Advertisment

சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்: நிஜமா, மோசடியா?

டிஆர்பிகளைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட குழு நாட்டின் மக்கள்தொகையின் பிரதிநிதியாக இருக்க வேண்டும்

author-image
WebDesk
Oct 09, 2020 14:04 IST
சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்: நிஜமா, மோசடியா?

 Krishn Kaushik 

Advertisment

How the TRP system works : மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் வியாழக்கிழமை அன்று, காவல்த் துறையினர் டிஆர்பி புள்ளிகளை கையாளுதல் தொடர்பான மோசடி குறித்து விசாரித்து வருவதாக கூறினார். பாட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்ஸில் இந்தியா ( Broadcast Audience Research Council (BARC) India) பயன்படுத்தும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் டி.ஆர்.பி புள்ளிகள் கையாளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பிஏஆர்சி அமைப்பு இந்தியாவில் இருக்கும் தொலைக்காட்சி பார்வையாளர்களை அளவிட பயன்படுகிறது.

டி.ஆர்.பி. என்றால் என்ன?

எளிமையாக கூற வேண்டும் என்றால், டி.ஆர்.பி. என்பது எவ்வளவு மக்கள், எந்த சமூக - நிதி பின்புலம் கொண்டவர்கள், எந்தெந்த சேனல்களை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறுவதாகும். அந்நேரம் ஒரு மணி நேரம், ஒரு நாள் அல்லது ஒரு வாரமாக கூட இருக்கலாம். சர்வதேச நிர்ணயத்தின் படி இந்தியா 1 நிமிடம் என்பதை பின்பற்றுகிறது. இந்த தரவுகள் ஒவ்வொரு வாரமும் பகிரப்படுகிறது.

இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையாளர்களின் அளவீடு மற்றும் மதிப்பீடுகள் பற்றிய ஒரு ஆலோசனைக் கட்டுரை 2018 ஆம் ஆண்டில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (TRAI) வெளியிடப்பட்டது.  பார்வையாளர்களின் அளவீட்டுத் தரவின் அடிப்படையில், தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மதிப்பீடுகள் ஒதுக்கப்படுகின்றன. தொலைக்காட்சி மதிப்பீடுகள் பார்வையாளர்களுக்காக தயாரிக்கப்படும் திட்டங்களை பாதிக்கின்றன. சிறந்த மதிப்பீடுகள் ஒரு நிகழ்ச்சியை ஊக்குவிக்கும், அதே நேரத்தில் மோசமான மதிப்பீடுகள் ஒரு டிவி நிகழ்ச்சியை ஊக்குவிக்காது. தவறான மதிப்பீடுகள் நிறைய டி.வி. நிகழ்ச்சிகளை உருவாக்க வழிவகுக்கும், அவை மிகவும் பிரபலமாக இருக்காது, அதே நேரத்தில் நல்ல நிகழ்ச்சிகள் பார்வையில் இருந்து விடுப்படலாம்.

கடந்த ஆண்டு இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையைப் பற்றிய ஒரு FICCI-EY அறிக்கையின் தொலைக்காட்சித் துறையின் அளவு கடந்த ஆண்டு ரூ .78,700 கோடியாக இருந்தது, டி.ஆர்.பி. தான் விளம்பரதாரர்களுக்கான பணம். அவர்கள் இதனை அடிப்படையாக கொண்டே எந்த சேனலில் விளம்பரம் தரலாம் என்பதை காஸ்ட் பெர் ரேட்டிங்க் பாய்ண்ட் அடிப்படையில் என்பதை முடிவு செய்வார்கள்.

பி.ஏ.ஆர்.சி. என்றால் என்ன?

விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து நடத்தும் அமைப்பாகும். இது இந்தியன் சொசைட்டி ஆஃப் அட்வெர்டைசர்ஸ், இந்தியன் பிராட்காஸ்டிங் ஃபவுண்டேசன் மற்றும் இந்திய விளம்பர முகவர் சங்கம் ( Advertising Agencies Association of India) ஆகியவற்றால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. 2010ம் ஆண்டே இது துவங்கப்பட்டிருப்பினும் கூட, தகவல் தொழில்நுப்டம் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கொள்கை வழிகாட்டுதல்களை தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு ஜனவரி 10, 2014ம் ஆண்டு அன்று வழங்கியது. இந்தியாவில் தொலைக்காட்சி மதிப்பீடுகளை மேற்கொள்ள இந்த வழிகாட்டுதலின் கீழ் ஜூலை 2015 இல் பார்க் பதிவு செய்தது.

