டெல்லி வாசலில் தங்களது மாபெரும் போராட்டத்தை கைவிட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, விவசாயிகள் மீண்டும் தலைநகர் பாதையில் இறங்கி உள்ளனர். திங்கள்கிழமை (பிப்ரவரி 12) மாலை இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக மூன்று மத்திய அமைச்சர்கள் சண்டிகரில் விவசாய சங்கங்களை சந்தித்தனர்.
செவ்வாய்கிழமை பஞ்சாப்-ஹரியானா (ஷம்பு) எல்லையில், விவசாயிகளை தடுக்க வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்ட முயன்றனர், அதைத் தொடர்ந்து ஹரியானா போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 'டில்லி சலோ' அணிவகுப்பு தொடங்கியவுடன் ஹரியானா காவல்துறையினரால் பல விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர் மற்றும் அவர்களது வாகனங்கள் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டன.
திங்கள்கிழமை இரவு விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோருக்கு இடையேயான இரண்டாவது சுற்று முக்கியமான சந்திப்பில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தில்லியை நோக்கிப் பேரணியைத் தொடர விவசாயிகள் முடிவு செய்தனர்.
அதன் கோரிக்கைகள் மற்றும் தலைமை ஆகிய இரண்டிலும், 2020-21 ஆண்டுகால போராட்டத்திலிருந்து 2024 இன் எதிர்ப்பு மிகவும் வேறுபட்டது. அப்போது விவசாயிகள் தங்கள் முக்கிய இலக்கான வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். அதில் வெற்றியும் கண்டனர்.
தற்போது விவசாயிகள் போராட்டம் ஏன்?
சுமார் 100 தொழிற் சங்கங்களின் விசுவாசத்தைக் கொண்டிருப்பதாகக் கூறும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா (கே.எம்.எம்) பதாகையின் கீழ் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களும், மேலும் 150 தொழிற்சங்கங்களின் தளமான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றவை) பஞ்சாபில் இருந்து போராட்டத்தை ஒருங்கிணைக்க அழைப்பு விடுத்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவூட்டுவதற்காக 2023 டிசம்பரின் இறுதியில் இரு சங்கங்களும் “டெல்லி சலோ” க்கு அழைப்பு விடுத்தன.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, டிராக்டர் தள்ளுவண்டிகள் நகர்கின்றன, மேலும் போராட்டக்காரர்களை முறியடிக்க தடுப்புகள், ஆணிகள் மற்றும் கனரக உபகரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு திறந்திருப்பதாகக் கூறியது மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து "திறந்த மனதுடன்" உள்ளோம் என்றும் கூறியது.
2020-21 தலைவர்கள் இப்போதும் மீண்டும் உள்ளார்களா?
இல்லை. சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) என்பது ஜூலை 2022-ல் அசல் சம்யுக்த கிசான் மோர்ச்சாவிலிருந்து (SKM) பிரிந்த ஒரு பிரிவு ஆகும். இதன் ஒருங்கிணைப்பாளர் பஞ்சாப்பை தளமாகக் கொண்ட பாரதிய கிசான் யூனியன் (BKU) சித்துபூர் பண்ணையின் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் ஆவார். தொழிற்சங்கம், முக்கிய அமைப்பின் தலைமையுடன் கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து SKM இலிருந்து பிரிந்தது.
தற்போதைய எதிர்ப்பில் உள்ள மற்ற அமைப்பான கே.எம்.எம், பஞ்சாபை தளமாகக் கொண்ட யூனியன் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் (கேஎம்எஸ்சி) கன்வீனரான சர்வான் சிங் பந்தரால் உருவாக்கப்பட்டது. 2020-21ல் வேளாண் சட்டங்களுக்கு எதிரான முக்கிய போராட்டத்தில் KMSC சேரவில்லை, அதற்கு பதிலாக டெல்லி எல்லையான குண்ட்லியில் ஒரு தனி மேடையை அமைத்தது.
எதிர்ப்புகள் முடிவடைந்த பிறகு, KMSC அதன் தளத்தை விரிவுபடுத்தத் தொடங்கியது - ஜனவரி இறுதியில், இந்தியா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய KMM உருவாக்கத்தை அறிவித்தது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2020-21 போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்தியாவின் 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் முதன்மை அமைப்பான SKM, நடந்து வரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. பஞ்சாபில், பெரிய, BKU உக்ரஹான் உட்பட, 37 பண்ணை சங்கங்கள் SKM இன் பகுதியாக உள்ளன.
பிப்ரவரி 16ம் தேதி கிராமீன் பாரத் பந்த் நடத்த எஸ்கேஎம் தனது சொந்த அழைப்பை விடுத்துள்ளது. டெல்லி சலோ போராட்டத்தில் எஸ்கேஎம் பங்கேற்காத நிலையில், திங்கள்கிழமை மாலை மோர்ச்சா ஒரு அறிக்கையை வெளியிட்டது. BKU உக்ரஹானும் அணிவகுப்பை நிறுத்த ஹரியானா அரசின் நடவடிக்கையை விமர்சித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?
விவசாயிகளின் 12 அம்ச கோரிக்கையில் முக்கியமாக உள்ளது, 1. அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உத்தரவாதப்படுத்தும் சட்டம் மற்றும் 2. டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன்அறிக்கையின்படி பயிர் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதாகும்.
மற்ற கோரிக்கைகள்
1. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் முழு கடன் தள்ளுபடி;
2. 2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கையகப்படுத்துவதற்கு முன் விவசாயிகளிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் மற்றும் கலெக்டர் விகிதத்தை விட நான்கு மடங்கு இழப்பீடு வழங்குதல்;
3.அக்டோபர் 2021 லக்கிம்பூர் கெரி கொலைகளின் குற்றவாளிகளுக்கு தண்டனை;
4. உலக வர்த்தக அமைப்பில் (WTO) இருந்து இந்தியா விலக வேண்டும் மற்றும் அனைத்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் முடக்க வேண்டும்;
5. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்;
6,. டெல்லி போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.
7.. மின்சாரத் திருத்த மசோதா 2020-ஐ ரத்து செய்யப்பட வேண்டும்;
8. MGNREGA இன் கீழ் ஆண்டுக்கு 200 (100-க்கு பதிலாக) நாட்கள் வேலை, தினசரி ஊதியம் ரூ 700, மற்றும் திட்டம் விவசாயத்துடன் இணைக்கப்பட வேண்டும்;
9. போலி விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் மற்றும் விதை தரத்தை மேம்படுத்த வேண்டும்.
10. மிளகாய் மற்றும் மஞ்சள் போன்ற மசாலாப் பொருட்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட வேவேண்டம்,
11. நீர், காடுகள் மற்றும் நிலத்தின் மீது பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதி செய்தல் வேண்டும்.
விவசாயிகள் கோரிக்கை: அரசு கூறுவது என்ன?
KMM மற்றும் SKM (அரசியல் சாராத) பிப்ரவரி 6 அன்று விவசாயம் மற்றும் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகங்களுக்கு தங்கள் கோரிக்கைகளை மின்னஞ்சல் செய்தன. பிப்ரவரி 8 அன்று, விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் சண்டிகரில் விவசாயிகள் பிரதிநிதிகளின் 10 உறுப்பினர்களை சந்தித்தனர். கூட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஒருங்கிணைத்தார்.
26 விவசாயத் தலைவர்கள் அடங்கிய குழு மூன்று அமைச்சர்களை சந்தித்த இரண்டாவது கூட்டத்தில் (திங்கட்கிழமை) மான் பங்கேற்கவில்லை. விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜகவும், சிரோமணி அகாலி தளமும் இதுவரை மவுனம் காத்து வருகின்றன.
விவசாயிகளும் அமைச்சர்களும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, ஹரியானா அரசு பிப்ரவரி 8 அன்று பஞ்சாப் உடனான தனது எல்லைகளை சீல் வைக்கத் தொடங்கியது. திங்கள் மாலை வரை, டெல்லிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 1 இல் உள்ள ஷம்பு தடுப்பில் 12 அடுக்குகள் கொண்ட ஒரு பெரிய தடுப்பு அமைக்கப்பட்டது. ஃபதேஹாபாத், கானௌரி, டப்வாலி போன்ற இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. பல மாவட்டங்களில் இணையம் முடக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் பிப்ரவரி 11 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவுடனான அதன் எல்லைகளை சீல் வைத்தது மற்றும் ஸ்ரீ கங்காநகர் மற்றும் ஹனுமன்கர் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. 2020 ஆண்டு போராட்டத்தை விட தற்போது போராட்டத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.