Advertisment

டி 20 உலகக் கோப்பை: இந்திய அணியின் வெற்றிக்கு அறிவுரையாளர் தோனி எப்படி உதவுவார்?

MS Dhoni as T20 World Cup mentor Tamil News: முன்னாள் கேப்டன் தோனி, ஐபிஎல் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வியூகம் அமைக்கும் போது சுழற்பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவார்.

author-image
WebDesk
New Update
How will mentor Dhoni help India’s prospects at T20 World Cup; Explained in tamil

MS Dhoni Tamil News: 7-வது டி20 கிரிக்கெட் உலக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்றும் கேப்டன் விராட் கோலி தலைமையில் களம் காண உள்ள இந்த அணிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அறிவுரையாளராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ-யின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Advertisment

இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், பலருக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்யை பொறுத்தவரை (ஒரு நாள் மற்றும் டி20) முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி அறிவுரையாளராக அறிவித்தது சரியான தேர்வு தான் என கிரிக்கெட் ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அப்படி அவர்கள் குறிப்பிட என்னென்ன காரணங்கள் உள்ளது என இங்கு பார்க்கலாம்.

தோனி ஏன்?

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவானாக வலம் வரும் எம்எஸ் தோனி, விளையாட்டு சூழ்நிலைகளை விரைவாகப் படிக்க கூடியவர். போட்டிக்கேற்றவாறு யோசித்து முடிவுகளை எடுக்க கூடியவர். மற்றும் அணி வெற்றி பெற உள்ள வழிகளை ஆராய்ந்து வெற்றியை உறுதி செய்யக்கூடியவர்.

இவரின் தலைமையிலான இந்திய அணி இதுவரை ஐசிசி நடத்திய 3 முக்கிய தொடர்களில் கோப்பை வென்று அசத்தியுள்ளது. (2007ல் ஐசிசி உலக டி 20 கோப்பை, 2011ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி). அதோடு, இவர் வழிநடத்தி வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 முறை பட்டம் வென்றுள்ளது.

தோனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆடுகளத்தின் தன்மை மற்றும் அந்த சூழ்நிலையில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் யார் என்பதை நன்கு அறிந்தவர்.

தேர்வாளர்கள் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ள நிலையில், பிட்சுகள் ட்வீக்கர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தோனி, ஐபிஎல் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வியூகம் அமைக்கும் போது சுழற்பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவார். அவர் இப்போது டக்-அவுட்டில் இருந்தாலும், சிந்தனை குழுவின் ஒரு பகுதியாக அவர் தீவிரமாக ஈடுபடுவது கேப்டன் விராட் கோலியின் முடிவெடுப்பிற்கு உதவும்.

தவிர, அணியில் உள்ள பெரும்பாலான இளம் வீரர்களுக்கு தோனி கேப்டனாக அல்லது வழிகாட்டியாக இருந்துள்ளார், எனவே ஏற்கனவே சில பரிச்சயம் உள்ளது.

கோலி-ரவி சாஸ்திரி கூட்டணி 20 ஓவர் கிரிக்கெட்டில் வேலை செய்யவில்லையா?

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்திய பெரிய தொடர்களில் இதுவரை ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. (2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றது.)

இதே போல் அவர் வழிநடத்தி வரும் ஐபிஎல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை.

இருப்பினும், இவரின் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியாவில் இரண்டு வெளிநாட்டு தொடர்களை வென்றுள்ளது, மேலும் அவர் வெளிநாடுகளில் மிகவும் வெற்றிகரமான இந்திய கேப்டனாக உள்ளார். கோப்பை கைப்பற்றததற்கு கோலியை மட்டும் குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்றாலும், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எட்டு ஆண்டுகளாக உலக சாம்பியன் பட்டம் மழுப்பலாக உள்ளது.

இது ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது?

டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அவரது துணை ஊழியர்களின் பதவிக் காலம் முடிவடைவதால், பிசிசிஐ ஒப்பந்தங்களை புதுப்பிக்க விரும்பவில்லை. தோனியின் நியமனம் சரியான நிறுத்த இடைவெளி ஏற்பாடாக செயல்படுகிறது. ஒரு முக்கியமான ஐசிசி போட்டிக்கு முன்னதாக ஒரு புதிய பயிற்சியாளரை நியமிப்பதால், பிசிசிஐ அணி நிர்வாகத்திற்கு நம்பகமான பழைய கையை சேர்ப்பதில் மாஸ்டர் ஸ்ட்ரோக்கைக் கொண்டு வந்துள்ளது.

வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கூர்மையான முடிவெடுப்பவராக உள்ள தோனி, கோலி மற்றும் சாஸ்திரி இருவருடனான அவரது நட்பான வலுவானது. அவர் இன்னும் ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக செயல்பட்டு, இந்திய பயிற்சியாளர் பணியைத் தொடர எந்த விருப்பமும் காட்டாத நிலையில், ஒரு வழிகாட்டியாக ஒரு முறை செயல்படுவது அனைவருக்கும் வெற்றி தரும் சூழ்நிலை.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Mahendra Singh Dhoni Cricket Ms Dhoni T20 Worldcup Explained Sports Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment