How the RSS elects its top executive Tamil News : வருகிற சனிக்கிழமையன்று, ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த-நிர்வாகியான சார் -காரியவா (பொதுச் செயலாளர்), அகில பாரதிய பிரதினிதி சபையின் (ஏபிபிஎஸ்) கிட்டத்தட்ட 1,500 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் இந்த தேர்தல் வழக்கமாக நாக்பூரில் நடைபெறுகிறது. ஆனால், இந்த ஆண்டு ஒரு மாறுபாட்டைக் காணுகிறது. ஏபிபிஎஸ் பெங்களூரூ கூட்டத்தில் 600 ஏபிபிஎஸ் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். மீதமுள்ளவர்கள் அந்தந்த தலைமையகத்திலிருந்து வாக்களிப்பார்கள்.
ஏபிபிஎஸ் (The ABPS)
ஏபிபிஎஸ் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பு. அதன் 1,500 உறுப்பினர்களில் பெரும்பாலோர் செயலில் உள்ள சுயசேவாக்களின் அகில இந்தியப் பிரதிநிதிகள்.
வெளியே செல்லும் தலைவர் தனது வாரிசை நியமிப்பதால், சர்சங்க்சலக் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) பதவிக்கு எந்த தேர்தலும் இல்லை. அவர் விரும்பும் வரை அந்தப் பதவியில் இருக்கலாம். ஆனால், சர்-காரியாவா மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நாக்பூரில் ஏபிபிஎஸ்ஸால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மூன்று ஆண்டுகள்தான் அவருடைய பதவிக்காலம்.
மார்ச் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் மூன்று நாட்கள் ஏபிபிஎஸ் சந்திக்கிறது. வழக்கமாக மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அதன் கூட்டத்தை நிறைவு செய்யும். இந்த ஆண்டு, இது வெள்ளிக்கிழமை தொடங்கி இரண்டு நாட்களுக்கு மட்டுமே நடைபெறவுள்ளன.
வருடாந்திர கூட்டம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் கூட்டம் நாக்பூரில் நடைபெறுகிறது. அங்கு ஏபிபிஎஸ் சார்-கரியவாவைத் தேர்ந்தெடுக்கிறது. விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் இடம் மாற்றம் ஏற்படும். கடந்த ஆண்டின் வருடாந்திர கூட்டம் பெங்களூரில் திட்டமிடப்பட்டது. ஆனால் ,கோவிட் -19 பரவுதல் காரணத்தால் அது நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்குள் பல பிரதிநிதிகள் இடத்தை அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் செயல்முறை
இந்தத் தேர்தல் பொதுவாக மூன்று நாள் கூட்டத்தின் இரண்டாவது நாளில் இருக்கும். இது இந்த ஆண்டின் இரண்டு நாள் கூட்டத்தின் இரண்டாவது நாளில் இருக்கும். பொதுவாக, பதவியில் இருக்கும் சர்-கரியவா தனது பதவிக் காலத்தில் செய்யப்பட்ட பணிகள் குறித்து பிரதிநிதிகளுக்குத் தெரிவிப்பர் மேலும், அவரது பதவிக்காலம் முடிவடைந்ததிலிருந்து, ஒரு புதிய சார்-கரியவா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பார். பிறகு மூத்த செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார். மூத்த செயல்பாட்டாளர் புதிய சார்-கரியவாவுக்கு ஒரு பெயரை முன்மொழியவேண்டும். இந்த பெயர் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சார்-கரியவா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, புதிய சர்-கரியவா தனக்கான குழுவை அறிவிப்பார்.
சார் - கரியவா தேர்தலை நடத்துவதற்கான தற்போதைய முறை ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவசரக்காலத்தின் போது (1975-77) தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
பதவியில் இருப்பவர்கள் மற்றும் போட்டியாளர்கள்
RSS-ன் நிர்வாகத் தலைவர், நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் முழு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார். தற்போதைய சர-காரியவா, சுரேஷ் பயாஜி ஜோஷி, இந்த ஆண்டு தனது நான்காவது மூன்று ஆண்டுக் காலத்தை நிறைவு செய்கிறார். மறைந்த எச் வி ஷேஷாத்ரி மட்டுமே தொடர்ச்சியாக நான்கு முறைகள் (1987 முதல் 2000 வரை) சர்-கரியவாவாக இருந்தார்.
புதிய சார்-கரியவாவை தற்போதைய பிரதிநிதிகளிடமிருந்து அல்லது சா-சார்-கரியாவார்களிடமிருந்து தேர்வு செய்வது பொதுவான நடைமுறை. தத்தாத்ரேயா ஹோசபாலே, சுரேஷ் சோனி, டாக்டர் கிருஷ்ணா கோபால், மன்மோகன் வைத்யா, பி பகையா மற்றும் சி ஆர் முகுந்தா ஆகியோர் பயாஜி ஜோஷியின் சா-சார்-கரியாவாக்கள்.
சா-கரியவா, சா-சார்-கரியவாக்களிடமிருந்து வராதபோது விதிவிலக்குகள் உள்ளன. உதாரணமாக, ஜோஷி 2009-ல் சார்-கரியவாவாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில் பாரதிய சேவா பிரமுகர். சா-சார்-கரிவயா அல்ல. ஜோஷி மறுதேர்தலுக்குத் தகுதியானவர். ஆனால், அவருக்கு வயது 74. இந்த ஆண்டு யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அடுத்த பதவிக்காலத்தில் தொடர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"