தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கடந்தாண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதா திருப்பி அனுப்பபட்ட நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், ஆளுநர் இரண்டாவது முறையாக அனுப்பபட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அன்றைய தினமே அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த மசோதா குறித்து தமிழகம் மற்றும் மத்திய அரசு சட்டம் கூறுவது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழகத்தின் சட்டம் என்ன?
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணம் அல்லது பிற பங்குகளுக்காக விளையாடப்படும் வாய்ப்புக்கான ஆன்லைன் கேம்களை இந்த தடை மசோதா செய்கிறது. இது ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுகளை குறிக்கிறது. இது வாய்ப்பு மற்றும் திறமை ஆகிய இரண்டும் உள்ளடங்கிய ஆன்லைன் கேம்களாக வரையறுக்கிறது. எவ்வகையான சூதாட்டமாக இருந்தாலும் அதை தடை செய்யப்படுவதாக மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தின் முன்மொழியப்பட்ட கேமிங் அதிகாரம் வாய்ப்புள்ள விளையாட்டுகளைக் கண்டறிந்து, தடைசெய்யப்பட்ட கேம்களின் அட்டவணையில் சேர்க்க பரிந்துரைக்கும்.
ஆன்லைன் கேமிங்: மத்திய அரசு vs தமிழ்நாடு
கடந்த திங்கட்கிழமை அன்று ஆளுநருக்கு எதிராக மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், அன்றயை தினமே ஆளுநர் ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார். தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ல் கீழ் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
"ஆன்லைன் கேமிங்கிற்கான ஐடி விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை" என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ரவியின் ஒப்புதலைப் பற்றி கேட்டபோது கூறினார்.
திருத்தப்பட்ட ஐடி விதிகள் அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு MeitY உடனான சந்திப்பில், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், மத்திய அரசின் விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராகச் செல்லக்கூடிய போட்டிச் சட்டங்களை மாநில அரசுகள் இயற்றுவது குறித்து கவலைகளை எழுப்பின. சூதாட்டம் ஒரு மாநிலச் சட்டமாக இருக்கும்போது, இணையத்தில் நிகழும் செயல்பாடுகள் - ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங் உட்பட - ஒழுங்குபடுத்துவதற்காக அதன் களத்தில் பிரத்தியேகமாக விழும் என்று MeitY நம்புகிறது.
தமிழ்நாட்டின் மசோதாவுக்கு கேமிங் நிறுவனங்கள் என்ன கூறுகின்றன?
ஆன்லைன் கேமிங் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் சங்கங்கள், ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு வருத்தம்
தெரிவித்தன. அரசாணையின் விதிகளை மாநில அரசு அறிவிக்கும் போது அவர்கள் அதை நீதிமன்றத்தில் முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய கேமிங் ஃபெடரேஷன் (AIGF) தலைவர் ரோலண்ட் லேண்டர்ஸ், இந்த மசோதா "அரசியலமைப்புக்கு எதிரானது" என்றும், சங்கம் இதற்கு எதிராக வழக்குத் தொடரும் என்றும் கூறினார்.
சட்டம் அமலுக்கு வந்தவுடன் நாங்கள் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடுவோம். நீதித்துறை கேமிங் தளங்கள் மற்றும் அவற்றின் பயனர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்தும் என்று முழுமையாக நம்புகிறோம் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.