Advertisment

2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் எப்படி நடந்தது? அதன் பிறகு என்ன நடந்தது?

தாக்குதலின் 22-வது ஆண்டு நினைவு நாளில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள் இந்திய ஜனநாயகத்தின் கோட்டை மீது எவ்வாறு தாக்குதல் நடத்தின என்பதை இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Parlia attack.jpg

2001-ம் ஆண்டு இதே நாள் (டிச.13) நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்த நிலையில், இன்று (டிச.13, 2023) நாடாளுமன்றத்திற்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசிய சம்பவம் நாடு முழுவதும் 

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2001-ம் ஆண்டு தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இது போன்ற சம்பவம் இன்றும் அரங்கேறி உள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

Advertisment

நாம் இங்கு 2001-ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்துப் பார்ப்போம். 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (டிசம்பர் 13) அஞ்சலி செலுத்தினார்.

இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். இது நாட்டின், இந்திய ஜனநாயகத்தின் கோட்டை மீது நடத்தப்பட்ட தாக்குதல்.  

தாக்குதல் நடந்தது எப்படி? 

டிசம்பர் 13, 2001 அன்று காலை 11:40 மணியளவில் 5 பயங்கரவாதிகள்  உள்துறை அமைச்சகம் என போலியாக எழுத்தப்பட்ட ஸ்டிக்கர் மற்றும் மேலே சிவப்பு விளக்கு இருக்கக் கூடிய காரில், அம்பாசிடர் காரில் நாடாளுமன்ற  வளாகத்தில் நுழைந்தனர்.

கார் பில்டிங் கேட் எண் 12-ஐ நோக்கி சென்றபோது, ​​பார்லிமென்ட் ஹவுஸ் வாட்ச் மற்றும் வார்டு ஊழியர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. காரை திரும்ப வரும்படி கட்டாயப்படுத்தினார். ஆனால் அந்த கார் அப்போதைய துணை ஜனாதிபதி கிரிஷன் காந்தின் வாகனத்தின் மீது மோதியது. உடனடியாக பயங்கரவாதிகள் காரில் இருந்து வெளியே வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த நேரத்தில், அலாரம் அடித்தது. கட்டிடத்தின் அனைத்து கதவுகளும் உடனடியாக மூடப்பட்டன. 30 நிமிடங்களுக்கும் மேலாக துப்பாக்கிச் சூடு நடந்தது. 8 பாதுகாப்புப் படையினர் மற்றும் ஒரு தோட்டக்காரருடன் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.  அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் காயமின்றி தப்பினர். 

பாகிஸ்தான் குற்றம் சாட்டப்பட வேண்டும்

"நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதான பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மற்றும் ஆதரிக்கும் பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை கூட்டாகச் செயல்படுத்தியது இப்போது தெளிவாகிறது" என்று அன்றைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி மக்களவையில் தெரிவித்தார். 

மேலும் பாகிஸ்தான் அரசின் தலையீட்டை சுட்டிக்காட்டி அத்வானி மேலும் கூறுகையில்,  “இந்த இரண்டு அமைப்புகளும் பாக் ஐ.எஸ்.ஐயிடம் இருந்து ஆதரவு பெற்றுள்ளன. இதுவரை போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலைப்படையை உருவாக்கிய 5 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது இந்திய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர் என்று கூறினார். 

"கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தியாவில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தின் சுமார் இரண்டு தசாப்த கால வரலாற்றில் மிகவும் துணிச்சலான மற்றும் மிகவும் ஆபத்தான பயங்கரவாதச் செயலாகும்" என்று அவர் கூறினார்.

அப்சல் குரு மற்றும் பலர் சதியில் குற்றம் சாட்டப்பட்டனர்

இச்சம்பவம் குறித்து டிசம்பர் 13ம் தேதி போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். சில நாட்களில்,  சில நாட்களில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு 4 நபர்களை கைது செய்தது, அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் செல்போன் பதிவுகள் தொடர்பான லீட்களின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டனர்.

1994-ல் சரணடைந்த முன்னாள் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) தீவிரவாதி முகமது அப்சல் குரு, அவரது உறவினர் ஷௌகத் ஹுசைன் குரு, ஷௌகத்தின் மனைவி அப்சன் குரு மற்றும் டெல்லி பல்கலைக்கழக அரபு மொழி விரிவுரையாளர் எஸ்.ஏ.ஆர்.ஜீலானி. 

விசாரணை நீதிமன்றம் இறுதியில் அப்சானை விடுவித்தது, ஆனால் ஜீலானி, ஷௌகத் மற்றும் அப்சல் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. 2003 இல், ஜீலானியும் மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டார், 2005 இல், உச்ச நீதிமன்றம் ஷௌகத்தின் தண்டனையை 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையாகக் குறைத்தது. 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/explained/2001-parliament-attack-9066363/

இருப்பினும், 2005 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனையை உறுதி செய்ததன் மூலம் அப்சல் குருவுக்கு நீதிமன்றங்களில் இருந்து எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. செப்டம்பர் 26, 2006 அன்று, அப்சல் குருவை தூக்கிலிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அவரது மனைவி தபசும் குரு தாக்கல் செய்த கருணை மனுவை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்த 6 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 9, 2013 அன்று அவர் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். சிறை வளாகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Parliamanet Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment