ஐதராபாத் நிசாமின் 35 மில்லியன் யூரோ பணம் யாருக்கு? முடிவுக்கு வந்தது 60 வருட பிரச்சனை!

எங்கள் நாட்டில் இருந்து நிசாம் பெற்ற ராணுவ உதவிகளுக்கான கைமாறு தான் இந்த பணம் - பாகிஸ்தான் தரப்பு

By: Updated: October 4, 2019, 02:29:31 PM
 Nirupama Subramanian

Hyderabad Funds Case British High Court ruled :  இங்கிலாந்து நாடு, லண்டன் மாநகரில் அமைந்திருக்கிறது நாட்வெஸ்ட் என்ற வங்கி. அந்த வங்கியில் 1948ம் ஆண்டு ஐதராபாத் நிசாம் உஸ்மான் அலிகான் சித்திக் இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாயையை அன்றைய பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிம் ரஹிமதுல்லாவுக்கு அனுப்பிவைத்தார். அந்த பணம் யாருக்கு சொந்தம் என்று முறையாக அறிவிக்கப்படாத வரையில் அந்த பணத்தை யாருக்கும் அளிக்க இயலாது என்று நாட்வெஸ்ட் வங்கி அறிவித்தது.

இந்த வழக்கின் பின்னணி

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நூற்றுக்கணக்கான சிற்றரசர்கள் இந்தியாவுடன் இணையாமல் சுயேட்சை ஆட்சி நடத்தி வந்தனர். ஐதராபாத், காஷ்மீர் போன்றவை சற்று பெரிய நிலப்பரப்பை கொண்ட பிராந்தியங்கள். அவையும் சுயாட்சையையே விரும்பின. இந்நிலையில் இந்தியாவுடன் சேர விரும்பாத ஐதராபாத்தின் ஏழாம் நிசாம் உஸ்மான் அலிகான் சித்திக் பாகிஸ்தானின் உதவியை வேண்டி ஆயுதங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி வைக்கும்படி கூறி 8 கோடி ரூபாயை (1,007,490 யூரோ) லண்டனில் இருக்கும் நாட்வெஸ்ட் வங்கி மூலமாக பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிம் ரஹிமதுல்லாவுக்கு அனுப்பிவைத்தார். இந்திய ராணுவத்தின் பிடியில் ஐதராபாத் சரணடந்த செப்டம்பர் 19,1948-க்கு அடுத்த நாள் இந்த பண பரிமாற்றத்தை மேற்கொண்டார் நிசாம். பின்பு இந்த பணம் தனக்கு தேவை என்று கூறிய போதும் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை. அந்த பணத்தை மீட்க இந்திய அரசு ஆட்களை அனுப்பியும் ஒரு பலனும் எட்டவில்லை. இந்தியா, பாகிஸ்தான், நிசாமின் வம்சாவழிகள் – இம்மூன்று தரப்பில் யாருக்கு இந்த சொத்து சொந்தம் என்று கிட்டத்தட்ட 60 வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

60 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பணம் வட்டியுடன் சேர்ந்து 35 மடங்காக அதிகரித்துள்ளது. இது யாரும் எதிர்பாக்காத பெரும் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு அந்த பணம் தொடர்பாக  பாகிஸ்தான் அரசு மேல் முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டின் மனு மீதான விசாரணை முடிவுகளே தற்போது வெளியாகியுள்ளது.

நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சனையை முடிக்க முடிவு செய்த இந்தியா

இந்த பணத்தை இரு நாட்டினரும் பங்குபோட்டுக் கொள்ளும் வகையில் எப்போதும் ஒரு திட்டத்துடன் இருந்தது இந்தியா.  ஆனால் அதற்கு எப்போதும் முட்டுக்கட்டை போட்டு வந்தது பாகிஸ்தான். 10 ஆண்டுகள் ராணுவ ஆட்சி முடிவுற்று நவாஸ் செரிஃப் மீண்டும் பிரதமராக 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு செய்யப்பட்டார். அப்போதும் கூட இந்தியா, நீதிமன்றத்துக்கு வெளியே இப்பிரச்சனையை முடித்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டது.
ஏப்ரல் மாதம் 11ம் தேதி, 2008ம் ஆண்டு பிரெஸ் இன்ஃபெர்மேசன் பெரு மூலமாக மத்திய அரசு செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய அரசு, நிசாமின் சொத்துகள் தொடர்பாக நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சனையை தீர்த்து நிசாம் சந்ததியினர், இந்தியா, பாகிஸ்தான் என மூன்று பங்காக நிதியை பிரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும், இதற்கான பேரம் பேசுதலுக்கு 18 மாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்தது. இந்திய தூதரக அலுவலகத்தில் நிகழ்த்தபட்ட தீவிரவாத தாக்குதல் மற்றும் அதே வருடத்தில் மும்பையில் நடைபெற்ற தாக்குதல் போன்ற காரணங்களால் அந்த திட்டம் செயல்படாமலே கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் சூடுபிடித்த பிரச்சனை

2013ம் ஆண்டு இங்கிலாந்திற்கான பாகிஸ்தான் செயலாளராக செயல்பட்ட வாஜித் சம்சுல் ஹாசன் மீண்டும் இந்த பிரச்சனையை லண்டனில் எழுப்பினர். இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில், நாட்வெஸ்ட் வங்கியில் இருக்கும் நிசாமின் பணத்திற்கு உண்மையான பாத்தியதாரர்கள் யார் என்று விரைந்து விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் பாகிஸ்தான் ஹை கமிஷ்னர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இடையே இந்த வழக்கை திரும்பிப் பெறுதல் குறித்து பாகிஸ்தான் மனு தாக்கல் செய்ய அதனை மறுத்துவிட்டது இங்கிலாந்து நீதிமன்றம். இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வாஜித்திற்கு அழுத்தம் தந்தது நவாஸ் ஷெரிப் கட்சி. அவரின் அறிவுறுத்தலின் படி இந்த வழக்கை நான் வாபஸ் வாங்குகிறேன் என்று ஹாசன் அறிவித்த போதும் வழக்கை தள்ளுபடி செய்யாமல் தொடர்ந்து விசாரணை செய்தது இங்கிலாந்து நீதிமன்றம்.

பாகிஸ்தான் தரப்பு வாதிடுகையில், இந்தியா ராணுவத்தில் இருந்து ஐதராபாத்தை காக்க ராணுவ ஆயுதங்களை கொடுத்து உதவுமாறு நிசாம் முகமது அலி ஜின்னாவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் அடிபடையில். இங்கிலாந்து பைலட் ஃபெட்ரிக் சிட்னி காட்டன் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இந்தியாவின் ஐதராபாத்துக்கு 35 முறை பயணம் மேற்கொண்டு அந்த ஆயுதங்களை ஐதராபாத்தில் கையளித்தார். அந்த ஆயுதங்களுக்கான பணமே இந்த பணம் என்று பாகிஸ்தான் தரப்பு வாதிட்டது.  இந்தியாவும் நிசாமின் வாரிசுகளும் நிதி பங்கீட்டில் முக்கிய முடிவுகளை கடந்த ஆண்டு எட்டிய நிலையில் புதன்கிழமை வெளியான தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. 70 வருட தொடர் சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் படிக்க : காடுகளில் இருந்து வெளியேற்றப்படும் காடர்கள்… கல்லாறு காடர்களின் நிலை என்ன?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Hyderabad funds case british high court ruled favour india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X