Advertisment

நேருவை கேள்வி கேட்ட வாஜ்பாய்: 1962 சீனா ஆக்கிரமிப்பு நினைவுகள்

நாம் சாலை வழியாக அனுப்பிய துருப்புகள் கால்வானை அடைந்தது. மேலும் அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள் வான்வழியாக அனுப்பப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
நேருவை கேள்வி கேட்ட வாஜ்பாய்: 1962 சீனா ஆக்கிரமிப்பு நினைவுகள்

Man Aman Singh Chhina

Advertisment

How Vajpayee took on Nehru govt over 1962 Chinese aggression : 1962 ஆம் ஆண்டின் முழு சீன ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்த நாட்களில், பாராளுமன்றத்தில் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெற்றன. அப்போது ஜனசங்கத்தின் இளம் தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய், பிரதமராகவதற்கு பல ஆண்டுகள் இருந்த நிலையில், அரசாங்கத்தை கடுமையாக கேள்வி கேட்டார். மாநிலங்களவையில், வாஜ்பாய் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை பல சந்தர்ப்பங்களில் எதிர்கொண்டு கேள்விகளை எழுப்பினார்.

இணையத்தில் கிடைக்கும் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதங்களின் காப்பகங்களிலிருந்து, சீன ஆக்கிரமிப்பு குறித்து வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிகழ்வுகளின் போது கேட்ட கேள்விகளும் அதற்கு அன்றைய அரசு அளித்த பதில்களும்

இந்திய சீன எல்லை பிரச்சனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற கடிதம் தொடர்பாக

ஏப்ரல் 23, 1962

வாஜ்பாய் : சீனார்கள் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடியுள்ளது என்பது வெளிப்படையாக உண்மையல்ல என்பது சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற குறிப்புகள் மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது. அது உண்மை என்றால், இந்த பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் என்ன?

நேரு : இது கடினம் என்று நினைக்கின்றேன். எதிர்காலத்தில் எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்து திட்டவட்டமாக கூற இயலாது. அது பல்வேறு காரணங்களை சார்ந்தது. ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் வாய்ப்புகள் கிடைக்குமோ அப்போதெல்லாம் சாத்தியமான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அது மிகவும் சிறியதாக இருக்கலாம். ஆனால் அவை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

To read this article in English

மே 3

எல்லையில் புதிய சீன ஊடுருவல்கள் குறித்து

வாஜ்பாய்: இரண்டு அல்லது மூன்று சீன நபர்கள் எல்லை கடந்து உள்ளே வர முடியுமானால், 200 அல்லது 300 பேர் இந்திய எல்லைக்குள் வருவதைத் தடுக்க அங்கே என்ன இருக்கிறது?

நேரு : 200 அல்லது 300 நபர்கள் வந்தால் அது அதிகம் என்றே நினைக்கின்றேன். அப்படி வந்தால் அவர்களின் வருகை மேலும் தெளிவாகும். ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் அல்லது நால்வர் எளிதில் இந்த பக்கம் வரலாம் அல்லது அந்த பக்கம் செல்லலாம். ஒவ்வொரு யார்டுக்கும் எல்லையில் செக்போஸ்ட் வைக்கவில்லை. அப்படி ஊடுருவல்கள் வந்தால், அது தெரிந்தவுடன் சரிபார்க்கப்படுகிறது.

வாஜ்பாய் : அவ்வபோது ஊடுருவல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. நம் ராணுவ வீரர்களுடன் அவர்கள் எப்போது மோதலில் ஈடுபட்டார்கள் என்று தெரிந்து கொள்ள முடியுமா?

நேரு : இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு மத்தியில் சச்சரவு ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்டது. ஆனால் சமீப காலங்களில் அப்படி ஏதும் ஏற்படவில்லை என்று நினைக்கின்றேன்.

ஜூன் 20

வடக்கு எல்லைகளில் புதிய சீன ஊடுருவல்கள்

வாஜ்பாய்: வடக்கு எல்லைகளில் புதிய சீன ஊடுருவல்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா என்பதை பிரதமர் அறிவிக்க முடியுமா? இந்த ஊடுருவல்களின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை அவையில் வைப்பீர்களா?

லட்சுமி மேனன் (வெளியுறவுத்துறை துணை அமைச்சர்) : ஆம். சும்டோவிற்கு 6 மைல்கள் மேற்கே சீனா ராணுவனத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 15ம் தேதி 1962ம் ஆண்டு எழுதப்பட்ட குறிப்பை தொடர்ந்து, சீன ராணுவத்தினர் மற்றொரு ஆக்கிரமிப்பை ஸ்பாங்கூர் பகுதியில் இருந்து தென்கிழக்காக 10 மைல்களுக்கு அப்பால் ஏற்படுத்தியுள்ளது. 1962 மே 11 தேதியிட்ட குறிப்பில் சீனர்கள் அதனை ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஜூன் 25

சீன மற்றும் பாகிஸ்தான் விமானங்களால் வான்வெளி மீறப்பட்ட போது

வாஜ்பாய்: இந்திய வான்வெளியை மீறும் சில புதிய சம்பவங்கள் சமீபத்தில் நடந்ததா என்று பாதுகாப்பு அமைச்சர் அவையில் கூறுவாறா?

