கடந்த ஒரு வாரமாக,மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள எஸ்டேட் இயக்குநரகம் (DoE), பல முன்னாள் மத்திய அமைச்சர்களுக்கு அவர்களது பதவி காலத்தின் போது வழங்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்து வருகிறது.
அதன்படி, மறைந்த தந்தை ராம்விலாஸ் பாஸ்வானுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில் இருந்து எம்.பி சிராக் பாஸ்வானையும், 7 மோதிலால் நேரு மார்க்கிலிருந்து பாஜக எம்.பி ராம் சங்கர் கத்தேரியாவையும், 10 பண்டிட் பந்த் மார்க்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பி.சி.சாரங்கியையும், முன்னாள் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் ஆகியோரையும் வெளியேற்றியுள்ளது.பொக்கிரியால் இருந்த இல்லம், தற்போது சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்டேட் இயக்குநரகம்
நாடு முழுவதும் உள்ள அரசாங்க குடியிருப்புகள் மற்றும் பிற சொத்துக்களை உள்ளடக்கிய இந்திய அரசாங்கத்தின் எஸ்டேட்களை நிர்வகிக்கும் பணியானது மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள எஸ்டேட் இயக்குநரகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பங்களாக்கள் பொதுக் குடியிருப்பு குடியிருப்பு (ஜிபிஆர்ஏ) சட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
GPRA என்பது டெல்லியில் எஸ்டேட் இயக்குநரக நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழுள்ள இடங்கள் மட்டுமின்றி டெல்லிக்கு வெளியே உள்ள 39 இடங்களில் உள்ள மத்திய அரசின் குடியிருப்பு விடுதிகளை உள்ளடக்கியது. அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் GPRA தொகுப்பின் கீழ் தங்குவதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரரின் ஊதிய அளவு, அலுவலகம் அல்லது பதவிக்கு ஏற்ப ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.
மத்திய அமைச்சர்களுக்கான தங்குமிடம் DoE ஆல் ஒதுக்கப்படுகிறது. அதே நேரத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலகங்களின் ஹவுஸ் கமிட்டிகளுக்கும் எம்.பி.க்களுக்கு ஒதுக்கீடு செய்யும் செயல்முறையை பின்பற்றப்படுகிறது. DoE விதிகளின்படி, வீட்டு உதவியாளர்களுக்கு குடியிருப்புடன் கூடிய ஏழு அறைகளைக் கொண்ட வகை VIII பங்களாக்கள், பணிபுரியும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும் சில சமயங்களில் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கும், ஹவுஸ் பேனல் ஓகே சொன்னால், இந்த பங்களா வகை ஒதுக்கீடு செய்யப்படும்.
வெளியேற்றல் செயல்முறை
குறிப்பிட்ட காலத்திற்குள் தங்குமிடத்தை காலி செய்யத் தவறினால், சேதம் மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள் போன்ற தண்டனை விளைவுகளுடன் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. வழக்கமாக, ஷோகாஸ் நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் தங்கள் இடத்தை காலி செய்ய வேண்டும்.
பதவி காலம் முடிந்தும் காலி செய்யாமல் இருப்பது தெரியவந்தால், ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு எஸ்டேட் துணை இயக்குனர் முன்னிலையில் விசாரணை நடத்தப்படும். ரத்து உத்தரவு தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் ஒதுக்கீட்டாளர் முடிவை மேல்முறையீடு செய்யலாம். ஆனால், மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டால், வெளியேற்றும் செயல்முறையைத் தொடங்குவதற்கு ஏதுவாக அந்த வழக்கு, மாநில நீதிமன்றங்களின் முன்பு சட்ட மோதல்களைத் தீர்க்கும் பிரிவுக்கு அனுப்பப்படும்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் பேசுகையில், ” வழக்கமாக, எஸ்டேட் இயக்குநரகம் குடியிருப்பாளருக்கு போதுமான ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி, அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது. அத்துமீறி தங்கியிருப்பவர்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் காலி செய்ய விரும்பாத நிலையில், வெளியேற்றல் பணியை தொடங்குவதற்காக எங்கள் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய அனுப்பப்படுவார்கள் என்றார்.
அரசு பங்களாக்களில் இருந்து வெளியேற்றியவர்கள் விவரம்
பிரியங்கா காந்தி வத்ரா: 2020 ஆம் ஆண்டில், சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பை ஆதரவை இழந்தபோது, 35 லோதி எஸ்டேட் வீட்டில் பிரியங்கா காந்தி வத்ராவுக்கு ஒதுக்கப்பட்ட தங்குமிடத்தை ஒரு மாதத்திற்குள் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பிப்ரவரி 21, 1997 அன்று SPG பாதுகாப்பாளராக அவருக்கு பங்களா ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிர் ரஞ்சன் சவுத்ரி: 2016 ஆம் ஆண்டில், காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சவுத்ரி, நியூ மோதி பாக், 14ல் ஒதுக்கப்பட்டிருந்த அவரது பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இச்சம்பவத்தால் “துன்புறுத்தல் மற்றும் அவமானத்திற்கு ஆளானதாக அப்போதைய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதியிருந்தார். அரசியல் பழிவாங்கல் எனக் குற்றம் சாட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அவர் ஹுமாயூன் சாலையில் ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அம்பிகா சோனி & குமாரி செல்ஜா: 2015ல், டெல்லி உயர் நீதிமன்றம், காங்கிரஸின் இரண்டு ராஜ்யசபா எம்.பி.க்களும், அமைச்சர்களாகப் பதவியில் இருந்து விலகிய பின்னரும், அத்துமீறி தங்கியிருக்கும் VIII பங்களாக்களை காலி செய்யும்படி உத்தரவிட்டது. இருவருக்கும் தற்போது ஏழாம் வகை பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ராஜ்யசபா செயலகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அவர்களுக்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஷரத் யாதவ்: கடந்த வாரம், உச்ச நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் எம்.பி.யாக இருந்த போது ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களாவை மே 31, 2022க்குள் காலி செய்ய உத்தரவிட்டது. 2017 டிசம்பரில் யாதவ் ராஜ்யசபா உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் தனக்கு வழங்கிய பங்களாவை தக்க வைத்துகொள்வது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தை நாடினார். மார்ச் 15 அன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், 15 நாள்களுக்குள் காலி செய்ய அறிவுறுத்தியது.
மேலும், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஹர்ஷ் வர்தன் ஆகிய இருவருக்குமே 8-ம் வகை பங்களாக்களுக்கு தகுதியில்லாததால், வெளியேற்றப்படுவதற்கான நோட்டீஸ் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு, சாணக்யபுரியில் ஒதுக்கப்பட்ட தங்குமிடத்தை காலி செய்யும்படி, DoE நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil