உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்தாண்டு ஏப்ரல் 24-ம்தேதி பதவி ஏற்றார். தலைமை நீதிபதியாக 16 மாதங்கள் பணியாற்றிய ரமணா ஓய்வு பெற்றுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி. ரமணா வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு வெள்ளிக்கிழமை மாலையில் பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பேசிய நீதிபதி யு.யு. லலித்,"சட்டத்தை தெளிவானதாக்குவதே உச்ச நீதிமன்றத்தின் தலையாய பணி. அதை இயன்ற வழியில் சாத்தியமாக்க வேண்டுமானால், அதற்கு பெரிய அமர்வுகள் எப்போதும் இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதன் மூலம் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு பெற முடியும்," என்று கூறினார்.
"எனவே, எப்போதும் ஓர் அரசியலமைப்பு அமர்வு ஆண்டு முழுவதும் செயல்படுவதற்கு நாம் கடினமாக முயற்சி செய்வோம்," என்று அவர் தெரிவித்தார். வழக்குகளின் பட்டியலை முடிந்தவரை எளிமையாக்குவதாகவும் அவசரமான விஷயங்களைக் குறிப்பிடுவதற்கு ஒரு துல்லிய நிர்வாக முறையை நிறுவ முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
இவர்தான் 49வது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கபட உள்ளார். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 8ம் தேதி இவர் ஓய்வு பெற இருப்பதால், மூன்று மாதங்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்படுவார். உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது தலைமை நீதிபதி இவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
இந்திய குடிமகான இருக்க வேண்டும் என்பததோடு, உயர்நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் 10 வருடங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிருக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 2 ஆர்டிகல் 124 படி இந்திய ஜனாதிபதிதான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர். இந்தே ஆர்டிகல் 124 குறிப்பிடப்பட்டுள்ளதுபடி, உச்சநீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் ஆலோசனையோடு தலைமை நீதிபதியை அவர் தேர்வு செய்யலாம்.
இதுபோல ஆர்டிகல் 217-யின் படி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளை, ஆளுநர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் ஆலோசனையோடு ஜனாதிபதி நியமிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் 65 வயதில் பணி ஓய்பு பெறுவார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதில் பணி ஓய்வு பெறுகிறார்.
கொலிஞ்சியம் பரிந்துரையின் பெயரில் கடந்த 20 வருடங்களாக நீதிபதிகள் தேர்வு நடைபெறுகிறது. அனுபவத்தில் மூத்த உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் இதில் இருக்கின்றனர். இந்த கொலிஞ்சியம் என்ற வார்த்தை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. இவர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவார்கள்.
கொலிஞ்சியம் முறையில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்
2009ம் ஆண்டு இந்திய சட்ட ஆணையத்தின் 230வது அறிக்கையில், நீதிபதிகள் நியமனத்தில் நெப்போடிசம் இருக்கிறது. என்றும் தெரிந்தவர்கள், உறவினர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு மாற்றாக தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அமைத்து, அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நிதிபதிகள் இரண்டு பேர், சட்ட அமைச்சர், பிரதமர் மற்றும் மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் ஆகியயோர் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்பட்டது. ஆனால் இது 2015ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டது. இதற்கான முழு சட்ட வரையறை உருவாக்க பட வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பணி நீக்கம் செய்ய, நாடாளுமன்றத்தின் இரு அவகைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் ஜனாதிபதியின் ஆணை பிறபிக்கப்பட வேண்டும்.