கே. ரகுராமையா (பாதுகாப்பு அமைச்சர்): மீறல்கள் குறித்த அறிக்கை அவையில் வைக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய்: ஐயா, வெளிநாட்டினர் தங்கள் விருப்பப்படி நம்முடைய வான்வெளியை மீறியுள்ளனர், மேலும் அவர்கள் 30 மைல் தூரத்திற்கு நம் வான்வெளியில் ஊடுருவக் கூட தயங்குவதில்லை என அறிக்கையிலிருந்து தெரிகிறது. , எதிர்ப்பு செய்திகள் அனுப்புவதைத் தவிர, இந்த விமான மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது?

ரகுராமையா: பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இருவரும் பல சந்தர்ப்பங்களில் கூறியது போன்றே, நாகரீக நாடுகள் பின்பற்றும் அதே நடைமுறையை நாங்களும் பின்பற்றுகிறோம். அவை பலனளிக்கும் என்று நம்புகிறோம்.

ஆகஸ்ட் 22

எல்லை பிரச்சனைகள் தொடர்பான முன்மொழிவு

நேரு : அவையில் நான் மிகவும் குறைவான புதிய விசயங்களை முன் வைக்கின்றேன். துப்பாக்கிச்சூடு மற்றும் எதிர்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல்கள் நடைபெற்றாலும் கூட வெகு தொலைவில் இருந்து நடத்தப்பட்டுள்ளது இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. இதற்கு முன்பு இந்த பிரச்சனை எப்படி இருந்ததோ அப்படியே உள்ளது. இந்த சூழல் மேம்பட்டுள்ளதா என்று என்னால் உறுதியாக கூற முடியாது ஆனால் நிச்சயமாக மோசமடையவில்லை என்று கூற முடியும்.

சில விசயங்கள் உள்ளன. ஆனால் அவை எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் நாம் சாலை வழியாக அனுப்பிய துருப்புகள் கால்வானை அடைந்தது. மேலும் அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள் வான்வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அதில் தடை ஏதும் இல்லை.

மோசமான சூழல் உருவாகவில்லை என்ற போதும், தற்போது நிகழ்ந்த நிகழ்வானது மிகவும் மோசமானது தான். எங்களை பொறுத்தவரை சீன ஆக்கிரமிப்பு நம் பகுதியில் அதிகரித்துள்ளது. இது நீண்ட காலம் தொடரும் பட்சத்தில் நிலைமை மிகவும் தீவிரமடையும். எனவே, இதைப் பற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நம்முடைய அணுகுமுறை இரண்டு விசயங்களை கொண்டது. ஒன்று நம்மை நாம் வலுப்படுத்திக்கொண்டு, முடிந்தவரை சீனர்களை அவர்களின் இடத்தில் நிலை நிறுத்துவது, அதே நேரத்தில் ஒரு அமைதியான தீர்வை அடைய இருக்கும் வழிகளை ஆராய்வது.

வாஜ்பாய் : இந்த ஆணையின் இறுதியில் பின்வருவனவற்றை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்திய எல்லையில் அக்‌ஷை சின் என்று சீனாவின் நெடுஞ்சாலை அமைத்து, 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் சீனா முதன்முறையாக ஒரு அத்துமீறலை மேற்கொண்டுள்ளது. சீன ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பை மீட்பதில் அரசாங்கம் வெறுமனே தோல்வியடையவில்லை, ஆனால் சீனாவின் தொடர்ச்சியான தாக்குதல்களையும் அத்துமீறல்களையும் சரிபார்க்க முடியவில்லை என்றும் அரசின் சீன கொள்கைகள் முழுமையான தோல்வி என்பதையும் குறிப்பிட வேண்டும்.

தொடர்ந்து சீனாவின் நோக்கங்கள் மற்றும் குறுக்கோள்களை பொறுத்து ஒரு முழுமையான குழப்பம் அல்லது தற்கொலை மனப்பான்மையில் இருப்பது நம் அணுகுமுறையில் அவமானகரமான முரணாக இருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்களின் தவறான செயல்களுக்கு ஊக்கம் வழங்குவது உலக அரங்கில் குறிப்பாக நம் அண்டை நாடுகளின் பார்வைக்கு நம்முடைய மதிப்பை குறைத்துக்காட்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Jawaharlal Nehru Atal Bihari Vajpayee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment