Advertisment

இந்தியாவின் நிலக்கரி நெருக்கடி எவ்வளவு தீவிரமானது? அரசின் நடவடிக்கைகள் என்ன?

Explained: How severe is India’s coal crisis, and what is the govt doing to address it?: இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை; மின் தடை பற்றிய கவலைகளை வெளிப்படுத்தியுள்ள பஞ்சாப், ராஜஸ்தான், பீகார்; அரசின் நடவடிக்கைகள் என்ன?

author-image
WebDesk
New Update
இந்தியாவின் நிலக்கரி நெருக்கடி எவ்வளவு தீவிரமானது? அரசின் நடவடிக்கைகள் என்ன?

நிலக்கரி மற்றும் மின் அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பில் இந்தியாவின் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு நிலவரத்தை பிரதமர் அலுவலகம் ஆய்வு செய்தது. இந்தியாவின் அனல் மின் நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு 15-30 நாட்களுக்கு இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது சராசரியாக நான்கு நாட்களுக்கான நிலக்கரி அளவே கையிருப்பில் உள்ளது. எனவே நிலக்கரி பற்றாக்குறையின் விளைவாக பல மாநிலங்கள் மின்தடை பற்றிய கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன.

Advertisment

தற்போதைய நிலக்கரி நெருக்கடியின் அளவு என்ன?

டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்துள்ளதால் ஏற்படும் மின்வெட்டு குறித்து கவலை தெரிவித்துள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் குறைந்த திறன் கொண்ட அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டின் விளைவாக சுமை குறைப்பை (லோடு ஷெட்டிங்) ஏற்கனவே அறிவித்துள்ளன.

நிலக்கரி பற்றாக்குறையானது, தொற்றுநோயின் விளைவுகளிலிருந்து பொருளாதாரம் மீட்கப்பட்டதால் மின் தேவையின் கூர்மையான அதிகரிப்பின் விளைவாகும். ஆகஸ்ட் 2019 இல் 106 பில்லியன் யூனிட்டுகளிலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் மொத்த மின் தேவை 124 பில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. சீனாவில் நிலவும் பற்றாக்குறையால் நிலக்கரி விலை சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்துள்ளது மற்றும் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் அனல் மின்நிலையங்களின் குறைந்த அளவிலான சேமிப்பும் நிலக்கரி பற்றாக்குறைக்கு பங்களித்தன. செப்டம்பரில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பகுதிகளில் பெய்த கனமழையால் அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் மந்தநிலை ஏற்பட்டது.

இந்தியாவின் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் சுமார் 54 சதவிகிதம் நிலக்கரி மற்றும் லிக்னைட் மூலம் செயல்படும் அனல் மின் நிலையங்கள் தான் கொண்டுள்ளன. ஆனால் தற்போது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவிகிதத்தை அனல் மின் நிலையங்கள் கொண்டுள்ளன.

நிலைமையை சமாளிக்க அரசு என்ன செய்கிறது?

மின்சாரம், நிலக்கரி மற்றும் ரயில்வே அமைச்சகங்களில் உள்ள அதிகாரிகள் அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகத்தை கண்காணித்து, மின் உற்பத்திக்கு நிலக்கரியை தினசரி அனுப்புவதை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி ஏற்றுமதி அக்டோபர் 11 நிலவரப்படி தினசரி 1.87 மில்லியன் டன் நிலக்கரி தேவைக்கு எதிராக 2 மில்லியன் டன்களை தாண்டியுள்ளது என எரிசக்தித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி புதன்கிழமை ட்வீட் செய்தார்.

நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் 10 சதவிகித கலவையைப் பயன்படுத்த, உள்ளூர் நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்களுக்கு மின் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. சர்வதேச நிலக்கரி விலைகள் உச்சத்தை நெருங்கினாலும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் 10 சதவிகித கலவை ஒரு யூனிட் (கிலோவாட்-மணிநேரங்கள்) மின் உற்பத்தி செலவில் 20-22 பைசா அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது. மின் விநியோக நிறுவனங்களுடனான மின் கொள்முதல் ஒப்பந்தங்களின் கீழ் உற்பத்தியாளர்கள் விநியோகப்பாளர்களுக்கு விலையை அதிகரிக்க முற்படலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர், ஏனெனில் இந்த நிறுவனங்கள் தற்போது மின் பரிமாற்றங்களில் கணிசமாக அதிக விலையில் மின்சாரம் வாங்குவதன் மூலம் மின் விநியோகத்தில் பற்றாக்குறையை சந்திக்கின்றன.

அக்டோபர் 12 அன்று இந்தியா எரிசக்தி பரிமாற்றத்தில் (IEX) டே ஏஹெட் சந்தையில் (DAM) வாங்கும் ஏலம் 430,778 MWh (மெகாவாட்-மணிநேரங்கள்) ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு மாதத்திற்கு முன்பு 174,373 MWh ஆக இருந்தது. கொள்முதல் ஏலங்கள் சப்ளையை விட அதிகமாக உள்ளது, ஒரு மாதத்திற்கு முன்பு யூனிட் ஒன்றுக்கு ரூ .2.35 ஆக இருந்த சராசரி மார்க்கெட் கிளியரிங் விலை ரூ .15.85 ஆக உயர்ந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment