How worrying is delta plus sars cov2 coronavirus Tamil News : SARS-CoV2 கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் பிறழ்ந்த பதிப்பான டெல்டா பிளஸ் மாறுபாட்டை இந்தியாவில் விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். டெல்டா பிளஸின் பரவுதல் கண்காணிக்கப்பட்டு, தடுப்பூசி செயல்திறனை சரிபார்க்க ஆய்வக சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், டெல்டாவை விட டெல்டா பிளஸ் அதிக தொற்று ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19-ன் டெல்டா பிளஸ் மாறுபாடு என்ன?
டெல்டா மாறுபாடு அல்லது பி .1.617.2, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது. இது முதலில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது. பின்னர் AY.1 மற்றும் AY.2 ஆகிய வகைகளில் மாற்றம் பெற்றது.
டெல்டா மாறுபாடு சாத்தியமான முக்கியத்துவம் வாய்ந்த கூடுதல் பிறழ்வுகளை உருவாக்கியுள்ளதால் இதனைத் துணை டெல்டா பிளஸ் என்று அழைக்கப்படுகின்றன என்று சிஎஸ்ஐஆர்-இன்ஸ்டிடியூட் ஆப் ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியலின் இயக்குநர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறினார். "SARS-CoV2-ன் B.1.617.2 பரம்பரையின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது" என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் சுஜித் சிங் கூறினார்.
ஸ்பைக் புரதத்தில் K417N எனப்படும் பிறழ்வை டெல்டா பெற்றதன் விளைவாக டெல்டா பிளஸ் உருவாக்கப்பட்டுள்ளது. K417N பிறழ்வு, AY.1 மற்றும் AY.2 ஆகிய இரண்டாலும் கொண்டு செல்லப்படுகிறது. இது பீட்டா மாறுபாடு அல்லது B.1.351-ல் காணப்படுகிறது. மேலும், இது முதலில் தென்னாப்பிரிக்காவில் அறிவிக்கப்பட்டது மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) இதனைக் கவலைக்குரிய வகையாக வகைப்படுத்தப்பட்டது.
இந்த துணை வம்சாவளி எங்கே கண்டறியப்பட்டது?
ஆரம்பத்தில், K417N-ஐ சுமந்து செல்லும் டெல்டாவின் (B.1.617.2) சிறிய எண்ணிக்கையிலான சீக்வன்ஸ் அனைத்து இன்ஃப்ளூயன்ஸா டேட்டாவையும் பகிர்வதற்கான உலகளாவிய முன்முயற்சியில் (Global Initiative on Sharing All Influenza Data (GISAID)) காணப்பட்டன என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். டெல்டாவில் உள்ள மாறுபாட்டை வழக்கமான ஸ்கேனிங் மூலம் ஐரோப்பாவிற்கு முந்தைய சீக்வன்ஸ் கூறப்பட்டன.
ஜூன் முதல் வாரத்தில், இங்கிலாந்து பப்ளிக் ஹெல்த் ஒரு அறிக்கையில் GISAID-ல் அடையாளம் காணப்பட்டபடி K417N உடன் டெல்டாவின் 63 மரபணுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த 63 மரபணுக்களில் கனடா, ஜெர்மனி மற்றும் ரஷ்யாவில் ஒவ்வொன்றும், இந்தியாவில் ஆறு, போலந்தில் ஒன்பது, நேபாளத்தில் இரண்டு, சுவிட்சர்லாந்தில் நான்கு, போர்ச்சுகலில் 12, ஜப்பானில் 13 மற்றும் அமெரிக்காவில் 14 அடங்கும்
டெல்டா பிளஸ் கவலையின் மாறுபாடா?
WHO டெல்டாவை கவலையின் மாறுபாடாகப் பட்டியலிட்டுள்ள நிலையில், இந்திய அரசாங்கம் டெல்டா பிளஸ் (AY.1)-ஐ நாட்டில் கவலைக்குரிய வகையாக வகைப்படுத்தியுள்ளது. இதனை மேலும் விசாரிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் அகர்வால் கூறினார்.
இந்தியாவில் டெல்டா ப்ளஸின் பாதிப்பு குறைவாக இருந்தாலும், சில பிறழ்வுகள் மேலும் பரவும் அல்லது அதிக வைரஸ் அல்லது இரண்டாக மாற உதவுகின்றன என்பதில் விஞ்ஞானிகள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். AY.1 மற்றும் AY.2 இரண்டும் டெல்டாவின் சந்ததியினர் என்பதால், அவை டெல்டா மாறுபாட்டின் சில பண்புகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், பீட்டா வேரியன்ட்டில் K417N பிறழ்வு உள்ளது. இது, நோயெதிர்ப்பு தன்மையைக் காட்டியதாகவும், ஆன்டிபாடிகளை ஏமாற்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பரவலைப் பொறுத்தவரை, டெல்டாவுடன் டெல்டா பிளஸ் எவ்வாறு ஒப்பிடுகிறது?
"ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தற்போது மரபணு டேட்டா அல்லது ஆய்வக ஆய்வுகளின் அடிப்படையில் டெல்டா பிளஸ் மாறுபாட்டின் பரவலில் அதிகரிப்பு இருப்பதாகக் கூற முடியாது" என்று டாக்டர் சிங் கூறினார்.
டெல்டா வேரியன்ட்டை விட டெல்டா பிளஸ் வேகமாக உயரவில்லை என்று டாக்டர் அகர்வால் கூறினார். இருப்பினும், மையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. டெல்டா பிளஸ் பாதிக்கப்பட்டவர்களில் 12 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் சோதனை, விரைவான தொடர்பு தடமறிதல் மற்றும் முன்னுரிமை தடுப்பூசி ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் பொது சுகாதார பொறுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வைரஸின் மரபணு வரிசைப்படுத்தலை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட 28 ஆய்வகங்களின் கூட்டமைப்பு INSACOG-ன் படி, வரிசைப்படுத்தப்பட்ட 12 மாநிலங்களிலிருந்து 45,000 மாதிரிகளில், சில 48 வரிசைப்படுத்தப்பட்ட மாறுபாட்டுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முன்னணி நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் வினிதா பால், இந்த மாறுபாடு எவ்வளவு பரவக்கூடியது என்பதைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “திசு வளர்ப்பில் டெல்டா பிளஸ் மாறுபாட்டைச் சோதித்து, அசல் வுஹான் வைரஸ் மற்றும் டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிட்டு ACE-2 ஏற்பிகளை வெளிப்படுத்தும் கலங்களுக்குள் நுழைய ஒப்பீட்டு செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும். நோய்த்தொற்றைப் பரப்புவதில் இது மிகவும் திறமையானதா இல்லையா என்பது அதன் பரவுதலைப் பற்றி ஊகிக்க extrapolated செய்யப்படலாம்” என்று அவர் கூறினார்.
21 பாதிக்கப்பட்டவர்கள் பதிவான மகாராஷ்டிராவில், டெல்டா பிளஸ் நோயால் பாதிக்கப்பட்ட 20 பேரை அடையாளம் கண்டுள்ளதாக மாநில கண்காணிப்பு அதிகாரி டாக்டர் பிரதீப் அவதே தெரிவித்தார் (இதில் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது). "எங்களுடைய விசாரணைகள் நடந்து வருகின்றன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் ஆபத்தான உயர்வு இல்லை. இந்த பகுதிகளில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதைத் தவிர்த்து, குறியீட்டு நபர்களின் தொடர்புகளைக் கண்டுபிடிப்பதிலும், திருப்புமுனை மற்றும் மீண்டும் தொற்று ஏற்பட்டவர்களைக் கண்காணிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது” என்று அவர் கூறினார்.
தற்போதைய தடுப்பூசி விகிதத்தில் இவற்றிலிருந்து பாதுகாப்பை வழங்க முடியுமா?
இப்போது, இந்தியா குறைந்தது 19% மக்களுக்கு ஒரு டோஸ் மற்றும் 4% மக்களுக்கு இரண்டு டோஸ் வழங்கியுள்ளது என்று முன்னணி வைராலஜிஸ்ட் பேராசிரியர் ஷாஹித் ஜமீல் கூறினார். மேலும், தடுப்பூசி விகிதம் கடந்த வாரத்தில் சராசரியாக 3 மில்லியனிலிருந்து ஒரு நாளைக்கு 6 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
"பிறழ்ந்த மாறுபாட்டைப் பற்றிய கூடுதல் தரவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்" என்று WHO-ன் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். கடுமையான நோய் மற்றும் இறப்பைத் தடுப்பதில் அனைத்து வகைகளுக்கும் எதிராகத் தடுப்பூசிகள் இப்போது பயனுள்ளதாக இருக்கும். செயல்திறன் ஆய்வுகளிலிருந்து எங்களுக்குக் கூடுதல் தரவு தேவைப்படும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், உலகளவில் விவரிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்” என்று டாக்டர் சுவாமிநாதன் கூறினார்.
“வைரஸ் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டவர்களிடமிருந்து சீரம் மாதிரிகளில் வளர்ந்து பரிசோதிக்கப்பட வேண்டும். மேலும் சீரம் மாதிரிகளில் உள்ள ஆன்டிபாடிகள் ஒப்பிடுவதன் மூலம் வைரஸை நடுநிலையாக்க முடியுமா என்பதை சரிபார்க்க முற்றிலும் தடுப்பூசி போடப்பட்டவர்கள் ஒரு குறிப்பு திரிபு தேவைப்படுகிறது” என்று டாக்டர் பால் கூறினார்.
இந்த மாறுபாட்டிற்கு எதிராக கூடுதல் முன்னெச்சரிக்கை தேவையா?
டபுள் மாஸ்கிங், தடுப்பூசி மற்றும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை ஆகியவை கோவிட் சம்பந்தமான விஷயங்களுக்கு மிக முக்கியமானவை என்று மகாராஷ்டிரா கோவிட் பணிக்குழுவின் நிபுணர் உறுப்பினர் டாக்டர் சஷாங்க் ஜோஷி கூறினார். "நாங்கள் இப்போது சாதாரணமாக இருக்க முடியாது" என்றும் டாக்டர் ஷஷாங்க் ஜோஷி கூறினார்.
ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மும்பையைச் சேர்ந்த தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் அனிதா மேத்யூ கூறுகையில், சமூக இடைவெளி மற்றும் கை சுகாதார நடைமுறைகளைப் பராமரிப்பது முக்கியம். நாட்டில் அதன் சாத்தியமான இருப்பைக் கூர்ந்து கவனித்து, பொருத்தமான பொது சுகாதார பதிலை உறுதி செய்வதே முன்னோக்கிய வழி என்று டாக்டர் மேத்யூ கூறினார்.
மூன்றாவது அலை எப்போது நாட்டைத் தாக்கும் என்பதற்கு எந்த பதிலும் இல்லை என்று பேராசிரியர் ஜமீல் குறிப்பிட்டார். "நாட்டில் தளர்வு போடப்பட்ட பிறகு, கோவிட் பொருத்தமான நடத்தையை நாங்கள் எவ்வாறு பின்பற்றுகிறோம், எவ்வளவு விரைவாக நல்ல ஒற்றை டோஸ் தடுப்பூசி கவரேஜ் வழங்க முடியும் மற்றும் ஒரு தொற்றுநோயான மாறுபாடு ஒரு இயக்கியாக வெளிப்படுகிறதா என்பதைப் பொறுத்தது" என்று மேலும் குறிப்பிட்டார்.
இந்த புதிய மாறுபாடு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் சோதனை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முடுக்கிவிட வேண்டியது அவசியம் என்று மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். INSACOG-ஆல் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்கள் மற்றும் கிளஸ்டர்களில் உடனடியாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.