எழுத்தாளர் சுமன் பால்
நாட்டின் முதல் எலக்ட்ரானிக் டபுள் டெக்கர் பேருந்துகள் மும்பையில் வியாழக்கிழமை பிரஹான்மும்பை எலக்ட்ரானிக் சப்ளை மற்றும் டிரான்ஸ்போர்ட் (BEST) நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆங்கிலேயர்கள் காலத்தில் லண்டன் நகரில் ஓடும் டபுள் டெக்கர் பேருந்துகள் போல் சிவப்பு வண்ணத்தில் பேருந்துகள் இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. மும்பை தவிர அகமதாபாத், கொல்கத்தா மற்றும் வதோதரா ஆகிய நகரங்களிலும் இந்தப் பேருந்துகள் காணப்பட்டன. காலப்போக்கில் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இது எவ்வாறு என்பது பார்ப்போம்.
கொல்கத்தா டபுள் டெக்கர் பேருந்துகள்
கொல்கத்தாவில் டபுள் டெக்கர் பேருந்துகள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு கொண்டவை. இந்தப் பேருந்துகள் முதன் முறையாக 1922இல் கொல்கத்தாவில் வால்ஃபோர்ட் மற்றும் கல்கத்தா டிராம்வேஸ் ஆகிய நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்டன
1926இல் ஓடிய டபுள் டெக்கர் பேருந்தில் 56 பயணிகள் வரை அனுமதிக்கப்பட்டனர். இந்தப் பேருந்தின் எண் எம்.பி.42 ஆகும். இது குறித்த தகவல்களை வரலாற்று ஆய்வாளர் சித்தார்த்த கோஷ் தனது கோலர் ஷோஹோர் கொல்கத்தா (1959) (Koler Shohor Kolkata) என்ற நூலில் கூறுகின்றார்.
வால்ஃபோர்ட் & கம்பெனி கொல்கத்தாவின் முதல் டபுள் டெக்கர் பேருந்தை லண்டனின் டபுள் டெக்கர் பஸ்ஸைப் பின்பற்றி உருவாக்கியது. இது பேருந்தை நன்கு காற்றோட்டமாக வைத்திருக்க பெரிய டிராப் ஷட்டர் ஜன்னல்களைக் கொண்டிருந்தன. மேலும், கொல்கத்தாவின் வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பயணிகளுக்கு வசதியாக இருக்க பேருந்தின் முழு அமைப்பும் மரத்தால் செய்யப்பட்டது.
டபுள் டெக்கர் பேருந்தின் வெளிப்புறம் உலோகத் தகடுகளால் சுற்றப்பட்டிருந்தன.
முதலில், இரட்டை அடுக்கு பேருந்துகள் முதல் தளத்தை மூடுவதற்கு கூரை இல்லை. படிப்படியாக இந்த பேருந்தின் தோற்றம் மாற்றப்பட்டு, பேருந்தின் உயரம் மற்றும் படிக்கட்டுகளின் அமைப்பு மாற்றப்பட்டது.
இரண்டு தளங்களுக்கு இடையே கூடுதல் தளம் கொண்ட ‘டிரெய்லர் பஸ்கள்’ என்று அழைக்கப்படும் ஒரு புதுமை கொல்கத்தாவின் தெருக்களில் பயணிக்கத் தொடங்கின.
1990 களில் இடதுசாரி அரசாங்கம், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி, 2005 இல் நகரத்திலிருந்து முற்றிலும் அகற்றப்படும் வரை, இரட்டை அடுக்கு பேருந்துகளை படிப்படியாக நிறுத்த முடிவு செய்தது.
இதற்கிடையில், அதே ஆண்டு லண்டன் சென்ற அரசுப் போக்குவரத்துச் செயலர், லண்டன் சாலைகளில் ஓடும் டபுள் டெக்கர் பேருந்துகளால் கவரப்பட்டார். தொடர்ந்து மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில போக்குவரத்துக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் இரண்டு 51 இருக்கைகள் கொண்ட இரட்டை அடுக்கு BS-4 வகை பேருந்துகளை நவன்னாவில் இருந்து தொடங்கி வைத்தார்.
2021 ஆம் ஆண்டில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது, இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகள் பார்க் ஸ்ட்ரீட்டில் பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டன.
வதோதரா மற்றும் அகமதாபாத்தில் இரட்டை அடுக்கு பேருந்துகள்
அகமதாபாத் மற்றும் வதோதரா நகரங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிவப்பு டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. வதோதராவில் உள்ள பேருந்துகள் டிரெய்லர் வகையைச் சேர்ந்தவை.
அங்கு ஓட்டுநர் அறையானது, குறுகிய நகரச் சாலைகளில் செல்ல உதவும் வகையில் இரட்டை அடுக்கு பயணிகள் வண்டியில் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. டபுள் டெக்கர் சேவை பழைய பரோடாவில் உள்ள நெரிசல் மிகுந்த மாண்ட்வி டெர்மினஸில் இருந்து தொடங்கப்பட்டது.
குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகம் (ஜிஎஸ்ஆர்டிசி) வதோதராவில் பேருந்து சேவையை இயக்கியது. 2012 ஆம் ஆண்டில், ஒரு தனியார் ஆபரேட்டர் வல்லபிபூர் போக்குவரத்து கூட்டுறவு சங்கம் (VTCOS) வதோதராவில் இரண்டு வழித்தடங்களில் ஒற்றை பாடி டபுள் டெக்கர் பேருந்து மூலம் சேவையை மீண்டும் தொடங்கியது.
22 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை அடுக்கு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் சேவையை நீடிக்க முடியவில்லை. இந்த பேருந்துகளில் ஒரே நேரத்தில் 78 பேர் பயணம் செய்யலாம்.
முனிசிபல் கார்ப்பரேஷனின் கீழ் உள்ள அகமதாபாத் முனிசிபல் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் (AMTS), அகமதாபாத்தில் டபுள் டெக்கர் சேவையை நடத்தியது, இது “30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டது” என்று AMTS அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“