ஏ.டி.எம் கார்டு இல்லாமல் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி யோசனை தெரிவித்தது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு இந்த முடிவை எடுத்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
ஒரு சில வங்கிகளில் மட்டுமே ஏ.டி.எம் கார்டுகள் இல்லாமல் ஏ.டி.எம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்போது உள்ளது.
இதை அனைத்து வங்கிகளுக்கும் செயல்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒருமித்த பட்டுவாடா இணைப்பிட முகம் (யூ.பி.ஐ) வசதியை பயன்படுத்த அனைத்து வங்கிகளுக்கு யோசனை முன்வைக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
இதன்காரணமாக, டெபிட் கார்டு பயன்பாட்டில் தாக்கம் ஏற்படுமா என்று இந்தக் கட்டுரையில் அலசுவோம். இந்த செயல்முறை எவ்வாறு செயல்படும் என்பது குறித்த குறிப்பிட்ட விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்றாலும், இந்த விஷயத்தைப் பற்றி அறிந்த ஒருவர், ஏடிஎம்களில் விரைவில் யுபிஐ மூலம் பணம் எடுப்பதற்கான வசதி வரும் என்றார்.
அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒரு பயனர் அவர்கள் திரும்பப் பெற விரும்பும் தொகையைச் சேர்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து ATM இயந்திரத்தில் QR குறியீடு உருவாக்கப்படும்.
அதன் பிறகு, பயனர் UPI ஆப்பில் அந்த குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் பின்னை உள்ளிட வேண்டும்.
அதைத் தொடர்ந்து ஏடிஎம் பணத்தை வழங்கும் என்று அந்த நபர் கூறினார். யூ.பி.ஐ மூலம் பணம் எடுப்பதை அனுமதிப்பது அத்தகைய பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும்.
“பரிவர்த்தனைகளை எளிதாக்குவதுடன், அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு அட்டைகளின் தேவை இல்லாமல் போய்விடும் என்பதால், கார்டு ஸ்கிம்மிங் மற்றும் கார்டு குளோனிங் போன்ற மோசடிகளைத் தடுக்க உதவும்” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்திருந்தார்.
ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கான தற்போதைய வழிகள் என்ன?
ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ போன்ற சில வங்கிகள் மட்டும் தங்கள் பயனர்கள் தங்கள் ஏடிஎம்களில் இருந்து கார்டு இல்லாமல் பணத்தை எடுக்க அனுமதிக்கின்றன. கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு இந்த வங்கிகள் அறிமுகப்படுத்தின.
இருப்பினும், இது ஒரு நீண்ட செயல்முறை ஆகும். பயனர்கள் அந்தந்த வங்கிகளின் செயலிகளை நிறுவ வேண்டும்.
பின்னர் செயலியில் உள்ள அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன் பிறகு பயனாளிகளின் விவரங்கள் மற்றும் எடுக்க வேண்டிய தொகையைச் சேர்க்கவும்.
பயனரின் மொபைல் எண்ணை உறுதிசெய்த பிறகு, வங்கி OTP மற்றும் ஒன்பது இலக்க ஆர்டர் ஐடியை பயனாளியின் தொலைபேசிக்கு அனுப்பும்.
அதற்குப் பிறகு, பயனாளி ஒரு ஏடிஎம்மிற்குச் சென்று பணத்தைப் பெற OTP, ஆர்டர் ஐடி, பரிவர்த்தனைக்கான தொகை மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
இந்தச் சிக்கலான செயல்முறையை தவிர, அட்டையின்றி பணம் எடுப்பதற்கும் சில வரம்புகள் உள்ளன.
ஒரு பரிவர்த்தனைக்கு 100 ரூபாயில் இருந்து தொடங்கும் மற்றும் அந்தந்த வங்கிகளால் அதிகபட்ச வரம்பைக் கொண்டிருக்கும்.
எச்டிஎஃப்சி வங்கி பயனர்களுக்கு, ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக ரூ.10,000 மற்றும் மாதத்திற்கு ரூ.25,000 வரை பணம் எடுப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 சேவைக் கட்டணம் வரும்.
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ரவி சங்கர் கூறுகையில், “மத்திய வங்கி தற்போது “முறையான மாற்றங்களை” செய்ய வேண்டும் என்றும், “அடுத்த 2-3 மாதங்களில் சிக்கல்கள் தீர்ந்துவிடும்” என்றும் கூறினார்.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ), ஏடிஎம் நெட்வொர்க்குகள் மற்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விரைவில் தனி உத்தரவுகளை அனுப்பும் என்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
டெபிட் கார்டுகள் தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான மிகவும் பிரபலமான வழியாகும்.
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் 900 மில்லியனுக்கும் அதிகமான டெபிட் கார்டுகள் உள்ளன.
மேலும் UPI மூலம் பணம் எடுப்பதை அனுமதிப்பது டெபிட் கார்டு பயன்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை டெபிட் கார்டுகளை கையில் எடுத்துச் செல்வதற்கான தேவையை குறைக்கும். என்று YES செக்யூரிட்டிஸின் முன்னணி ஆய்வாளர் (நிறுவனப் பங்குகள்) சிவாஜி தப்லியால் கூறினார்.
ஆனால், யூ.பி.ஐ வசதி மூலம் பணம் எடுக்க அனுமதிப்பதால் ஏ.டி.எம் கார்டுகளை அளிப்பது நிற்காது என்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
அடுத்த 3-5 ஆண்டுகளில், UPI ஆனது ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதைச் செயல்படுத்த, பல முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவை விட்டு ஆகார் படேல் வெளியேறக்கூடாது… ‘லுக் அவுட் நோட்டீஸ்’ யார் ரத்து செய்யலாம்?
இவற்றில் முதன்மையானது UPI இன் ஆட்டோபே அம்சமாகும். இணைய இணைப்பு இல்லாத ஃபீச்சர் போன்களில் பயன்படுத்தக்கூடிய யுபிஐயை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் 40 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு பணம் செலுத்தும் முறையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றத்தை இன்னும் அதிகம் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil