்டிராவிலிருந்து 60% க்கும் மேற்பட்ட வைரஸ் மாதிரிகள் இந்த இரட்டை பிறழ்வு வைரஸ் பரவலை காட்டுகின்றன. இந்த வைரஸ் பெரும்பாலும் பிற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.