Advertisment

'ஸ்மார்ட் இன்சுலின்'; சர்க்கரை நோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் எப்படி?

சர்க்கரை நோய் சிகிச்சை பற்றிய விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆராய்ச்சியில் 'ஸ்மார்ட் இன்சுலின்' உருவாக்குவதில் ஒரு பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
insulin

சர்க்கரை நோயால் உலகளவில் அரை பில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சர்க்கரை நோய் பாதிப்பால் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட ஏழு மில்லியன் இறப்புகள் ஏற்படுத்துகிறது என புள்ளி விவரங்கள் கூறுகிறது. 

Advertisment

இப்போது விஞ்ஞானிகள் சர்க்கரை நோய் சிகிச்சை பற்றிய  நீண்ட கால ஆராய்ச்சியில் ஒரு பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர். 'ஸ்மார்ட் இன்சுலின்'  உருவாக்கி உள்ளனர். ஒருவரின் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களுக்கு நிகழ்நேரத்தில்  "ஸ்மார்ட்" இன்சுலின் பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு புதன்கிழமை நேச்சர் இதழில் வெளியிடப்பட்டது.

சர்க்கரை நோய் மற்றும் சிகிச்சை

நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. இரண்டும் உடலின் ஆற்றலை உற்பத்தி செய்ய இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடைக்கும் ஹார்மோனான இன்சுலினுடன் இணைந்து செயல்படும் திறனுடன் தொடர்புடையவை.

டைப் 1 நீரிழிவு 

இது பெரும்பாலும் குழந்தை பருவத்தில் தொடங்குகிறது, கணையம் இன்சுலின் (அல்லது போதுமான இன்சுலின்) உற்பத்தி செய்யாதபோது ஏற்படுகிறது. டைப் 2  நீரிழிவு, உடலின் செல்கள் இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுத்துகிறது.  அதாவது கணையத்தால் உற்பத்தி செய்யப்படுவதை விட அதிக அளவு தேவைப்படுகிறது. இது 2-வது வகையாகும். 

இரண்டு நிலைகளும் செயற்கை இன்சுலின் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால் உடலில் இரத்த குளுக்கோஸ் அளவு சீராக இல்லாததால் இது ஒரு அடிப்படை சவாலாக உள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:    How ‘smart insulin’ promises to revolutionise diabetes treatment

உடலில் இன்சுலின் அளவுக்கதிகமாக இருப்பதால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகக் குறைவது உயிருக்கு ஆபத்தாக முடியும். பெரும்பாலான நோயாளிகள் தங்கள் இன்சுலின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், அதற்கேற்ப அளவை சரிசெய்ய வேண்டும்.

இன்சுலின் பற்றி சமீபத்திய ஆய்வு

இருப்பினும், சமீபத்திய ஆய்வு, டென்மார்க், லண்டன் மற்றும் செக்கியாவில் உள்ள நிறுவனங்களின் சர்வதேச விஞ்ஞானிகள் குழு மற்றும் பிரிட்டோல் பல்கலைக்கழகம், இன்சுலின் மூலக்கூறை "ஆன்-ஆஃப் சுவிட்ச்" கொடுக்க மாற்றியமைத்துள்ளது. இரத்த குளுக்கோஸ் அளவை மாற்றுவதற்கு தானாகவே பதிலளிக்கிறது.

NNC2215 என பெயரிடப்பட்ட புதிதாக உருவாக்கப்பட்ட இன்சுலின் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: ஒரு வளைய வடிவ அமைப்பு மற்றும் குளுக்கோசைடு எனப்படும் குளுக்கோஸை ஒத்த வடிவத்தைக் கொண்ட மூலக்கூறு ஆகும்.

 இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் போது, ​​குளுக்கோசைடு வளையத்துடன் பிணைக்கப்பட்டு, இன்சுலினை செயலற்ற நிலையில் வைத்து, இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தடுக்கிறது.

ஆராய்ச்சி பற்றி பேசிய, லண்டனில் உள்ள  நீரிழிவு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன் கூறுகையில்,  "இது ரத்த சர்க்கரையின் உயர்வது மற்றும் குறைவை நிர்வகிப்பதற்கு தற்போது உள்ள நிலையான சவாலை எளிதாக்கும், மேலும் உலகெங்கிலும் இன்சுலின் சிகிச்சையை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment