மருத்துவர்கள் பன்றி சிறுநீரகத்தை மனிதருக்கு பொருத்தியது எப்படி?

இன்னும் 10 ஆண்டுகளில் இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை பன்றிகளிடம் இருந்து மாற்றுவதற்கு தயாராகி விடுவோம் என்று அவர் மேலும் கூறினார்.

Aswathi Pacha

surgeons gave pig kidney to a human : அக்டோபர் மாதம் 19ம் தேதி அன்று அமெரிக்க நாளிதழான யூ.எஸ்.ஏ. டுடே வெளியிட்ட செய்திக் குறிப்பில், நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர்கள், மூளைச்சாவு அடைந்த மனிதர் ஒருவரின் உடலில் பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமாக பொருத்தியதாக குறிப்பிட்டிருந்தது. NYU லாங்கோன் குழு, மரபுரீதியாக வடிவமைக்கப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை இறந்த டோனரின் உடலில் பொருத்தி சிறுநீரகத்தின் செயல்பாடு மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவற்றை 54 மணி நேரத்திற்கு ஆய்வு செய்தனர்.

அறுவைசிகிச்சை குழுவை வழிநடத்திய டாக்டர் ராபர்ட் மாண்ட்கோமெரி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுநீரகம் செயல்பட ஆரம்பித்து, அந்த நபரின் இரத்த நாளங்களுடன் இணைக்கப்பட்ட சில நிமிடங்களில் அதிக அளவு சிறுநீரை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. சிறுநீரகத்தால் இரத்தத்திலிருந்து வெளியேற்றப்படும் கிரியேட்டினின் 1.9 இலிருந்து 0.8 ஆகக் குறைந்து சிறுநீரகம் உகந்த முறையில் செயல்படுகிறது என்பதை நிரூபிக்கிறது என்று அவர் கூறினார். டாக்டர் மாண்ட்கோமெரி NYU லாங்கோன் ஹெல்த் அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் அதன் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

நீண்ட காலத்திற்கு இணக்கமானதாகக் கண்டறியப்பட்டால், இந்த Xenotransplantation அல்லது வெவ்வேறு உயிரினங்களுக்கு இடையில் உறுப்புகளை இடமாற்றம் செய்வது, உயிருக்கு ஆபத்தான நோய்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு மாற்று மற்றும் கூடுதல் உறுப்புகளை வழங்க உதவும்.

மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பன்றியின் சிறுநீரகம் ஏன் பயன்படுத்தப்பட்டது?

செப்டம்பர் 25ம் தேதி அன்று நடத்தப்பட்ட மாற்று அறுவை சிகிச்சையின் போது பன்றியிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தைப் பயன்படுத்தி ஆல்பா-கால் என்ற சர்க்கரை மூலக்கூறுக்கான குறியீட்டை உருவாக்கும் மரபணுவைத் தட்டிச் சென்றது. ஆல்பா-கேல் பொதுவாக மனிதர்களில் காணப்படுவதில்லை மற்றும் இந்த மூலக்கூறு மனிதர்களில் ஒரு பேரழிவு தரும் நோயெதிர்ப்பை வெளிப்படுத்தும்.

இந்த மரபணு மாற்றத்தைக் கொண்டிருக்கும் பன்றிகள் கால்சேஃப் என்று அழைக்கப்படுகிறது. மேலும் பன்றி இறைச்சி ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் கூட மனித பயன்பாட்டிற்காகவும், மருந்தியல் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்த எஃப்.டி.ஏ.வால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ப்ரைமேட் உறுப்புகள் மனிதர்களுடன் மிகவும் இணக்கமாக இருந்தாலும், பன்றிகள் மரபணு மாற்றத்தை எளிதாக்குகின்றன என்று டாக்டர் மாண்ட்கோமெரி தெரிவித்தார். பன்றிகள் வேகமாக வளருகின்றன. மேலும் தொற்றுநோய்களை கடத்தும் வாய்ப்புகலும் மிகவும் குறைவாகவே உள்ளது. நம்முடைய சிறுநீரகத்தின் அளவு தான் பன்றிகளின் சிறுநீரகமும் உள்ளது.

மனித உடலுக்குள் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டதா?

இல்லை. சிறுநீரகம் அந்த மனிதரின் மேல் தொடை மற்றும் வயிற்றுப்பகுதிகளில் இருக்கும் ரத்த நாளங்களுடன் இணைக்கப்பட்டன. இது கண்காணிப்புக்கான பாதுகாப்பு கவசத்தால் முற்றிலும் பாதுகாக்கப்பட்டிருந்தது.

54 மணிநேர ஆய்வுக் காலத்தில் சிறுநீரகம் இளஞ்சிவப்பு நிறத்திலேயே இருந்தது என்று டாக்டர் மாண்ட்கோமெரி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் ஒரு முறை எடுக்கப்பட்ட பயாப்ஸி முடிவுகள், மனித இரத்தத்தை நிராகரித்தற்கான ஆதாரங்களையும் வெளியிடவில்லை, மனித உடல்களில் இருந்து தீங்கு விளைவிக்கும் ஆண்ட்டிபாடிகள் சிறுநீரகத்தை பாதிக்கவில்லை என்பதை உறுதி செய்தது.

ஒற்றை சர்க்கரை மூலக்கூறின் மரபணு மாற்றம் விரைவான நிராகரிப்பைத் தடுப்பதற்கு காரணமாகும் என்று அவர் கூறினார். மற்ற வகை நிராகரிப்புகளைத் தடுக்க குழு ஒரு சில FDA- அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சி ஏன் முக்கியமானது?

உடல் உறுப்புகள் செயலிழப்புகள் அதிகமாக ஏற்பட்டு வருகின்ற இந்த காலத்தில் ஒருவர் வாழ ஒருவர் சாக வேண்டும் என்ற பழமொழி பொருந்திப்போவதில்லை. உறுப்புகளின் தேவை விநியோகத்தை விட அதிக அளவில் தான் இருக்கிறது. மனித உறுப்புகள் உறுப்பு விநியோகத்தின் புதைபடிவ எரிபொருளாக கற்பனை செய்யப்பட்டால், பன்றி உறுப்புகள் காற்று மற்றும் சூரிய சக்தி போன்றவை. நிலையானது மற்றும் வரம்புகள் அற்றது என்று டாக்டர் மாண்ட்கோமரி தெரிவித்தார்.

நீண்ட காலத்திற்கு பொருந்தக்கூடிய தன்மையை முழுமையாக புரிந்து கொள்ள நீண்ட காலத்திற்கு அதிக ஆய்வுகள் தேவை என்று அவர் மேலும் கூறினார். ஆனால் ஓரிரு வருடங்களுக்குள் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்படுவதை நாம் காண முடியும். இன்னும் 10 ஆண்டுகளில் இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை பன்றிகளிடம் இருந்து மாற்றுவதற்கு தயாராகி விடுவோம் என்று அவர் மேலும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How surgeons gave pig kidney to a human

Next Story
எதை நோக்கி நகர்கிறது தானியங்கி கார்கள் தொழில்நுட்பம் ?Driverless Self Driving Cars Automobile Technology
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com