டி.ஆர்.பி. எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

45,000 க்கும் மேற்பட்ட எம்பனேல் செய்யப்பட்ட வீடுகளில் “BAR-O-மீட்டர்களை” நிறுவியுள்ளது BARC. இந்த வீடுகள் புதிய நுகர்வோர் வகைப்பாடு அமைப்பு ( New Consumer Classification System (NCCS)) எனப்படும், பார்க்கால் 2015ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளபப்ட்ட New SEC-ன் கீழ் 12 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது பிரதான வருமானம் ஈட்டுபவரின் கல்வி மற்றும் மின்சார இணைப்பு முதல் கார் வரையிலான 11 பொருட்களின் ஓனர்ஷிப் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.

ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, வீட்டு உறுப்பினர்கள் தங்கள் பார்வையாளர் ஐடி பொத்தானை அழுத்துவதன் மூலம் தங்கள் இருப்பை உறுதி செய்கிறார்கள். வீட்டிலுள்ள அனைவருக்கும் தனித்தனி ஐடி உள்ளது. இதன் மூலம் எந்த சேனல் யாரால் பார்க்கப்பட்டது, எவ்வளவு நேரம் பார்க்கப்பட்டது மற்றும் அவர்களின் வயதின் அடிப்படையில் வியூவர்ஷிப் பழக்கங்கள், மற்றும் சமூக - பொருளாதார குழுக்கள் ஆகியவற்றை அறிந்திட முடியும். டிஆர்பிகளைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட குழு நாட்டின் மக்கள்தொகையின் பிரதிநிதியாக இருக்க வேண்டும், மேலும் இந்த முறை தொழில்துறைக்கு பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருக்க வேண்டும்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

டி.ஆர்.பி. தரவுகள் எப்படி மோசடி செய்யப்படுகிறது?

இந்த சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும் வீடுகளை ஒளிபரப்பாளர்கள் கண்டறிந்தால், அவர்களின் சேனல்களை பார்க்க கூறி லஞ்சம் தரலாம். அல்லது கேபிள் ஆப்பரேட்டர்களிடம் கூறி, டிவியை ஆன் செய்ததும் தங்களின் சேனல்கள் வருவது போன்று மாற்றுவதை உறுதி செய்யலாம். டி.ஆர்.பிக்கு மொத்த நாடும் என்ன பார்க்கிறது என்பது முக்கியமல்ல. இந்த 45 ஆயிரம் குடும்பங்கள் என்ன பார்க்கிறது என்பது தான் மொத்த நாட்டின் பிரதிபலிப்பாக உள்ளது. உண்மையான பார்வையாளர் தரவை அறிய ஒளிபரப்பாளர்கள் இந்த வீடுகளை குறிவைக்க முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

2018ம் ஆண்டு ட்ராய் வெளியிட்ட ஆலோசனைக் கட்டுரை ஒன்றில், குறிப்பிட்ட சட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தால், பேனலை சேதப்படுத்துதல் அல்லது ஊடுருவலில் ஈடுபட்ட முகவர்கள் மற்றும் சந்தேகப்படுபவர்களுக்கு அபராதம் விதிப்பதில் சிக்கல் உள்ளது. பி.ஏ.ஆர்.சி. பல்வேறு காவல்நிலையங்களில், ஏஜெண்ட்கள் மற்றும் சஸ்பெக்ட்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் முறையான சட்ட கட்டமைப்பு ஏதும் இல்லாததால், இது போன்ற ஊடுருவல் மற்றும் சேதப்படுத்துதல்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தடைபெறுகிறது என்று கூறியிருந்தது.

பேனல் டேம்பரிங் டிஆர்பிகளை எவ்வாறு பாதிக்கிறது?

"பேனல் அளவு சிறியதாக இருக்கும்போது பேனல் ஊடுருவல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது" மற்றும் "பேனல் அளவு அதிகரிப்பதன் மூலம், பேனல் வீடுகளின் ஊடுருவல் சவாலாகிறது" என்று TRAI குறிப்பிட்டுள்ளது. அசாதாரண பார்வையாளர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக பல்வேறு முறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், ஹன்சா ரிசர்ச் நிறுவனத்தின் அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யபப்ட்டது. பேனல்களில் இடம் பெற்றிருக்கும் வீடுகளுக்கு செல்வதற்காக பி.ஏ.ஆர்.சி அமைப்பு இந்நிறுவனத்தை நியமித்திருந்தது. பி.ஏ.ஆர்.சி. பல்வேறு நிறுவனங்களை இவ்வாறு பணியில் அமர்த்தும். எனவே ஒரு தனிப்பட்ட நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பி.ஏ.ஆர்.சி மேப்பினை வைத்திருப்பது கடினமாகிறது.

ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள், தேசிய பார்வையாளர்களின் பங்களிப்பில் வெறும் 1.5% மட்டுமே கொண்டுள்ளது. அதாவது 45 ஆயிரம் வீடுகளில் வெறும் 700 நபர்கள் மட்டுமே ஆங்கில செய்தி சேனல்களை பார்க்கின்றனர். அவர்களும் கூட தினமும் ஆங்கில செய்தி சேனல்களை பார்ப்பதில்லை. 350 வீடுகளில் மட்டுமே உண்மையாக ஆங்கில செய்தி சேனல்கள் பார்க்கப்படுகிறது. இது போன்ற சூழலில், அதிக பார்வை கொண்ட வீடுகளில் நீங்கள் 10 ஐ நிர்வகிக்க முடிந்தால், உங்களால் பெரிய அளவில் சாதிக்க இயலும். சாம்பிள் மிகவும் சிறியதாக இருக்கும் போது, கையாளுதல் மிகவும் எளிமையாகிறது. ஆங்கில செய்திகள் போன்ற சில பிரிவுகளில், சில வீடுகளுக்கு அதிக அளவு முக்கியத்துவம் இருக்கும். ஒரு குடும்பத்தின் பார்வையாளர் செயல்பாடுகள் மாறுவது என்பது தேசம் முழுவதும் ஏற்படும் மாற்றம் பெரியதாக இருக்கும்.

கூடுதலாக, ஒவ்வொரு சேனலும் ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஒரு சந்தைத் தலைவராக தன்னைத் திட்டமிட முயற்சிக்கும்போது, சரியான தரவுகளை பெற, என்.சி.சி.எஸ், வயது, பாலினம், நேர இடங்கள் (பிரைம் டைம்) போன்றவற்றின் அடிப்படையில் தரவை சமூக-பொருளாதார பிரிவில் தரவுகளை பிரிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

எத்தனை முறை குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது?

கடந்த 10 ஆண்டுகளில், துறைக்குள் இருந்தே பலமுறை கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது. பி.ஏ.ஆர்.சி. சேர்மனுக்கு ஜூலையில் எழுதிய கடிதம் ஒன்றில், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஜத் ஷர்மா, இந்தியா டிவி நியூஸ் சேனலை வைத்திருப்பவர், டி.வி.9 பாரத்வர்ஷ் சேனலின் ரேட்டிங்கிற்கு எதிராக புகார் ஒன்றை வைத்தார்.

பல செய்தி ஒளிபரப்பாளர்கள் பி.ஏ.ஆர்.சி. நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படும் மதிப்பீடுகள் தொலைக்காட்சியின் அடிப்படைகளுடன் தொடர்புடையது இல்லை என்று கூறியுள்ளனர். கையாளப்பட்ட தரவுகள் ஒவ்வொரு வாரமும் தீர்வுகள் ஏதுமின்றி வெளியாகிக் கொண்டே தான் இருக்கிறது. இந்த ஊழல் முறைகள் முழுமையாக பி.ஏ.ஆர்.சி. மற்றும் ஒளிபரப்பாளரின் ஒத்துழைப்புடன் தான் நிகழ்கிறது என்று ஷர்மா குற்றம் வைத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஐ.ஆர் & பி அமைச்சகம் தூர்தர்ஷனின் பார்வையாளர்களைக் குறைத்து மதிப்பிடுகிறது என்ற கவலையை எழுப்பியதுடன், அனைத்து செட்-டாப் பெட்டிகளிலும் சிப் அடிப்படையிலான செயல்பாட்டு பதிவுகள் பற்றிய யோசனையை முன்வைத்தது. இந்த யோசனை இறுதியாக நிராகரிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், முதல் ஐந்து ஆங்கில செய்தி சேனல்களில் ஒன்றின் ஆசிரியர், குஜராத்தைச் சேர்ந்த ஒரு சில வீடுகள் ஒரு போட்டி சேனலின் ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கு எவ்வாறு பெரிதும் பங்களிப்பு செய்கின்றன என்பதைப் பற்றி BARC க்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Trp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment