ராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது?

இராமரின் வாழ்க்கையில் வெளிப்படுத்தப்பட்ட அந்த சிறந்த மதிப்பீடுகளுக்கான அடித்தளத்தை பிரதமர் ஆகஸ்ட்- 5 அன்று அமைக்கிறார்.

அயோத்தி  ராம் கோயிலில் “பூமி பூஜை” அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வரும் வேளையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்,  ராமர் கோயில் தொடர்பாக பல எழுத்தாளர்களின் கருத்துக்களை வெளியிட்டிருந்தது.

சில முக்கிய கருத்துக்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் தனது கட்டுரையில்,” காலம் கடந்து நிற்கும் ராமாயணக் காவியத்தையும், நாயகன் இராமரையும் நினைவு படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு என்பதைத் தாண்டி அயோத்தி போன்ற இடங்கள்  உலகளாவிய புனித உணர்வைக் குறிக்கின்றன. ராமாயணம் எடுத்துரைக்கும் மதிப்பீடுகள் அனைவருக்குமானவை மற்றும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துபவை” என்றும் தெரிவித்தார்.

ராம் மாதவ் தனது கட்டுரையில்,“ராம் பலருக்கு ஒரு கடவுள். ஆனால் வால்மீகி முனிவர் அவரை விஷ்ணுவின் அவதாரமாகவும், ஒரு சிறந்த மனிதராகவும் முன்வைக்கிறார். அயோத்திய கதைகளில், இராமரின் வாழ்க்கையில் வெளிப்படுத்தப்பட்ட அந்த சிறந்த மதிப்பீடுகளுக்கான அடித்தளத்தை பிரதமர் ஆகஸ்ட்- 5 அன்று அமைக்கிறார்”என்று தெரிவித்தார் .

பின்னர், வரலாற்றாசிரியர் வில்லியம் டேல்ரிம்பிள்  மேற்கோள் காட்டிய மாதவ்  “ஒவ்வொரு இந்துக்களின் பொது சொத்தாக கருதப்படும் இந்த பொக்கிஷம்…..   இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்  கிறிஸ்தவர்கள் போன்ற பல மதங்களிலும் முக்கியத்தும் பெறுகிறது” என்று தெரிவித்தார்.

பாஜகவின் மாநிலங்களவை எம்.பி.யும், இந்திய கலாச்சார. உறவு கவுன்சில் (ICCR) அமைப்பின் தலைவருமான வினய் சஹஸ்ரபுத்தே தனது கட்டுரையில்,” ராமர் கோயில் இயக்கத்தை நினைவு கூர்ந்தார். இந்தியாவின் அரசியல் தன்மை, சொற்றாடல் ஆகியவற்றை இந்த இயக்கம் அடியோடு மாற்றி அமைத்தது” என்று கூறுகிறார்.

தனது கட்டுரையில்“ராமர் கோயிலுக்கு அப்பால், சாதி பாகுபாடு என்ற நச்சுவை நாம் ஒழிக்காவிட்டால், நமக்குள்ளான கூட்டு விழிப்புணர்வு , இந்து ஒற்றுமை ஒரு கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணர வேண்டும். கோவில் இயக்கத்தை மசூதி எதிர்ப்பு அல்லது முஸ்லிம் விரோத நடவடிக்கை  என்று இஸ்லாமியர்கள் உணரக் கூடாது. இந்திய பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கும் ஆன்மீக ஜனநாயகம், பிற வழிபாட்டுத் தலங்களை அழித்து, அதன் மூலம்  தனது  வழிபாட்டு முறையைத் திணிக்கும் ஆட்சியாளர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. பாபர், ராமர் கோயிலை இடித்தது ஒரு வரலாற்று தவறு, அது இன்று சரி செய்யப்படுகிறது ” என்று எழுதினார்.

 

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ’பங்களிப்பு ஆசிரியர், பிரதாப் பானு மேத்தா, தனது கட்டுரையில், ஒரு மாறுபட்ட பார்வையை முன்வைத்தார்.

தனது கட்டுரையில்“ இன்று, உங்கள் பெயரில் போர் தொடுத்தவர்கள், அயோத்தியில் உங்கள் ஆலயத்தை புனிதப்படுத்த வருவார்கள். இத்தகைய செயல், உங்கள் மீதுள்ள பக்தி என்றும்,பூமியில் உங்கள் இறையாண்மையை நிலை நாட்டுவதாகவும் விவரிகின்றனர். பண்டைய இந்துமதத்தின் பெருமையை மீட்டெடுப்பதாக விவரிக்கின்றனர். ராம் ராஜ்யத்திற்கான புதிய மறுமலர்ச்சியாக வர்ணிக்கின்றனர். நீங்கள் இப்போது ஒரு புதிய சமூகத்தின் அடையாளமாக இருப்பீர்கள்.  உடைந்த கலாச்சாரத்திற்கு ஒரு முழுமையாக நீங்கள் இருக்க போகிறீர்கள் . ஆனால் நான் உங்களை அங்கே காணமாட்டேன் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், புனிதப்படுத்தப்பட்டது   எல்லாம வன்முறை, கூட்டு நாசீசிஸத்தின் (Collective Narcissism ) நினைவுச்சின்னம் ” என்று தெரிவித்தார்.

 

 

2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி, 1992 டிசம்பர் 6 ஆம் தேதி  நடந்த சம்பவத்தை, தனது மனம் நினைவில் கொள்ளும் என்று முந்தைய திட்டக் கமிஷனின் உறுப்பினர் சையதா ஹமீத், தனது கட்டுரையில் தெரிவித்தார்.

கவ சேவகர்களின் செயல்பாடுகலை நான் அங்குல, அங்குலமாக பார்த்தேன். காவி தலைக்கவசங்கள் அணிந்து,பாபர் மசூதியின் குவிமாடத்தின் மீது ஏறிய இளைஞர்கள், கையில் வைத்திருந்த சுத்தியல்கள்களை டிவி கேமராக்களுக்கு வெற்றிச் சின்னமாக காண்பித்தனர். 15 ஆம் நூற்றாண்டின் கட்டமைப்பைத் தகர்க்கும்  கும்பலுக்கு தலைவர்கள் உற்சாகம் கொடுத்தனர்,”என்று எழுதினார்.

“பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட மோதல் போக்கு, 2002 குஜராத்தில் மிகப் பெரிய கலவரத்திற்கும், படுகொலைக்கும்  வழிவகுத்தது” என்று அவர் கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to view the bhoomi pujan ceremony of ram temple in ayodhya

Next Story
சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் கோட்ஸே குறித்து கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து!Loksabha election results 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express