scorecardresearch

புதிய தொற்றுகளை எதிர்கொள்ள புதிய வழிமுறைகளை உருவாக்கும் உலக சுகாதார நிறுவனம் : சாத்தியங்களும், எதிர்ப்புகளும்

உலக சுகாதார நிறுவனம் கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் தொற்று நோய்களை கையாள்வது தொடர்பான புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது,

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம்  கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் தொற்று நோய்களை  கையாள்வது தொடர்பான புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது, இந்நிலையில் இந்த வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனத்தின்  194 உறுப்பினர் நாடுகள் செயல்படுத்த உள்ளனர். 2024ம் ஆண்டு மே மாதத்திற்குள் செயல்படுத்த உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரீசஸ், ஐ.நா சபையின் வருடாந்திர கூட்டத்தில் பேசுகையில் “ மீண்டும் ஒரு தொற்று ஏற்படும், இதனால் முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் செல்வோம். கொரோனா தொற்று கிட்டதட்ட 70 லட்சம் மக்களை கொன்றுள்ளது. கொரோனா-விற்கு பிறகு ஏற்படும் தொற்றை, கையாள்வது தொடர்பாக நாம் சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.  

பெரும்தொற்று கால ஒப்பந்தம் என்றால் என்ன?

உலக சுகாதார நிறுவனம், ஏற்கனவே சர்வதேச சுகாதார விதிமுறைகள் என்பதை வகுத்துள்ளது. இந்நிலையில் 2005ல், உறுப்பினர் நாடுகள், பொது சுகாதாரம் தொடர்பான நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

பொது சுகாதாரம் தொடர்பான அவசர நிலை ஏற்பட்டால், உலக சுகாதார நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மேலும் வியாபாரம் மற்றும் பயணங்கள் தொடர்பாக அறிவுறுத்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2002-2003 சார்ஸ் தொற்று பரவியபோது, இந்த வழிமுறைகள் உதவியாக இருந்தது. ஆனால் இந்த வழிமுறைகள், குறிப்பிட்ட நாடுகளுக்கு , சரி வரும் வழிமுறைகளாக இருந்ததால்,  கொரோனா தொற்றை கட்டுபடுத்த உலகம் முழுவதிற்கும் புதிய வழிமுறைகள் தேவைப்பட்டன.

இந்த புதிய ஒப்பந்தத்திற்கு இணையதளத்தில் விமர்சனங்ளும் எழுந்துள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தால், நாடுகள் தங்கள் உரிமைகளை, உலக சுகாதார நிறுவனத்திடம் கொடுக்கும் நிலை ஏற்படும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இதற்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய வழிமுறைகள் தொடர்பாக நாட்டின் அரசுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும், ஒப்பந்தத்தில் மாற்று கருத்து இருந்தால், நிராகரிக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை உலக நாடுகள் எப்படி பார்க்கிறது?

இந்த புதிய ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம்தான் முன்மொழிந்துள்ளது. இந்நிலையில் வளரும் நாடுகளில் ஒன்றான  ஆப்ரிக்கா, இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையின் மூலம் கூடுதல், தடுப்புசிகளை பெற முயற்சி செய்கிறது.

இதுவரை 5 கட்டங்களாக இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 208 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: How the world health organization could fight future pandemics