Advertisment

பொதுத்துறை வங்கிகளின் இணைப்புகளை எவ்வாறு புரிந்துகொள்வது?

How to read the mergers of public sector banks: மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மெகா ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிவித்தது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக, பத்து பொதுத்துறை வங்கிகளை நான்கு பெரிய நிறுவனங்களாக இணைக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
public sector banks merger news, public sector banks merger, psb merger, public sector bank merger, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, psu banks merger, nirmala sitharaman, indian banks, indian economy news,

public sector banks merger news, public sector banks merger, psb merger, public sector bank merger, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, psu banks merger, nirmala sitharaman, indian banks, indian economy news,

How to read the mergers of public sector banks: மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மெகா ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிவித்தது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக, பத்து பொதுத்துறை வங்கிகளை நான்கு பெரிய நிறுவனங்களாக இணைத்துள்ளது. இணைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து இந்த வங்கிகளில் ரூ.55,250 கோடி ஈக்விட்டி உட்செலுத்துதல் நடவடிக்கை அவர்களின் கடன் புத்தகத்தை வளர்க்க உதவுகிறது. இந்த தொடர்ச்சியான இணைப்புகள் மூலம், அரசுக்கு சொந்தமான வங்கிகளின் எண்ணிக்கை 27-ல் இருந்து 12 ஆக குறைந்துள்ளது.

Advertisment

பொதுத்துறை வங்கி இணைப்பு என்றால் என்ன?

நான்கு புதிய செட் இணைப்புகள் உள்ளன - பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை ஒன்றிணைந்து நாட்டின் இரண்டாவது பெரிய கடன் வழங்குநராக அமைகின்றன.

கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஒன்றிணைகின்றன. ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கியை யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கையப்படுத்துகிறது. அதே போல, இந்தியன் வங்கி அலகாபாத் வங்கியுடன் இணைகிறது.

இந்த நான்கில் மிகப் பெரிய இணைப்பு ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி இணைப்புதான். இந்த வங்கிகள் ஒன்றிணைந்து ரூ.1795 லட்சம் கோடி வணிகமும் 11,437 கிளைகளும் கொண்ட இரண்டாவது பெரிய அரசுக்கு சொந்தமான வங்கியாக உருவாகியுள்ளது. இந்த மூன்று வங்கிகளும் ஃபினாகல் கோர் பேங்கிங் சொல்யூஷன் (சிபிஎஸ்) தளத்தை பயன்படுத்துவதால் தொழில்நுட்ப ரீதியாக இணக்கமாக உள்ளன.

கனடா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியை இணைப்பதன் மூலம் ரூ. 15.20 லட்சம் கோடி வணிகமும், 10,324 கிளைகளின் கிளை வலையமைப்பும் கொண்ட நான்காவது பெரிய பொதுத்துறை வங்கியை உருவாகும். கனரா வங்கிக்கு 6,500 கோடி ரூபாய் மூலதன உட்செலுத்துதல் கிடைக்கும். ஆந்திர வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைவது இந்தியாவின் ஐந்தாவது பெரிய பொதுத்துறை வங்கியை ரூ .54.59 லட்சம் கோடி வணிகத்தையும் 9,609 கிளைகளையும் உருவாக்கும். யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.11,700 கோடி மூலதன உட்செலுத்தலை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைப்பதன் மூலம் நாட்டின் தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் வலுவான கிளை வலையமைப்புகளுடன் ரூ.8.08 லட்சம் கோடி வணிகத்துடன் ஏழாவது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவாகும். இந்தியன் வங்கிக்கு ரூ.2,500 கோடி பங்கு உட்செலுத்துதல் கிடைக்கும்.

இணைப்பின் பின்னணியில் உள்ள வாதம்

அரசாங்கத்தின் கூற்றுப்படி, செயல்பாட்டு திறன், பங்குகளின் சிறந்த பயன்பாடு மற்றும் அவற்றின் தொழில்நுட்ப தளத்தின் அடிப்படையில் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நடவடிக்கை சில வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்திலிருந்து விலகியதைக் குறிக்கிறது அல்லது இந்தத் துறையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ள ஒரு மூலோபாய முதலீட்டாளர்களைக் கொண்டுவருகிறது. வங்கித் துறையின் அளவை அடைவதற்கும், ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு 5 டிரில்லியன் டாலர் பொருளாதார அளவை எட்டுவதற்கான இலக்கை ஆதரிப்பதற்கும் ஒருங்கிணைப்பதே “சிறந்த பாதை” என்று ஆலோசனைகளின் பின்னர் அரசாங்கம் முடிவு செய்தது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஒருங்கிணைப்புகள் செயல்பாடுகளை அர்த்தமுள்ள அளவில் அளவிட வங்கிகளுக்கு உதவும், ஆனால் அவற்றின் கடன் அளவீடுகளில் உடனடி முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முந்தைய வங்கி இணைப்புகள் எவ்வாறு இருந்தன?

கடந்த ஆண்டு, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியை பாங்க் ஆப் பரோடாவுடன் அரசாங்கம் இணைத்து, நாட்டில் கடன்களால் ஆன மூன்றாவது பெரிய வங்கியை உருவாக்கியது. ஒன்றிணைக்கப்பட்ட நிறுவனத்தின் லாபம் மற்றும் வணிகம் மேம்பட்டுள்ளதால் இந்த இணைப்பு “ஒரு நல்ல கற்றல் அனுபவம்” என்று அரசாங்கம் கூறியது. முன்னதாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது இணை வங்கிகளை வாங்கியது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, மகாராஷ்டிரா வங்கி மற்றும் பிராந்திய அளவில் கவனம் செலுத்தும் வலுவான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகியவை தனி நிறுவனங்களாக தொடரும்.

பொதுத்துறை வங்கிகளில் ஆளுமை சீர்திருத்தங்களையும் அரசாங்கம் வெளியிட்டது. அவற்றில் வாரியங்களுக்கு அதிக சுயாட்சி, சுயாதீன இயக்குநர்களின் ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான நெகிழ்வுத்தன்மை, வாரியங்களின் நிர்வாகக் குழுவில் இயக்குநர்களுக்கு நீண்ட காலத்தை வழங்குதல் உள்ளிட்டவை ஆகும். ஒருங்கிணைப்பிற்குப் பிறகு, வங்கிகள் சிறந்த திறமைகளை ஈர்ப்பதற்காக சந்தை-இணைக்கப்பட்ட இழப்பீட்டில் தலைமை இடர் அதிகாரியை நியமிக்கும். அதே நேரத்தில் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்கள் சுயாதீன இயக்குநர்களுக்கு ஒத்த பங்கை செய்வார்கள். இந்த திட்டங்கள் குறித்த விளக்கக்காட்சியில், பொதுத்துறை வங்கிகளின் லாபம் மேம்பட்டுள்ளதாகவும், மொத்த நிகரற்ற சொத்துக்கள் 2019 மார்ச் மாத இறுதியில் ரூ .7.9 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாகவும், 2018 டிசம்பர் இறுதியில் ரூ .8.65 லட்சம் கோடியாக இருந்தது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது இப்போது செயல்திறன் அளவீடுகளை மேம்படுத்த உதவுமா?

கடன் பத்திர முதலீட்டாளர்கள் சேவையின் நிதி நிறுவனங்களின் துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் வட்லமணியின் கூற்றுப்படி, பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகளின் ஒருங்கிணைப்பு கடன் நேர்மறையானது, ஏனெனில் இது ஒருங்கிணைந்த நிறுவனங்களுக்கு செயல்பாட்டின் அளவை அர்த்தமுள்ளதாக மேம்படுத்துவதற்கும் அவர்களின் போட்டி நிலைக்கு உதவுவதற்கும் உதவுகிறது. அதே நேரத்தில் , அவற்றின் கடன் அளவீடுகளில் உடனடி முன்னேற்றம் இருக்காது, ஏனெனில் அவை அனைத்தும் ஒப்பீட்டளவில் பலவீனமான கடன் சுயவிவரங்களைக் கொண்டுள்ளன. என்று ஆய்வாளர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இந்தியா மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி (ஃபிட்ச் குழுமம்) நிதி நிறுவனத் தலைவர் பிரகாஷ் அகர்வாலும் பார்வையை பிரதிபலித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல நடவடிக்கை என்று வங்கி ஒருங்கிணைப்பு பற்றி வலியுறுத்துகையில், அவர் கூறியதாவது:  “தற்போதைய இணைப்புகள் பாங்க் ஆஃப் பரோடா, தேனா மற்றும் விஜயாவுடன் கடைசியாக இருந்ததை விட அதிக உரசலை சந்திக்கக்கூடும். அந்த விவகாரத்தில் ஒரு பெரிய, நன்கு மூலதனம்கொண்ட வலுவான வங்கி இரண்டு சிறிய நிறுவனங்களை ஈர்த்துக்கொண்டது. தற்போதைய வழக்கில், இணைப்புகள் பெரும்பாலும் பெரிய வங்கிகளில் உள்ளன. வங்கியை உள்ளிழுத்துக்கொள்வது வலுவான ஆரோக்கியத்தில் அவசியமில்லை. இருப்பினும், இணைக்கப்பட்ட வங்கிகள் ஒத்த தொழில்நுட்ப தளத்தில் இருப்பதால், ஒருங்கிணைப்பு மென்மையாக இருக்க வேண்டும். மேலாண்மை கவனம் மற்றும் ஒன்றிணைக்கப்படும் நிறுவனங்களின் அலைவரிசை ஆகியவை கடன் வளர்ச்சியை பாதிப்பதோடு குறுகிய காலத்தில் சொத்து தரத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதைக் குறைக்கக்கூடும்” என்று கூறினார்.

Punjab National Bank State Bank Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment