ட்விட்டரில் புகைப்படம், வீடியோக்களை பகிர புதிய விதிமுறை; யாருக்கு விதிவிலக்கு?

இந்தப் புதிய மாற்றமானது, ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயலதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்ட அடுத்த நாளே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னணி சமூகவலைதளமான ட்விட்டர் நிறுவனம் பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன்படி, தற்போது தனிப்பட்ட தகவல் கொள்கையை புதுப்பித்துள்ளது. புதிய கொள்கையின்படி, தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியில்லாமல் முடியாது. இந்தப் புதிய மாற்றமானது, ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயலதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்ட அடுத்த நாளே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் கொள்கையில் திடீர் மாற்றம் ஏன்?

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தனிநபர்களைத் துன்புறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும் மற்றும் வெளிப்படுத்துவதற்கும் ஒரு கருவியாக ஆன்லைன் தளங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதனை தடுக்கும் நோக்கில்,இந்த புதிய கொள்கை மாற்றம் அமலுக்குவந்துள்ளது.

தனிப்பட்ட நபர்களின் புகைப்படம் , வீடியோக்களை பகிர்வது ஒரு நபரின் தனியுரிமையை மீறில் செயல் ஆகும். இது, அந்நபரை உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். தவறான தகவல் பகிர்தல் பெண்கள், ஆர்வலர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது.

எப்படி வேலை செய்யும்

தனிப்பட்ட நபர்களின் புகைப்படங்களைப் பதிவேற்றும் போது, அவர்களின் ஒப்புதல் கடித்ததையும் சேர்த்து சமர்பிக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் கொள்கை மீறிலாக ரிப்போர்ட் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபரின் புகைப்படம் அனுமதியின்றி அப்லோடு செய்யப்பட்டதாக புகார் வந்தால், உடனடியாக நீக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

யாருக்கு விதிவிலக்கு

இந்த புதிய கொள்கை, தனிப்பட்ட நபர்களின் புகைப்படத்தை பொதுநலனுக்காக வாசகங்களுடன் ட்வீட் செய்யும் ஊடகங்களுக்கு பொருந்தாது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How will twitter new private info policy tweak work

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com