உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் பாரதிய ஜனதா பாஸ்மாண்டா இஸ்லாமியர்களின் (Pasmanda Muslims) முதல் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (அக்.16) கூட்டியது.
இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக், “இஸ்லாமியர்களை மற்ற கட்சிகள் பிரியாணியில் போடும் பட்டை, இலை போல் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுகின்றன. ஆனால் நரேந்திர மோடி அரசு அப்படி இருக்காது” என்றார்.
பாஸ்மாண்டா இஸ்லாமியர்கள் என்றால் யார்?
பாஸ்மாண்டா என்பது பாரசீக வார்த்தை ஆகும். ஒதுக்கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை குறிக்க இந்த வார்த்தை பயன்படுகிறது. இது ஒரு சாதி அடையாளம் ஆகும்.
இது குறித்து, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் பள்ளியின் சமூகவியல் இணைப் பேராசிரியர் காலித் அனிஸ் அன்சாரி, "அலி அன்வர் அன்சாரி என்பவர் 1998 ஆம் ஆண்டில் பாஸ்மாண்டா முஸ்லீம் அமைப்பை நிறுவியபோது பாஸ்மாண்டா முஸ்லிம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார் என்று
தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்..
அகில இந்திய பாஸ்மாண்டா மகஸ் அமைப்பின் நிறுவனத் தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான அலி அன்வர் அன்சாரியின் கூற்றுப்படி, ”பாஸ்மாண்டாக்கள் தற்போது பட்டியலின மக்கள் ஆவார்கள்.
ஆனால் அனைத்து பாஸ்மாண்டாக்களும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் அல்ல. சிலர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் வருகின்றனர். பட்டியலின இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்றார்.
இஸ்லாம் சாதிக்கு அப்பாற்பட்ட மதமாக இருக்க வேண்டாமா?
சாதி என்பது சமூகத்தின் இன்றியமையாததாகும். இந்தியாவில் இஸ்லாமில் மூன்று வகையான பிரிவுகள் உள்ளன. அவை, அஷ்ரஃப்கள், அஜ்லஃப்கள் மற்றும் அர்சல்கள்.
இதில் முதல் பிரிவான அஷ்ரஃப்கள், அரேபியா, பாரசீகம், துருக்கி, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சையதுகள், ஷேக்குகள், முகலாயர்கள் மற்றும் பதான்கள் ஆவார்கள்.
அல்லது இந்து மதத்தில் இருந்து இஸ்லாமை தழுவிய ராஜபுத்திரர்கள், கவுர்ஸ் போன்றோர் ஆவார்கள்.
அடுத்து அஜ்லஃப்கள். இவர்கள் மொமின்கள் அல்லது ஜுலாஹாக்கள் (நெசவாளர்கள்), டார்ஜிகள் அல்லது இடிரிஸ் (தையல்காரர்கள்), மற்றும் ரேயீன்கள் அல்லது குஞ்சராக்கள் (காய்கறி விற்பனையாளர்கள்) ஆகியோர் ஆவார்கள்.
சமய சடங்குகள், சுத்தம் செய்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவார்கள்.
அர்சல்கள் 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இவர்களின் பெயர்கள் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டன.
இவர்கள் தீண்டதகாத சமூகமாக நடத்தப்பட்டவர்கள்.
அவர்கள், ஹலால்கோர்கள், ஹெலாக்கள், லால்பேகிகள் அல்லது பாங்கிகள் (துப்புரவு செய்பவர்கள்), தோபிகள் (சலவை செய்பவர்கள்), நாயிஸ் அல்லது ஹஜ்ஜாம்கள் (முடிதிருத்துபவர்கள்), சிக்ஸ் (கசாப்புக் கடைக்காரர்கள்) மற்றும் ஃபக்கீர் (பிச்சைக்காரர்கள்) போன்றவர்கள் ஆவார்கள்.
இந்தியாவில் பாஸ்மாண்டா இஸ்லாமியர்கள் எத்தனை பேர்?
இந்தக் கேள்விக்கு எங்களிடம் ஆதாரப்பூர்வமான பதில் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில் இது பற்றி முழுமையான விவரங்கள் தெரியவரும்.
2004-05இல் இந்தியாவின் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியினர் 40% என்று சச்சார் கமிட்டி (Sachar Committee) கூறியது.
ஆனால் பாஸ்மாண்டா சமூக ஆர்வலர்கள் இந்திய இஸ்லாமிய மக்கள் தொகையில் பாஸ்மாண்டா சமூகத்தினர் 80-85 சதவீதம் வரை இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
1871ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவில் 19 சதவீத இஸ்லாமியர்கள் மட்டுமே உயர் சாதியினர் எனக் கூறப்பட்டுள்ளது” என்றார் பேராசிரியர் காலித் அனிஸ் அன்சாரி.
மேலும், “பாஸ்மாண்டா சமூக இஸ்லாமியர்கள் அனைத்து மாநிலங்களிலும் வசிக்கின்றனர்” எனவும் அவர் கூறினார். தொடர்ந்து, அவர்களின் பெயர்கள் வேறுபடலாம், ஆனால் எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பாஸ்மாண்டாக்கள் இருக்கிறார்கள்” என்றார்.
பாஸ்மாண்டா சமூக இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் என்ன?
பாஸ்மாண்டா சமூக இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எங்களின் முக்கிய கோரிக்கை சாதிவாரி கணக்கெடுப்பு. இதன்மூலம் ஏழ்மையில் உள்ள இஸ்லாமியர்கள் பிரதிநிதித்துவம் பெற முடியும்.
இந்திய இஸ்லாமியர்களில் மிகவும் ஏழ்மையில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு அரசின் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்.
மேலும் 2014 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பட்டியலின (தலித்) இஸ்லாமியர்களை எஸ்.சி., (பட்டியலினம்) பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் எங்களின் மற்றொரு முக்கியமான கோரிக்கை” என்றார்.
தொடர்ந்து பீகார் மாநிலத்தில் ஒபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்) பிரிவில் உள்பிரிவாக எம்பிசி உருவாக்கப்பட்டதுபோல், பஸ்மண்டா சமூக மக்களை எஸ்.சி., பிரிவில் இணைத்தால் எங்களுக்கு மத பாதுகாப்பு மற்றும் சலுகைகள் கிடைக்கும்” என்றார்.
பாஸ்மாண்டா இஸ்லாமியர்களின் செயல்பாடுகள் என்ன?
பேராசிரியர் காலித் அனிஸ் அன்சாரி, “பாஸ்மண்டா இஸ்லாமியர்கள் சாதி மற்றும் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்கள். நாங்கள் மத அடிப்படையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான இடஒதுக்கீடு என்பதை ஆதரிக்கவில்லை” என்றார்.
மேலும், “பாஸ்மாண்டா இஸ்லாமியர்கள் காலனித்துவ எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் லீக் கட்சியையும் எதிர்த்துள்ளோம்” என்றார். தொடர்ந்து, 1980களில், மஹாராஷ்டிராவில் உள்ள அகில இந்திய முஸ்லீம் OBC அமைப்பு (AIMOBCO) பாஸ்மாண்டா உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுத்தது, மேலும் பாலிவுட் தெஸ்பியன் திலீப் குமாரின் ஆதரவைப் பெற்றது என்றார்.
பாஸ்மாண்டா முஸ்லீம்களை பாஜக ஏன் அணுகுகிறது?
பேராசிரியர் அனிஸ் அன்சாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் இது தொடர்பாக முன்னர் பேசுகையில், “2024 மக்களை தேர்தலுக்கு முன்னதாக தனது வாக்கு வங்கியை அதிகரிக்க பாரதிய ஜனதா முயல்கிறது. இதற்காக பாஸ்மாண்டா முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கிறது. அவர்களின் ஆதரவை நாடுகிறது. உயர் சமூக முஸ்லிம்களுக்கு பதிலாக விளிம்பு நிலையில் உள்ள இஸ்லாமியர்களின் ஆதரவை நாடுகிறது” என்றார்.
ஆர்எஸ்எஸ்.ஸின் துணை அமைப்பான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் தேசிய ஒருங்கிணைப்பாளர் கிரிஷ் ஜூயஸ் கூறுகையில், “முஸ்லிம் பெண்களும் பாஸ்மாண்டாக்களும் தங்கள் உரிமைகளைப் புரிந்துகொண்டு, தங்கள் சொந்த மற்றும் தேசத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க வலிமையுடன் வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பாஸ்மாண்டாக்களின் நலனில் கவனம் செலுத்தும் இந்த முடிவு, ஆனால் நாடு நிச்சயமாக செய்யும்” என்றார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுவில், இந்துக்கள் அல்லாத பிற சமூகங்களில் உள்ள "பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினரை" அணுகுமாறு கட்சியை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பாஸ்மாண்டா முஸ்லிம்கள் போன்ற குழுக்களில் கவனம் செலுத்த பாஜக தொண்டர்களுக்கு இது ஒரு சமிக்ஞையாக விளங்கியது.
முஸ்லிம் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்த அசம்கர் மற்றும் ராம்பூர் மக்களவை இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு பிரதமரின் வழிகாட்டுதல் இவ்வாறு வந்துள்ளது.
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலிலும், பா.ஜ.,வுக்கு, பாஸ்மாண்டா ஓட்டுக்கள் கிடைத்துள்ளதாக நம்பப்படுகிறது. பாஸ்மாண்டா தலைவரான டேனிஷ் ஆசாத் அன்சாரி, இரண்டாவது யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.