Hybrid immunity most effective against severe Covid | Indian Express Tamil

 தீவிர கொரோனாவை வெற்றிகரமாக முறியடிக்கும் ‘ஹைபிரிட் இம்யூனிட்டி’: ஆய்வு கூறுவது என்ன?

கொரோனா தொற்றில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள ஹைப்பிரிட் (hybrid immunity ) நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிகின்றன.

 தீவிர கொரோனாவை வெற்றிகரமாக முறியடிக்கும் ‘ஹைபிரிட் இம்யூனிட்டி’: ஆய்வு கூறுவது என்ன?

கொரோனா தொற்றில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள ஹைப்பிரிட் (hybrid immunity ) நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிகின்றன. 

சார்ஸ் கோவிட் தொற்று தொடர்பாக நிகழ்த்தப்பட்ட  11 ஆய்வுகளை மையமாக வைத்து, நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துகொள்வது தொடர்பான சாத்தியங்கள் குறித்து கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதால், கொரோனா தொற்றின் வீரியம் குறைகிறது என்று கூறப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டால்,  உங்களுக்கு கலப்பின நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இது உங்களை மீண்டும்  கொரோனா தொற்று ஏற்படாமல் பார்த்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திய பிறகு உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதன் தாக்கம் குறைவாக இருக்கும். மேலும் உயிரிழப்பில் இருந்து உங்களை  காப்பாற்றும்.

ஆய்வின் முடிவுகள் என்ன சொல்கின்றன?

சார்ஸ் கோவி- 2 தொற்றால் கடுமையான பாதிப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், 85 % பேருக்கு கொரோனா தடுப்பூசியால் நோய் கடுமையாக தாக்கும் நிலை குறைந்திருக்கிறது.

ஆனால் மீண்டும் இந்த நோய் வராமல் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவாக உள்ளது.

ஆனால் இந்த கலப்பின நோய் எதிர்ப்பு சக்தி ;அதாவது ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு, முதல் டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தினால், 97.2  % பேருக்கு நோய் தொற்று மீண்டும் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி , சார்ஸ் கோவிட்- 2 தொற்று எற்படுவதால் அல்லது தடுப்பூசி செலுத்துவதால், ஏற்படும் ஆண்டிபாடிஸ் (antibodies ) 67 % பேருக்கு இருக்கிறது( அக்டோபர் 2021 ) . மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று எதிராக  ஆண்டிபாடிஸ்  கட்ந்த ஜூன் – ஜூலை 2021-க்குள் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக டெல்டா வேரியண்ட் கொரோனா அலை பாதித்தபோது இது ஏற்பட்டுள்ளது.

மேலும் எப்போதெல்லாம் கொரோனா தொற்று மக்கள் மத்தியில் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் பூஸ்டர் தடுப்புசி செலுத்த வேண்டும். 

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Hybrid immunity most effective against severe covid