கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட சேமிப்பிடம் தேவைப்படுகிறது. அதேபோல் பிசிஆர் டெஸ்ட் என்சைம்கள் மற்றும் துணைப் பொருள்களையும் உறைய வைத்து பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
வணிக ரீதியிலான பி.சி.ஆர் சோதனைகள் உறைந்து உலரும் தன்மை கொண்டவை என்று நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவை உணர்திறன் மற்றும் துல்லியத்தை 30 நாட்களுக்கு 50°C வரை நிலையானதாக வைக்கின்றன என்றும் பல்கலைக்கழகம் தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த கண்டுபிடிப்புகள் பயோடெக்னாலஜி பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளன. பிசிஆர் டெஸ்ட் என்சைம் மற்றும் துணைப்பொருள்களை ஒரு நிலையான பாதுகாப்போடு உறையவைத்து உலர்ந்த பின்னர் அறைவெப்பநிலையில் சேமித்து வைக்கலாம்.
சோதனை தேவைப்படும்போது, சுகாதாரப் பணியாளர்கள் அதனுடன் தண்ணீர் சேர்த்து பயன்டுத்தலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய முறை பல சவால்களை எளிமையாக்க உதவும்.மேலும் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கும் வகையில் பரிசோதனைகளை அதிகரிக்க உதவும் என்றும் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil