Advertisment

ஆர்.எஸ்.எஸ் - சீக்கியம் : வரலாற்று ரீதியில் இவர்களின் உறவு என்ன ?

பஞ்சாபில் தற்போது முக்கிய ஆர்எஸ்எஸ், பாஜக தலைமையில் இருப்பவர்கள் ஆர்யா சமாஜிலிருந்தும், காங்கிரஸ் பின்னணியில் இருந்து வந்தவர்கள்

author-image
WebDesk
Oct 18, 2019 17:26 IST
New Update
ஆர்.எஸ்.எஸ் - சீக்கியம் : வரலாற்று ரீதியில் இவர்களின் உறவு என்ன ?

தசரா திருநாளின் போது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசும் போது இந்தியாவை  இந்து தேசம்  என்று குறிபிட்டார். இந்த  பேச்சு, சீக்கிய சமூகத் தலைவர்களான அகல் தக்த் ஜாதேதர் கியானி ஹர்பிரீத் சிங், எஸ்ஜிபிசி (ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழு) தலைவர் கோபிந்த் சிங் லாங்கோவால் போன்றோர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியது. எனவே, ஆர்எஸ்எஸ் அமைப்பு  சீக்கியத்தை எவ்வாறு பார்க்கிறது, கடந்த காலங்களில் சீக்கியத்தோடு  கடைபிடித்த உறவையும் இங்கே பாப்போம்.

Advertisment

ஆர்யா சமாஜ், சீக்கியர்கள், ஆர்.எஸ்.எஸ் :

டர் காந்தா சிங்- ன் ‘பஞ்சாபில் இந்து-சீக்கிய பதட்டத்தின் தோற்றம்’ என்ற வரலாற்றுக் கட்டுரையில் , சீக்கிய ஆட்சிக் காலம் நடந்த 19 நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்து-சிக்கய பதற்றம் என்ற ஒன்று அறியப்படாமலே இருந்தது என்று தெரிவித்தார்.

1875 ல் ஆர்யா சமாஜின் சத்யார்த்த பிரகாஷ் வெளியிட்ட புத்தகத்தில் சீக்கிய குருமார்களைப் பற்றிய தவறான சித்தரிப்பு இருந்தது. இதற்கு பதில் கூறும் விதமாக, சீக்கிய அடையாளங்களை தனித்துவம்  என்று வலியுறத்துவதற்காக  கட்டமைக்கப்பட்ட இயக்கம் சிங் சபா இயக்கம்.  1920 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், 'சீக்கிய ரேஹத் மர்யாதா' என்ற நடைமுறைகளை வகுத்து,யாரு சீக்கியர்கள் ? ஏன் சீக்கியம் ஒரு தனிப்பட்ட மதம் ?  என்பதனையும் அடிக்கோடிட்டனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆர்யா சமாஜூடன் கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்தது என்பதை ஆர்எஸ்எஸ் சீக்கியர்களிடம் கொண்ட உறவின் மூலமாக  நாம் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஆர்எஸ்எஸ் அமைப்பும், மறைந்த சாவர்க்கரும் சீக்கிய குருமார்ககளின் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள்.

சீக்கியத்தை ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு வரையறுக்கிறது: 

ஆர்எஸ்எஸ் புரிந்துணர்வில், இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் இந்து ராஷ்டிராவின் ஒரு பகுதி, ஒரு அங்கம்.  இந்த புரிந்துணர்வு, மிகவும் சிக்கலானது என்கிறது சீக்கிய அமைப்பான அகல் தக்த் .

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொடர்புடைய ராஷ்டிரிய சீக்கியர் இயக்கத்தின் தலைவர் ஜிஎஸ் கில் கூறுகையில், " மோகன் பகவத்தின் கருத்தில் எதுவம் புதிதும் இல்லை, தவறும் இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை சித்தாந்தமே இந்து தேசம் தான். ஆனால், தேசத்தின் வளர்சிக்காக போராடும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியது தான் இந்து தேசம் என்பதை மோகன் பகவத் மிகவும் தெளிவாகவே விளக்கினார்.

