கொசுக்கள் கொரோனா வைரஸை பரப்ப முடியாது என்பது எப்படி தெரியும்?

கோவிட் -19 தொற்று நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை கொசுக்கள் பரப்பக்கூடும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. இப்போது, ​​கன்சாஸ் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொசுக்களால் உண்மையில் கொரோனா வைரஸை பரப்ப முடியாது என்பதற்கான ஆதாரங்களை அளித்துள்ளனர்.

By: July 19, 2020, 7:43:27 PM

கோவிட் -19 தொற்று நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை கொசுக்கள் பரப்பக்கூடும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. இப்போது, ​​கன்சாஸ் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொசுக்களால் உண்மையில் கொரோனா வைரஸை பரப்ப முடியாது என்பதற்கான ஆதாரங்களை அளித்துள்ளனர். அவர்களின் ஆய்வு இயற்கை அறிவியல் அறிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே தெரியாதா?

இந்த ஆய்வு வரை, கொசுக்கள் கொரோனா வைரஸை பரப்பக்கூடும் என்பது எந்த வழியிலும் உறுதிப்படுத்துதல் இல்லை. “நாவல்கொரோனா வைரஸை கொசுக்களால் பரப்ப முடியும் என்பதற்கான எந்த தகவலும் ஆதாரமும் இன்றுவரை இல்லை” என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) மார்ச் மாதத்தில் முதன்முதலில் வெளியிட்ட கோவிட்-19 இல் தனது கட்டுக்கதைகள் உடைப்பு பிரிவில் கூறியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், கொசுக்களால் வைரஸைப் பரப்ப முடியாது என்பதில் உறுதியாக உள்ளது. புதிய ஆய்வு இது ஒரு அனுமானமாக குறிப்பிடுகிறது. மேலும் இது பிற கொரோனா வைரஸ்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பல்வேறு அவதானிப்புகள் மற்றும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என்று கூறுகிறது. எடுத்துக்காட்டாக, SARS மற்றும் MERS ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்கள் இரத்தத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு வைரஸை உருவாக்குகின்றன. கொசுக்கள் டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்படும்போது உற்பத்தி செய்யப்படும் அளவுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவு வைரஸை உருவாக்குகின்றன.

இப்போது என்ன நிரூபிக்கப்பட்டுள்ளது?

SARS-CoV-2 கொசுக்களைப் பாதிக்காது என்பதை ஆய்வாளர்கள் ஆய்வக சோதனைகளில் நிரூபித்துள்ளனர். இது போன்ற உறுதிப்படுத்துதல் இது முதல்முறை ஆகும். “நாங்கள் பயன்படுத்திய சூழ்நிலைகள் இயற்கையில் காணப்படாவிட்டாலும் கொசுக்கள் பாதிக்கப்படுவதற்கு நாங்கள் எல்லாவற்றையும் செய்தோம்” என்று கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தின் உயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஹிக்ஸ் மின்னஞ்சல் மூலம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

இதில் தீவிரமான சூழ்நிலைகளில் கூட கொசுக்கள் பாதிக்கப்படவில்லை.

ஒரு கொசு நோய்த்தொற்று ஏற்படுவதன் அர்த்தம் என்ன?

இரத்தத்தில் வைரஸைக் காட்ட அனுமதிப்பதற்கு போதுமான வைரஸ் இருக்க வேண்டும். “இரத்தத்தில் அதிக வைரஸ் இருந்தால் கொசுவுக்கு தொற்றும் வாய்ப்பு அதிகம்” என்று ஹிக்ஸ் கூறினார். “ஆனால் எல்லா வகையான கொசுக்களும் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதில்லை. சில கொசுக்கள் எளிதில் பாதிக்கக்கூடியவை என்றும் மற்றவை எதிர்க்கும் தன்மை உள்ளது என்று எங்களுக்குத் தெரியாது” என்று அவர் கூறினார்.

மேலே மேற்கோள் காட்டப்பட்ட டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சலின் உதாரணங்களை எடுத்துக்கொண்டால், ஒரு கொசுவால் தொற்று ஏற்படுவதற்கு இரத்தத்தில் உள்ள வைரஸின் அளவு போதுமான அளவு உயர வேண்டும். SARS மற்றும் MERS உடன், கொரோனா வைரஸின் அளவு ஒருபோதும் டெங்கு வைரஸ் அல்லது மஞ்சள் காய்ச்சல் வைரஸின் அளவை எட்டாது. இவை ஒரு கொசுவைப் பாதிக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை பரப்பும் கொசுக்களை ஹிக்ஸ் மேற்கோள் காட்டினார். இவை ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களால் பரவுகின்றன. அவை எளிதில் பரவுகின்றன. ஆனால், எதிர்க்கும் அனோபிலிஸ் இனங்களால் அல்ல. “இதை வேறு வழியில் பார்க்கலாம். சில வைரஸ்கள் சில கொசுக்களை பாதிக்கக்கூடும் என்றும் மற்ற கொசுக்கள் டெங்கு வைரஸ் ஏடிஸை பாதிக்க முடியாது. ஆனால், குலெக்ஸ்சை பாதிக்காது என்றும் கூறலாம். மீண்டும் நாங்கள் இதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை”என்று ஹிக்ஸ் கூறினார்.

புதிய கொரோனா வைரஸால் எந்த கொசுக்களும் பாதிக்கப்படாதா?

மூன்று பொதுவான மற்றும் பரவலாக விநியோகிக்கப்பட்ட கொசுக்களின் மீது சோதனைகள் நடத்தப்பட்டன. ஏடிஸ் ஈஜிப்டி, ஏடிஸ் அல்போபிக்டஸ் மற்றும் குலெக்ஸ் குயின்கெபாஸியாட்டஸ் ஆகிய கொசுக்கள் மீது சோதனை நடத்தப்பட்டது. முதல் இரண்டு இனங்கள் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிகா காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் பரவுவதற்கான காரணிகளாக உள்ளன. குலெக்ஸ் குயின்கெஃபாசியஸ் நிணநீர் யானைக்கால் மற்றும் சில வகையான மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களை பரப்புகிறது.

இந்த மூன்று கொசுக்களும் இந்தியாவில் உள்ளன. கொரோனா வைரஸ் அவைகளில் எதையும் பிரதிபலிக்க முடியவில்லை.

சோதனைகள் எவ்வாறு நடத்தப்பட்டன?

நோய்த்தொற்று ஏற்படுவதற்கு ஒரு கொசு வைரஸ் உள்ள ரத்தத்தை உண்ண வேண்டும். இருப்பினும், பாதிக்கப்பட்ட இரத்தத்தை கொசுக்களுக்கு உணவாக அளிப்பதைவிட, நாங்கள் உண்மையில் கொசுக்களில் வைரஸை செலுத்தினோம்” என்று ஹிக்ஸ் கூறினார்.

மேலும், “நாங்கள் இதைச் செய்ததற்குக் காரணம், கொசுக்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான தீவிர சோதனை ஆகும். ஒருவருக்கு உட்செலுத்தும்போது வைரஸ் வளரவில்லை என்றால், ஒரு நபரின் ரத்தத்தை ஏராளமான வைரஸ் உள்ள ஒரு கொசுவுக்கு குடிக்க அளித்தாலும் அதன்வழியாக அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நம்பலாம்” என்று ஹிக்ஸ் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:How we know mosquitoes cannot spread coronavirus kansas state university scientists study

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X