கழிவுநீர் சோதனை மூலம் கொரோனா வைரஸ் கண்டறியும் முயற்சி!

How the UK is testing sewage to detect the presence of covid 19 சமீபத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மாறுபட்ட வைரஸ் உள்ளிட்ட வகைகளின் பரவலை இங்கிலாந்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

How the UK is testing sewage to detect the presence of covid 19 Tamil News
How the UK is testing sewage to detect the presence of covid 19 Tamil News

How the UK is testing sewage to detect the presence of covid 19 Tamil News : கொரோனா வைரஸ் மற்றும் அதன் வளர்ந்து வரும் மாறுபாடுகளை இருப்பதைக் கண்டறிய இங்கிலாந்து அரசாங்கம் கழிவுநீரைப் பரிசோதிப்பதை விரிவுபடுத்துகிறது.

நாட்டின் சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின்படி, மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கும் வகையில் இந்த சோதனை இப்போது அதிகரித்துள்ளது. எக்ஸிடெரில் அமைந்துள்ள ஒரு புதிய ஆய்வகம், கழிவுநீரின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்கிறது. இது இப்போது உலகின் மிகப்பெரிய ஆய்வகங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

கழிவுநீரை ஏன் சோதிக்க வேண்டும்?

ஒரு வருடத்திற்கு முன், ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சியாளர்கள் கோவிட் -19-ன் சமூக பரவலைக் கண்காணிக்க, மூல கழிவுநீரில் வைரஸின் மரபணுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, ஆரம்ப எச்சரிக்கை கண்காணிப்பு முறையை உருவாக்கினர். இது சாத்தியமானதுதான். ஏனெனில் பாதிக்கப்பட்ட சில நபர்கள் தங்கள் மலத்திலோ அல்லது சிறுநீரிலோ வைரஸை வெளியேற்றலாம்.

ஒரு சமூகத்தில் நோய் பரவுவதற்கான அளவை அடையாளம் காண இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதிரிகளில் காணப்படும் வைரஸின் அளவைக் கண்டறிந்து அளவிடுவதன் மூலம், ஒரு பகுதியில் வைரஸ் எவ்வளவு பரவலாக உள்ளது என்பதற்கான அறிகுறியைக் காட்டும். பரவலான சோதனை சாத்தியமில்லாத பகுதிகளில் கூட, இந்த முறையைப் பின்பற்றுவது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் செயல்திறனை சுட்டிக்காட்டுகிறது.

உதாரணமாக, இங்கிலாந்தின் லூட்டன் போரோ கவுன்சிலில் கழிவு நீர் சோதனை பாதிக்கப்பட்டவர்களின் அதிகரிப்பு, சமூக பரவலின் விளைவாக இல்லை என்றும் ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது என்ற புரிதலுக்கும் வழிவகுத்தது.

குறிப்பாக, சமீபத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மாறுபட்ட வைரஸ் உள்ளிட்ட வகைகளின் பரவலை இங்கிலாந்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

நாடு முழுவதும் சுமார் 500 இடங்களிலிருந்து கழிவு நீர் மாதிரிகள் எடுக்கப்பட்ட பின்னர், அவை எக்ஸிடெர் சயின்ஸ் பூங்காவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகின்றன. இங்கே, விஞ்ஞானிகள் அவற்றில் உள்ள வைரஸின் அளவை அளவிட நீர் மாதிரிகளை சோதித்துப் பகுப்பாய்வு செய்கிறார்கள். மேலும், இந்த மாதிரிகள் சில மற்ற ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு அவை மாறுபாடுகளை அடையாளம் காண வரிசைப்படுத்தப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How the uk is testing sewage to detect the presence of covid 19 tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com