கடந்த காலங்களில் அகல் தக்த் அமைப்புக்கு ஆர்எஸ்எஸ்  குறித்த அதிகாரபூர்வமாக ஆலோசனைகள் வழங்கும்  எழுத்தாளர், டாக்டர் சுக்பிரீத் சிங் உத்தோக் இது குறித்து விவிரிக்கையில், " முகாலாயர்களுக்கு எதிராக போர் புரிந்து, நாட்டைக் காத்ததால், இஸ்லாம்மியர்கள், கிறுத்துவர்கள்  போல் அல்லாலாமல்  இந்து தேசத்தின் ஒரு பகுதியாக சீக்கியர்களை ஆர்எஸ்எஸ் பார்கின்றது. ஆனால், சீக்கியர்கள் இதை முற்றிலும் மறுக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக சண்டை போட்டது என்பதில் இருந்து சீக்கியர்களின் வரலாறு ஆரம்பிக்கவில்லை. சீக்கியர்கள் தங்களை தனிமதமாகத்தான் கருதுகிறார்கள். தங்களின் தனித்துவமான அடையாளங்களை மதிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தங்களை இந்து மதத்தோடு இணைக்கின்றனர் என்ற எண்ணம் சீக்கியர்களுக்கு உண்டு" என்று கூறினார்.

அயோத்தி வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் பேசப்பட்ட முக்கிய வாதம்

“ஆர்யா சமாஜ் போலல்லாமல், ஆர்.எஸ்.எஸ் சீக்கிய குருக்களை மதிக்கின்றது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், தற்போது பஞ்சாபில் இருக்கும் முக்கிய ஆர்எஸ்எஸ், பாஜக தலைமையில் இருப்பவர்கள் எல்லாம்  ஆர்யா சமாஜிலிருந்தும், காங்கிரஸ் பின்னணியில் இருந்து வந்தவர்கள். எனவே, அங்குள்ள உள்ளூர் தலைவர்களுக்கு ஆர்ஆர்எஸ், ஆர்யா சமாஜ், சீக்கியம் என்ற முக்கோண உறவுகளில் அமைந்துள்ள அடிப்படை சாராம்சங்களை தெரிந்து கொள்ள முடியாதவர்களாய் உள்ளனர் என்று  குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்த்தில் பணியாற்றும் பேராசிரியர் கூறினார்.

 முக்கிய அரசியல் நிகழ்வுகள்: 

ஆர்எஸ்எஸ் தலைமையைத் தாண்டி, பாஜகவும்  பாரதிய ஜன சங்கமும் எடுத்த அரசியல் முடிவுகளும்,  சீக்கியர்களுக்கும் ஆர்எஸ்எஸ் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகமாவதை வழிவகுத்தன.

1960 ல் ஜலந்தரில், அப்போதைய  ஆர்.எஸ்.எஸ் தலைவர் குரு கோல்வல்கர், பஞ்சாபியருக்கு - பஞ்சாபி தான் தாய் மொழியாக இருக்க வேண்டும் என்றார்.  ஆனால், 1956 ல் ஆரிய பிரதிநிதி சபையால் தொடங்கப்பட்ட  "இந்தி கிளர்ச்சியை காப்பாற்றுங்கள் ” என்ற போராட்டத்தோடு ஆர்எஸ்எஸ்ன் தொடர்புடைய ஜன சங்கம் இணைந்தது. 1961 சென்சஸில் பஞ்சாபிலுள்ள  இந்துக்கள் இந்தி மொழியை  தங்கள் தாய்மொழியாக  அறிவித்தத்தில் ஜன சங்கத்தின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

1984 ம் ஆண்டில், பஞ்சாப் பொற்கோயில் வளாகத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்கு பாஜக ஆதரவு வழங்கியது. 2009 ம் ஆண்டில் தான் அருண் ஜெட்லி ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் காங்கிரசின் ‘வரலாற்று தவறு’ என்று பாஜகவின் அரசியல் நிலைபாட்டை மாற்றியமைத்தார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் ராஷ்டிரிய சீக்கிய சங்கத்தின்  நடவடிக்கைகள் குறித்து சீக்கியர்கள் கவனாமாக இருக்க வேண்டும் என்று அகல் தக்த் 2004ம் ஆண்டு, ஜூலை 13 ம் தேதி ஒரு உத்தவரையும் பிறப்பித்தது. இந்த இரண்டு அமைப்புகளும் குரு கிரந்த் சாஹிப்  நிறுவப்பட்ட 400  ஆண்டுத் தினத்தின் போது கொண்டாடிய விதமும், வெளியப்பட்ட சீக்கிய இலக்கியங்களும், சீக்கிய நம்பிக்கைகுள் ஆர்எஸ்எஸ் தலையிடுவதாய் அகல் தக்த்  அப்போது நினைத்தன.

ஆர்எஸ்எஸ் தலைவர் கே எஸ் சுதர்ஷன் 1999 ம் ஆண்டு, 'தம்தாமி தக்சல்' என்ற சீக்கியர்களின் கல்வி மையத்தின் தலைநகருக்கு பயணம் செய்தார். இந்த பயண வருகையை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ராஷ்டிரிய சீக்கிய சங்கத் தலைவரான ருல்தா சிங் 2009 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2016ம் ஆண்டில், ஆர்எஸ்எஸ் மாநில துணைத் தலைவர் பிரிக் ஜகதீஷ் கக்னேஜா கொல்லப்பட்டபோது, சீக்கிய போராளிகள் தான் காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.

2017 ஆம் ஆண்டில், லூதியானாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ரவீந்தர் கோசைன் கொலை செய்யப்பட்டபோது,  2004 ல் அகல் தக்த் பிறபித்த உத்தரவுகளால் சீக்கியர்களுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் பெரிய பேதைமை எற்பட்டுள்ளதாகவும், நடக்கும் கொலைகளுக்கும் அகல் தக்த்தின் உத்தரவும் காரணமாக இருக்கலாம்  என்று ராஷ்டிரிய சீக்கியர் இயக்கம் கருத்து தெரிவித்தது.

ஆர்எஸ்எஸ் முனைப்பு:  

அரசாங்க தடுப்புப்பட்டியலில் இருக்கும் சீக்கியர்களை நீக்குவது ,  சீக்கிய கைதிகள் பிரச்சனை , 1984 கலவரங்களில் சீக்கியர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி போன்ற  சீக்கியர்களின் சமூகநலப்  பிரச்சனைகளை பிற்காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதிகமாக கவனம் செலுத்தின. குறிப்பாக சீக்கியர்களை கருப்புப் பட்டியலில் இருந்து தூக்குதல்,  குரு நானக் தேவின் பிறந்த நாள் விழாவை  இந்திய தூதரகங்களில் கொண்டாடுதல் போன்றவைகள் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஏற்பட்ட வெற்றி என்று பிரச்சாரம் செய்தன . இதானால், எஸ்ஜிபிசி போன்ற சீக்கிய அமைப்புகளின்  இடத்தையும் ஆர்எஸ்எஸ் பிடித்தன.

இதற்கிடையில், மத்திய பாஜக அரசு முன்னாள் சீக்கிய போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் தேகேதர், பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியாவில் திரும்பி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவர் தெரிவிக்கையில் , “ நான் தடுப்புப்பட்டியலில் வெளிவருவதற்கு காரணம்  அகாலிதளமல்ல, நரேந்திர மோடி அரசு" என்று வெளிப்படையாக சொன்னார்.

மோகன் பகவத்தின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து  அகால் தக்த்தின், கியானி ஹர்பிரீத் சிங் கூறுகையில்  “நாங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்க்கும்போது, இந்துக்களை எதிர்க்க வில்லை ; ஆர்.எஸ்.எஸ் இந்து மதத்தை போதிக்க முடியும்; எங்களுக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் சீக்கிய மதத்தை வரையறுப்பதை நிறுத்த வேண்டும். சீக்கியர்கள் யார் என்பதை தீர்மானிக்கவும், எது சீக்கியம் என்று சொல்ல பல சீக்கிய அமைப்புகள் உள்ளன. நாங்கள் யார் என்று வெளியாட்கள் வரையருப்பதை  நாங்கள் விரும்பவில்லை, ஆர்எஸ்எஸ் ன் இந்து தேச சித்தாந்தத்தில் நாங்கள் இல்லை" என்று தெரிவித்தார்.

#Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment