வயதாகும் செயல்முறையை சற்று தள்ளிப்போடுவதற்கு பயணம் மிகவும் பயனுள்ள ஆயுதமாக இருக்கலாம் என ஆகஸ்ட் மாதம் பயண ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
'என்ட்ரோபி அதிகரிப்பு', ஆரோக்கியம்
பயணத்திற்கும் முதுமைக்கும் இடையே உள்ள தொடர்பை மதிப்பிடுவதற்கான கோட்பாட்டு அடிப்படையாக "என்ட்ரோபி அதிகரிப்பு" கொள்கை முதலில் ஆய்வு செய்யப்பட்டது.
என்ட்ரோபி என்பது வெப்ப இயக்கவியலில் உள்ள ஒரு கருத்தாகும், இது ஒரு அமைப்பில் உள்ள கோளாறு அல்லது குழப்பத்தின் அளவை அளவிடுகிறது. எளிமையாகச் சொன்னால், அதிக என்ட்ரோபி, அதிக பாதிப்பு என்று கூறுகிறது. 1865 ஆம் ஆண்டில் ஜெர்மன் இயற்பியலாளர் ருடால்ஃப் கிளாசியஸால் முன்மொழியப்பட்ட கருத்து, இன்று பொருளாதாரம், உயிரியல், சமூகவியல் மற்றும் தகவல் கோட்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதியின்படி, காலப்போக்கில், தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பின் என்ட்ரோபி அதிகரிக்கலாம், ஆனால் குறையாது. இதுவே "என்ட்ரோபி அதிகரிப்பு" என்ற கருத்தாகும்.
மனித ஆரோக்கியத்தின் சரிவை, குறிப்பாக வயதாகும் செயல்முறையை விவரிக்க ஆய்வின் ஆசிரியர்கள் இதைத்தான் பயன்படுத்துகின்றனர். ஆரோக்கியமான மற்றும் செயல்படும் மனித உடல் குறைந்த என்ட்ரோபி என்று கூறலாம்.
பயணம்- முதுமை தொடர்பு என்ன?
சுற்றுலாவிற்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு பன்முகத்தன்மை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாசிட்டிவ் ஆன பயண அனுபவங்கள் "புதுமையான சூழல்கள், உடல் செயல்பாடுகள் மற்றும் சமூக தொடர்புகளின் மூலம்" மேம்பட்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இதனால் முதுமையை தள்ளிப் போட முடியும்.
"வயதாவது ஒரு செயல்முறை அதை மாற்ற முடியாதது. ஆனால் அதை தாமதப்படுத்த முடியும்.”என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரான ஃபாங்லி ஹு, சயின்ஸ் டெய்லிக்கு தெரிவித்தார்.
ஆங்கித்தில் படிக்க: How travel can slow process of ageing, according to a new study
கூடுதலாக, நடைபயணம், மலை ஏறுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடல் செயல்பாடுகள் வளர்சிதை மாற்றத்தையும் செலவழித்த ஆற்றலையும் அதிகரிக்கும். பயண சிகிச்சை பல்வேறு குழுக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் மேலும் ஆராய்ச்சி செய்து ஆராயலாம் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“