Advertisment

யூடியூப் வீடியோக்களுக்கு லைக்... சில மணிநேர வேலைக்கு பணம்; ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ மோசடிகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

எளிமையான ஆன்லைன் வேலைகளுக்கு பணம் தருவதாகக் கூறும் செய்திகளை எப்போதாவது பெற்றுள்ளீர்களா? இது போன்ற மோசடிகள் சில பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. நீங்கள் அவற்றைத் தவிர்க்க இந்த கட்டுரை உதவும்.

author-image
WebDesk
New Update
phone explain

வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்குவதாக மோசடிக்காரர்கள் தங்கள் இலக்குகளை வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் போன்ற செயலிகளில் அடிக்கடி செய்தி அனுப்புவார்கள். (Via Pixabay)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எளிமையான ஆன்லைன் வேலைகளுக்கு பணம் தருவதாகக் கூறும் செய்திகளை எப்போதாவது பெற்றுள்ளீர்களா? இது போன்ற மோசடிகள் சில பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. நீங்கள் அவற்றைத் தவிர்க்க இந்த கட்டுரை உதவும்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Like YouTube videos, work a few hours for money: How to identify Work From Home scams

மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன்முயற்சியான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH) மற்றும் பகுதி நேர வேலை மோசடிகள் இந்தியாவில் மிகப்பெரிய சைபர் கிரைம் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் குமார், இந்த ஆண்டின் தொடக்கத்தில் I4C-ன் வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில்,  டிஜிட்டல் விளம்பரங்கள், ஆன்லைன் மெசஞ்சர் சேனல்கள் மற்றும் மொத்த எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி செய்பவர்கள் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, யூடியூப் வீடியோக்களை லைக் செய்ய வேண்டும் எனக் கூறி, ஒரு மோசடி கும்பலால், அரசு உயர் அதிகாரி ஒருவரை லட்சக்கணக்கில் ஏமாற்றப்பட்டார். புகாரளிக்கப்பட்ட பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. இதுபோன்ற அனைத்து மோசடிகளும் மக்களை கவர்ந்திழுக்க சில மணிநேர எளிதான வேலைக்கு பணம் தருவதாக உறுதியளிக்கின்றனர். அத்தகைய மோசடி சலுகைகளை அடையாளம் காண்பதற்கான சில குறிப்புகள் இங்கே தருகிறோம்.

வீட்டிலிருந்து வேலை மோசடி செய்திகளின் 5 பொதுவான அம்சங்கள்:

1. கவர்ச்சியான வார்த்தைகள்: இந்த செய்திகள் பொதுவாக வேலை வாய்ப்புகளை தேடும் நபர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கவனத்தை ஈர்க்கும் வகையில் தலைப்பு இருக்கும். உதாரணமாக: ‘வீட்டில் இருந்தே வேலை செய்து லட்சக் கணக்கில் சம்பாதியுங்கள்’ என்று இருக்கும்.

2. விரைவாக பணம் செலுத்துவதாக வாக்குறுதி: சில செய்திகள் எளிதான மற்றும் விரைவாக பணம் தருவதாக உறுதியளிக்கலாம். அதாவது நாளை அல்லது ஒரு வாரத்திற்குள் பணம் பெறுவதற்கு ஈடாக இன்று வேலை செய்ய வேண்டும் என்பன போன்ற செய்திகள் இருக்கும்.

டெல்லி போலீஸ் டி.சி.பி (வடக்கு) மனோஜ் குமார் மீனா, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ஒரு நபர்  ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ (வீட்டில் இருந்து வேலை செய்வது) வேலை வழங்குவதாக வாட்ஸ்அப் செய்தியைப் பெற்றதாகக் கூறப்பட்டது. “அவர் ஆர்வத்தை வெளிப்படுத்தியபோது, அவருக்கு சில யூடியூப் வீடியோக்கள் கிடைத்தன, அவற்றை விரும்பி கருத்து தெரிவிக்கும்படி கூறப்பட்டது. இந்த பணிகளை முடித்த அவர், சில நிமிடங்களில், 450 ரூபாயை தனது வங்கி கணக்கில் பெற்றார். மறுநாள், புகார்தாரரிடம் இதேபோன்ற பணியை செய்யுமாறு கேட்கப்பட்டது. இருப்பினும், இந்த முறை, அவர் 800 ரூபாய் டெபாசிட் செய்யும்படி கேட்கப்பட்டுள்ளார். அப்போதுதான், அவர் அதிக லாபம் வரும் வேலைகளைப் பெற முடியும் என்று கூறியுள்ளனர்.” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

அதன்படி, புகார்தாரர் பணத்தை டெபாசிட் செய்ததாகவும், மேலும் வீடியோக்களுக்கு லைக் மற்றும் கருத்து தெரிவித்த பிறகு, 10,400 ரூபாய் பெற்றதாகவும் டி.சி.பி மீனா கூறினார்.  “(இது) புகார்தாரரை ஏமாறச் செய்துள்ளது, அவர் இணைய மோசடி செய்பவர்களின் வலையில் விழுந்ததை உணர்ந்த நேரத்தில், அவர் ரூ 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை இழந்தார்” என்று அவர் கூறினார்.

3. தெளிவற்ற வேலை விவரங்கள்: இந்தச் செய்திகள் சரியான வேலை விவரங்கள் அல்லது வேலை விவரங்களைத் தருவதில்லை. இதுபற்றி நீங்கள் அவர்களிடம் கேட்டாலும், பயிற்சியின் போது உங்களுக்குத் தெரிவிப்பதாக “முதலாளிகள்” கூறுவார்கள்.

பெரும்பாலும், வேலை வாய்ப்புக்காக ஆர்வமாக இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் இத்தகைய மோசடியாளர்களால் குறிவைக்கப்படுகிறார்கள்.

4. தனிப்பட்ட தகவலுக்கான கோரிக்கைகள்: இத்தகைய மோசடிச் செய்திகள் வேறு பக்கத்திற்குத் திருப்பிவிடப்படும் இணைப்பைக் கொண்டிருக்கலாம். அங்கு நீங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்புமாறு கேட்கப்படுவீர்கள். மோசடி செய்பவர்கள், ஊதியத்தை சுமூகமாக மாற்றுவது போன்ற தவறான வாக்குறுதிகளின் கீழ், வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படும்.

5. அவசர அழைப்பு: ஆர்வமுள்ள விண்ணப்பதாரரை விரைவில் இணைக்கவும், வாய்ப்பைப் பயன்படுத்தவும் கேட்கும் தொடர்பு எண் செய்தியில் இருக்கும்.

‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ மோசடி வலையில் விழாமல் இருப்பது எப்படி?

1. பணம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்: வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் கேட்கும் செய்தியை எப்போதும் சரிபார்க்க வேண்டும். விண்ணப்பதாரரிடமிருந்து பணம் கேட்கும் சலுகைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. எச்சரிக்கையுடன் இருங்கள்: ஒரு முதலாளி உங்களைக் வேலைக்கு அழைத்துச் செல்ல அதிக ஆர்வத்துடன் இருப்பதாகத் தோன்றினால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். சில சமயங்களில் முதல் நேர்காணலுக்குப் பிறகு உங்களை வேலையில் சேருமாறு முதலாளி கேட்கலாம். மோசடிகள் பெரும்பாலும் பணியமர்த்தல் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன.

3. நம்பகத்தன்மையை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும்: நிறுவனத்தின் இணையதளம், அதன் சமூக ஊடக பக்கங்கள் மற்றும் அதன் "ஊழியர்களின்" லிங்க்ட்இன் சுயவிவரங்களையும் சரிபார்க்க வேண்டும். பெரும்பாலும் இந்த நிறுவனங்களுக்கு இணையதளம் இல்லை, வாய்ப்பு உண்மையில் ஒரு மோசடி என்றால், அந்த நிறுவனத்தின் சமூக ஊடக பக்கம் இருக்காது.

4. தொடர்பு எண்கள் மற்றும் முகவரியைச் சரிபார்க்க வேண்டும்: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்களை அழைத்து, யாராவது எடுக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். உங்களுடன் பேசும் நபரின் தொனியை கவனமாகக் கேளுங்கள். அலுவலக முகவரியையும் சரிபார்க்க வேண்டும். அலுவலகம் நீங்கள் இருக்கும் அதே நகரத்தில் இருப்பதாக குறிப்பிட்டால், அலுவலகத்திற்குச் சென்று அது இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்.

5. அது உண்மையாக இருந்து மிகவும் நன்றாக இருந்தால் சந்தேகம் கொள்ளுங்கள்: இறுதியாக, இதுபோன்ற செய்திகள் மற்றும் சலுகைகள் உண்மையாக இருக்க மிகவும் நன்றாகத் தோன்றினால் அவற்றை மேலும் தொடர்புகொள்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த வேலையும் இல்லாமல் அல்லது குறைவான வேலையும் இல்லாமல் பெரும் தொகையை வழங்க முதலாளி தயாராக இருந்தால் ஏதோ தூண்டில் போடுகிறார்கள் என்று அர்த்தம். வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளில் அப்படி செய்தி அனுப்புபவர்களைத் பிளாக் செய்து புகாரளிப்பது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

scam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment