ஐஏஎஸ் அதிகாரிகளின் மத்திய பிரதிநிதித்துவத்தில் அதிகக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்காக ஐஏஎஸ் (கேடர்) விதிகளில் திருத்தங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இது தற்போது நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிற்கும் இடையே சச்சரவை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மத்திய அரசு பணிகளுக்கான தற்போதைய விதிகள் என்ன?
இந்திய நிர்வாகப் பணிகளில் மத்திய அரசு பணிகள் தொடர்பான விதிகள் மற்றும் உரிமைகள் ஐ.ஏ.எஸ். (கேடர்) விதிகள் - 1954-ன் கீழ் உள்ள விதி 6 (1)ல் இடம் பெற்றுள்ளது. இந்த விதி கேடர் விதிகளில் 1969ம் ஆண்டு சேர்க்கப்பட்டது.
ஒரு கேடர் அதிகாரி அவர் பணியாற்றும் மாநில அரசின் சம்மதத்துடனும் மத்திய அரசின் சம்மதத்துடனும் மத்திய அரசு அல்லது மற்ற மாநில அரசின் கீழ் இருக்கும் சேவைகளிலோ, நிறுவனத்தின் கீழோ, தனிநபர்கள் அமைப்பின் கீழோ அல்லது சங்கத்தின் கீழோ பணி அமர்த்தப்படலாம். இந்த அதிகாரம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மத்திய அரசு மற்றும் மற்ற மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்த விவகாரம் மத்திய அரசால் தீர்மானிக்கப்படும். சம்பந்தப்பட்ட மாநில அரசு(கள்) மத்திய அரசின் முடிவை செயல்படுத்த வேண்டும். ஜனவரி 1, 2021 நிலவரப்படி, நாட்டில் உள்ள சுமார் 5,200 ஐஏஎஸ் அதிகாரிகளில் 458 பேர் மத்திய அரசுப் பணிகளில் உள்ளனர்.
மத்திய அரசின் முன்மொழிவு என்ன?
டிசம்பர் மாதம் 20ம் தேதி அன்று மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை பல்வேறு மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் பல்வேறு மாநில/கூட்டுப் பணியாளர்கள் மத்திய அரசுப் பணிகளுக்கு தேவையான அதிகாரிகளை வழங்கவில்லை. இதனால் மத்திய அரசு பணிகளுக்கு தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கை மத்தியில் போதுமானதாக இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
விதி 4(1) இல் குறிப்பிடப்பட்டுள்ள அளவு மத்திய அரசுப் பணிகளுக்கு தேவையான, மத்திய அரசின் பல்வேறு மட்டங்களில் பணியாற்ற போதுமான அதிகாரிகளை மாநில அரசுகள் மத்திய அரசிற்கு வழங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாநிலப் பணியாளர்களின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட பலத்துடன் தொடர்புடைய மாநில அரசாங்கத்திடம் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையின் விகிதாச்சாரப்படி சரி செய்யப்பட்டு, மத்திய அரசிடம் பணியமர்த்தப்பட வேண்டிய அதிகாரிகளின் உண்மையான எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட மாநில அரசுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று விதி 6(1)-இல் கூடுதல் நிபந்தனைகளை இணைப்பது தொடர்பான முன்மொழிவு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிபந்தனைக்கு முன்மொழியப்பட்டுள்ள கடிதத்தில் மேலும், கருத்து வேறுபாடு ஏற்படும் பட்சத்தில் “குறிப்பிடப்பட்ட நேரத்தில்” மத்திய அரசின் முடிவை மாநில அரசு(கள்) செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு ஜனவரி 25-க்குள் கருத்துகளைக் கேட்டு, மாநில அரசுகளுக்கு நினைவூட்டல்களை அனுப்பியுள்ளது. பொது நலன் கருதி மத்திய அரசுக்கு கேடர் அதிகாரிகளின் சேவைகள் தேவைப்படும்போது, மத்திய அரசின் கீழ் பணியமர்த்துவதற்காக அத்தகைய அதிகாரிகளின் சேவையை மத்திய அரசு நாடலாம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்திற்கு பல மாநிலங்கள் தங்களின் பதில்களை அனுப்பியுள்ளன. மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் எதிர்ப்பு என்ன?
பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறையின் அமைச்சரான பிரதமர் மோடிக்கு மமதா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரானது இந்த முன்மொழிவு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்தகைய முன்மொழிவானது மாநில நிர்வாகத்தை பெரும் அளவில் பாதிக்கும். முன்மொழியப்பட்ட திருத்தங்களுடம் மத்திய அரசுப் பணிகளுக்கு அதிகாரிகளை பெறுவது என்பது மாநில நிர்வாகத்தை மட்டும் பாதிக்காது. மாநில அரசுகளின் நிர்வாகத்தை மதிப்பீடு செய்து திட்டங்கள் தீட்டுவதும் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இப்படியாக தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிகள் காரணமாக நிச்சயமற்ற தன்மையை உணர முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மத்திய அரசுப் பணிகளுக்கு எவ்வாறு அதிகாரிகள் அனுப்பப்படுகின்றனர்? தற்போதைய முன்மொழிவால் அது எப்படி பாதிக்கும்?
அனைத்திந்திய சேவைப் பணிகளில், மத்திய அரசு பணிகளுக்கு விருப்பம் தெரிவிக்கும் அதிகாரிகள் பட்டியலை மத்திய அரசு கேட்கும். அதில் விருப்பம் தெரிவிக்கும் அதிகாரிகளிடம் இருந்து மத்திய அரசுப் பணிக்கான அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மத்திய அரசின் முடிவை மாநிலம் செயல்படுத்த வேண்டும் என்று விதி 6(1) கூறினாலும், பல சந்தர்ப்பங்களில் இது சாத்தியமற்றதாகிவிட்டது, முன்மொழியப்பட்ட திருத்தம் கூட, மத்திய அரசு பணிகளுக்கு அனுப்பப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கையை "சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து" மத்திய அரசால் தீர்மானிக்கப்படும் என்று கூறி மாநில அரசிற்கு தப்பிக்கும் பாதை ஒன்றை உருவாக்கிவிடுகிறது.
அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கட்டளையிடும் அதே வேளையில், அதிகாரியும் தயாராக இருக்க வேண்டும். ஜனவரி 2021 இல், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அபு சோஹல், விதி 6(1) ஐ நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், மத்திய அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளின் சுமையை மாநிலங்கள் சுமக்க வேண்டும், அதே நேரத்தில் பின்வாங்க மறுக்கும் ஒரு மாநிலத்தின் மீது மத்திய அரசு தனது விருப்பத்தை அமல்படுத்துவதை கடினமாக்குகிறது இந்த விதி என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் மார்ச் 1ம் தேதி அந்த மனுவில் எந்த ஒரு அடிப்படைத் தன்மையும் இல்லை என்று கூறு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
சர்ச்சைகள் ஏற்படும் போது, மத்திய அரசு எவ்வாறு இதனை கையாளுகிறது?
உண்மையில் தங்களின் அதிகாரிகளை மாநில அரசுகளே அதிக காலங்களில் தக்க வைத்துக் கொள்கிறது. 1987ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த அலாபன் பந்த்யோபத்யாய் சமீபத்திய சர்ச்சைகளுக்கு ஒரு முக்கிய உதாரணம். தற்போது ஓய்வு பெற்று மேற்கு வங்க முதல்வரின் தலைமை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு, அவர் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பைத் தொடங்கவிருந்தபோது, அவர் ஓய்வுபெறும் நாளில் அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசு அவரிடம் கூறியது. ஆனால் அதனை அலாபன் செய்யவில்லை. மாநில அரசும் அவரை விடுவிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.
டிசம்பர் 2020-ன் போது பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் வாகன அணிவகுப்பு கொல்கத்தாவிற்கு அருகே தாக்குதலுக்கு ஆளானது. திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு பொறுப்பேற்ற மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பற்றாக்குறையை மேற்கோள் காட்டி மமதா அவர்களை அனுப்ப மறுத்தவிட்டார். மத்திய அரசும் வலியுறுத்தவில்லை.
2001ம் ஆண்டு மத்திய அரசுக்கும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மிக முக்கியமான எடுத்துக்காட்டாகும். 2001, ஜூன் 29ம் தேதி அன்று ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆன நிலையில், முன்னாள் முதல்வர் மறைந்த மு . கருணாநிதியின் வீட்டில் சி.பி. - சி.ஐ.டி. காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திமுக தலைவர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோருடன் கருணாநிதியும் கைது செய்யபட்ட்டார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி வாஜ்பாய் தலைமையில் நடைபெற்று வந்தது.
இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்தில் மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு அழைத்தது மத்திய அரசு. ஜெயலலிதா அனுப்ப மறுத்ததோடு, மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாக்க ஆதரவு தருமாறும் கேட்டுக் கொண்டார்.
தமிழகம் சம்பந்தப்பட்ட மற்றொரு பிரச்சனையில் ஐ.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், சி.பி.ஐக்கு மாற்றப்பட்டார். மாநில அரசு அவரை விடுவிக்க விரும்பவில்லை. ஆனால் மாநில அரசின் விருப்பத்தை மீறி அவர் 2014ம் ஆண்டு சி.பி.ஐயில் இணைந்த பிறகு அவரை இடைக்கால நீக்கம் செய்தது மாநில அரசு. தற்போது லோக்பால் உறுப்பினர்கலில் ஒருவராக உள்ளார் அர்ச்சனா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.