Advertisment

டிவிகளில் எதை ஒளிபரப்ப வேண்டும்? ஒழுங்குமுறைகளை எப்படி வரையறுக்கிறது ஐ.பி. அமைச்சகம்?

ஜனவரி 31 அன்று, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மலையாள செய்தி நிறுவனமான மீடியா ஒன் சேனலில் ஒளிப்பரப்பை பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ரத்து செய்தது. ஆனால், சில மணி நேரங்களில் கேரள உயர் நீதிமன்றம் அமைச்சகத்தின் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது, எனவே, இவ்விவகாரத்தில் ஐ.பி அமைச்சகத்திடம் உள்ள அதிகாரங்கள் என்ன?

author-image
WebDesk
New Update
டிவிகளில் எதை ஒளிபரப்ப வேண்டும்? ஒழுங்குமுறைகளை எப்படி வரையறுக்கிறது ஐ.பி. அமைச்சகம்?

தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சகம், ஜனவரி 31 அன்று, மலையாள செய்தி நிறுவனமான மீடியா ஒன் சேனலில் ஒளிப்பரப்பை தடை செய்தது. சேனலுக்கு பாதுகாப்பு அனுமதி மறுத்த உள் துறை அமைச்சகத்தின் உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது.

Advertisment

எந்த துறைகளில் ஐ.பி அமைச்சகம் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது?

கடந்தாண்டு வரை, தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள், திரையரங்கு மற்றும் தொலைகாட்சியில் வெளியாகும் திரைப்படம், ரெடியோ ஆகியவற்றில் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் இருந்தன. பின்னர் 2021 பிப்ரவரி 25 ஆம் தேதி, ஐ.பி அமைச்சகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலில், டிஜிட்டல் ஊடகங்களின் கன்டன்ட்களையும் ஆய்வு செய்யும் அதிகாரம் விரிவுப்படுத்தப்பட்டது. குறிப்பாக, டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் மற்றும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் ஆகும்.

என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறது?

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்களின் கன்டன்டகளை ஆய்வு செய்து, எந்த வகையான மக்கள் பார்க்கலாம் என குறியீடு வழங்கும். உதாரணமாக, பாலியல் காட்சிகள் அடங்கிய திரைப்படம், பெரியவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் வகைப்படுத்தப்படும். தேவைபட்டால், படத்தின் சில காட்சிகளை நீக்குவதற்கான பரிந்துரைகளை வழங்கும் அதிகாரம் சிபிஎஃப்சி-க்கு உள்ளது. அப்படி சிபிஎஃப்சியின் பரிந்துரைக்கு ஒப்புக்கொண்டு காட்சிகளை நீக்கும் வரை, வாரியம் சான்றிதழ் வழங்காமல் காத்திருக்கும்.

டிவி சேனல்களை பொறுத்தவரை, ​​கடந்தாண்டு அரசாங்கம் பார்வையாளர்களுக்கு ஏதெனும் புகார் இருந்தால், அதனை தெரிவிக்கும் வகையிலான மூன்று அடுக்கு கட்டமைப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தது. பார்வையாளர் முதலில் நேரடியாக சேனலை அணுகலாம். அடுத்து, தொழில்துறையின் சுய-ஒழுங்குமுறை அமைப்பையும், இறுதியாக I & B அமைச்சகம் சம்ந்தப்பட்ட சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பும். பின்னர் ஒரு இடைநிலை அமைச்சரவை குழுவிற்கு (IMC) பிரச்சினை குறிப்பிடலாம். OTT தளங்களில் உள்ள உள்ளடக்கத்திற்கு இதேபோன்ற கட்டமைப்பு உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீடியா ஒன் சேனலுக்கு 48 மணி நேர தடை விதித்தது, டெல்லி கலவரத்தை ரிப்போர்ட் செய்த ஏசியாநெட் உள்பட பல செய்தி நிறுவனங்கள், தொலைகாட்சி சேனலுக்கு தற்காலிக தடை நடவடிக்கையை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. நவம்பர் 2016 ல், பதாகோட் பயங்கரவாத தாக்குதலை வெளியீட்டதற்காக NDTV சேனலுக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டது.

publive-image

1994 ஆம் ஆண்டு கேபிள் டிவி நெட்வொர்க் விதிகளின்படி, சேனலில் ப்ரோகரம் மற்றும் விளம்பரங்களில் ஏதேனும் விதிமீறல் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க மின்னணு ஊடக கண்காணிப்பு செல் உள்ளது. விதிமீறல் கண்டறியும் பட்சத்தில், சேனலின் அப்லிங்க்(கன்டன்ட்களை செயற்கைக்கோளுக்கு அனுப்புவது) மற்றும் டவுன்லிங்க்( பார்வையாளர்களுக்கு ஒளிப்பரப்புவது) உரிமம் பறிக்கப்படும். தற்போது, மீடியா ஒன் விவகாரத்தில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை தான் மேற்கொண்டுள்ளது.

அச்சு ஊடகத்தை பொறுத்தவரை, இந்தியாவின் பிரஸ் கவுன்சில் பரிந்துரைகளை அடிப்படையில், அரசாங்கம் அதன் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம்.

மேலும், கடந்தாண்டு அமலுக்கு வந்த புதிய விதிகள் மூலம், டிஜிட்டல் தளங்களையும் முடக்குவதற்கான அதிகாரம் ஐபி அமைச்சகத்துக்கு உள்ளது.

எந்த கன்டன்ட்-க்கு அனுமதி கிடையாது?

அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள், ரெடியோ, திரைப்படங்கள் அல்லது ஓடிடி தளங்களில், இந்த கன்டன்ட்-க்கு அனுமதி உண்டு, அனுமதி இல்லை என கூறுவது போன்ற எவ்வித சட்டமும் கிடையாது.

பேச்சு சுதந்திரம் அனைத்து தளங்களுக்கும் இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19 (1), பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கும் அதே நேரத்தில் மாநில பாதுகாப்பு, வெளிநாட்டு மாநிலங்களில், பொது அமைதி, நாகரிகம் மற்றும் அறநெறி முதலியன கொண்டு நட்பு உறவு தொடர்பான உள்ளடக்கம் உட்பட சில கட்டுப்பாடுகளும் உள்ளன.

இந்த கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில், நடவடிக்கை எடுக்கப்படலாம். மத உணர்வுகளை புண்படுத்தும் விதிமாக திரைப்படம் எடுக்கப்பட்டதாக பட தயாரிப்பாளர்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளன.

ஜனவரி 2021 இல்,அமேசான் ப்ரைமில் வெளியான Tandav நிகழ்ச்சியில், ஐபி அமைச்சகத்தின் நேரடி அறிவுரைபேரில் சில காட்சிகள் நீக்கப்பட்டன.

சில காட்சிகள் மத மற்றும் சாதி உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக புகார்கள் வந்த பிறகு, அரசாங்கம் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்தது. இச்சம்பவம், புதிய ஐடி விதிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கும் போது வந்தது.

ஏஜேன்சி பங்கு இருக்கிறதா?

உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் ஐபி அமைச்சகத்திடம் மட்டுமே உள்ளன. இருப்பினும், அமைச்சகம் மற்ற அமைச்சகங்கள் மற்றும் உளவுத் துறை அமைப்புகளிலிருந்து வரும் உள்ளீடுகளை நம்பியுள்ளது.

மீடியா ஒன் வழக்கில், உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி வழங்க மறுத்ததால், சேனலின் உரிமம் பறிக்கப்பட்டது. இவ்விவகாரம் குறித்து அமித் ஷாவிடம் தான் பேச வேண்டும், கேரள எம்.பிக்களுக்கு தகவல் ஒளிப்புரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாக தெரிகிறது

ஐ.பி அமைச்சகம் புதிய நடைமுறை ஒன்றையும் பின்பற்றுகிறது. அவசரகால அதிகாரத்தை பயன்படுத்தி, உளவுத் துறை நிறுவனங்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் சில YouTube சேனல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளைத் முடக்குவதற்கான செயல்களில் ஈடுபடலாம்.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், ஐபி அமைச்சகம், உளவுத் துறை உள்ளீட்டின்படி, 60 யூடியூப் சேனல்களை முடக்குவதற்கான நோட்டீஸை பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் நிறுவனங்களுக்கு அனுப்பியது. I & B செயலாளர் அபூரரா சந்திரா கூறுகையில், இந்த யூடியூப் சேனல்களின் உரிமையாளர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், உளவுத் துறை தீவிரமாக கன்டன்ட்களை கண்காணித்து வருகிறது. விதிமீறிய கன்டன்ட் பரப்பப்படும் போது, இந்த கணக்குகளை தடை செய்திட அவசரகால அதிகாரம் பயன்படுத்தப்படும். சேனல் தடை செய்யப்பட்ட விவகாரத்திற்கு எதிராக, தாராளமாக நீதிமன்றத்திற்கு செல்லலாம் என தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Information And Broadcasting Ministry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment