Explained: பசிஃபிக் நாடுகள் கொரோனாவில் இருந்து தப்பியது எப்படி?
நாவல் கொரோனா வைரஸ் அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் இன்னும் பல தீவு நாடுகள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை.
நாவல் கொரோனா வைரஸ் அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் இன்னும் பல தீவு நாடுகள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை.
coronavirus, micronesia, comoros, kiribati, பசிஃபிக் நாடுகள், மார்ஷல் திவுகள், marshall islands, கொரோனா வைரஸ், மைக்ரோனேசியா, கொமொரோஸ், Pacific nations, Pacific nations islands, covid 19, tamil indian express
நாவல் கொரோனா வைரஸ் அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் இன்னும் பல தீவு நாடுகள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை.
Advertisment
பிபிசி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஏப்ரல் 2-ம் தேதி நிலவரப்படி, கொமொரோஸ், கிரிபட்டி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, நௌரு, பலாவ், சமோவா, சாவோ டோம், பிரின்சிபி, சாலமன் தீவுகள், டோங்கா, துவாலு மற்றும் வனடு ஆகிய தீவு நாடுகளில் இதுவரை கோவிட் -19 நோய்தொற்று எதுவும் பதிவாகவில்லை.
மிகப்பெரிய பசிபிக் பிராந்தியத்தில், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறைவாகவே உள்ளது. 22 தீவு நாடுகள், பிரதேசங்கள் ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி 119 பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன என்று ‘அல் ஜசீரா’ தெரிவித்துள்ளது.
‘தி எகனாமிஸ்ட்’டின் ஒரு அறிக்கையின்படி, குக் தீவுகள், பிஜி, பிரெஞ்சு பாலினேசியா, நியூ கலிடோனியா, பப்புவா நியூ கினியா, டோங்கா மற்றும் வனடு ஆகிய இடங்களில் கப்பல்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளன.
Advertisment
Advertisements
மார்ச் 1 ம் தேதி சமோவாவுக்குள் நுழைய விரும்பும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.
மார்ச் 9 மார்ஷல் தீவு சர்வதேச பயணிகள் வருகையை தடை செய்து நடைமுறைக்கு கொண்டு வந்ததோடு விமான நிலையத்தையும் மூடியது.
மார்ச் கடையில் நௌரு, கிரிபடி, டோங்கா, வனடு போன்ற நாடுகளில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டன.
கொரோனா வைரஸ்: பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகள் ஏன் இன்னும் ஆபத்தில் உள்ளன?
இந்த நாடுகளின் புவியியல் தனிமைப்படுத்தலை அவர்களின் மீட்புக்காக கொண்டுவந்திருந்தாலும், அவை காலவரையின்றி இருப்பதை கற்பனை செய்வது கடினம் என்று எகனாமிஸ்ட் செய்தி கூறுகிறது.
இந்த நாடுகள் பல நுண்ணிய எல்லைகளைக் கொண்டுள்ளன. மேலும், இவை கடலோர நாடுகளாக இருப்பதால், அவர்கள் வைரஸை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த நாடுகளில் பல அடர்த்தியாக மக்கள் வசிக்கும் பகுதிகளைக் கொண்டுள்ளன. இதனால் சமூக விலகல் நடவடிக்கைகளை செயல்படுத்துவது கடினம். பலவற்றில் வலுவான சுகாதார அமைப்புகளும் இல்லை. அதனால், வைரஸ் சமூக பரவல் தொடங்கினால் அது அச்சுறுத்தலின் உச்சத்தில் இருக்கும்.
சில பசிபிக் நாடுகள் கொரோனாவிலிருந்து எப்படி தப்பியது?
சீனாவில் கொரோனா வைரஸ் வெடிப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், பல பசிபிக் நாடுகள் மார்ச் 11 அன்று உலக சுகாதார அமைப்பால் இது ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தங்கள் கடற்கரையோரப் பகுதிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க விரைந்தன.
ஜனவரி மாதத்திலேயே, மைக்ரோனேசியா, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளை அனுமதிப்பதை நிறுத்தியது. பப்புவா நியூ கினியா ஆசியாவிலிருந்து உள்வரும் அனைத்து விமான பயணங்களையும் தடை செய்தது. பின்னர், இந்தோனேசியாவுடனான தரைவழி எல்லையையும் சீல் வைத்தது.
பசிபிக் தீவு நாடுகளில் நீரிழிவு நோய், இதய நோய்கள் உள்ளிட்ட தொற்றுநோய் அல்லாத நோயாளிகள் அதிக அளவில் இருப்பதாக அறியப்படுகிறது. கோவிட்-19 இத்தகைய நோயாளிகளை மிகவும் கடுமையாக பாதிக்கும் என்பதால், இது பசிபிக் தீவுவாசிகளை கூடுதல் ஆபத்தாக இருக்கிறது.
உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதார பாதிப்பும் இந்த பிராந்தியத்திற்கு ஆபத்தானது. பல நாடுகள் இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளன. சுற்றுலாத் துறையில் அதன் முன்னணி முதலாளிகளிகள் உள்ளனர். விநியோகச் சங்கிலிகள் ஏற்கனவே சீர்குலைந்துள்ளன, மேலும் சுற்றுலாப் பயணிகள் மறைந்து போவது கடுமையான பொருளாதாரக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"