scorecardresearch

ஐஐஎம் நிறுவனங்களும், தன்னாட்சியும் : சமீபத்திய சர்ச்சைகள் கூறுவது என்ன?

IIM autonomy Explained: ஐஐஎம் நிறுவனங்களின் அடிப்படை சீர்திருத்தங்களும், இத்தகைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தன்னாட்சியைப் பற்றிய அடிப்படை கேள்வியை எழுப்புகிறது

ஐஐஎம் நிறுவனங்களும், தன்னாட்சியும் : சமீபத்திய சர்ச்சைகள் கூறுவது என்ன?

ஐஐஎம் (இந்திய மேலாண்மை நிறுவனம்) பல தசாப்தங்களாக நாட்டின் உயர்கல்வி அமைப்பில் அடையாளமாக விளங்கி வருகிறது. கடந்த வாரம், பழைய ஐஐஎம்-ன் (கொல்கத்தா) நிர்வாகக் குழு இயக்குநரின் சில முக்கிய அதிகாரங்களை நீக்கியது.

இதற்கிடையே, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வெளியிட்டவாறு, அகமதாபாத் ஐஐஎம் இயக்குநர், முன்னவர் ஆய்வறிக்கையை ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜக எம்.பியின் கோரிக்கைக்கு இணங்க மறுத்தார்.

இந்த இரண்டு சம்பவங்களின் வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், ஐஐஎம் நிறுவனங்களின் அடிப்படை சீர்திருத்தங்களும், இத்தகைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தன்னாட்சியைப் பற்றிய அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.

ஐஐஎம்-அகமதாபாத் சர்ச்சை?

இந்திய ஜனநாயகம் குறித்த ஆய்வறிக்கையில் இடம்பெற்ற மூன்று கட்டுரைகள் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்த கட்டுரையில், ‘பாஜக இந்து மதத்துக்கு ஆதாரவான உயர் வகுப்பு பிரிவினருக்கான கட்சி’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது .

கடந்தண்டு மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமருக்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில், ஆய்வறிக்கையின் நகலை அனுப்பி வைக்குமாறு மத்தியக் கல்வி அமைச்சகம்  ஐஐஎம் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தது.

சுயாதீன பேராசிரியர்களை கொண்டு ஆய்வறிக்கையை  மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதுவரை முன்னைவர் பட்டம் வழங்குவதை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் சுப்ரமணிய  சுவாமி தனது கடிதத்தில் வலியுறுத்தினார்.

Explained: In recent controversies, IIMs and the question of autonomy

ஆயினும், ​​அகமதாபாத் ஐஐஎம் இயக்குநர்  எரோல் டிசோசா அமைச்சகத்துக்கு எழுதிய பதில் கடிதத்தில், ” ஆய்வறிக்கை தொடர்பான புகார்களை விசாரிக்க அரசாங்கம் நடுவர் அல்ல என்றும், புகார்களை முறையிடுவதற்கு நிறுவனத்திற்குள் பொருத்தமான கல்வி மன்றங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

ஐ.ஐ.எம்-கொல்கத்தா?

கொல்கத்தா ஐஐஎம்-ல் நடந்த சம்பவம் ஐஐஎம் கல்வி நிறுவனங்களின் வரலாற்றில் முதன்மையானது.

நிர்வாக வாரியத்துக்கும், இயக்குநர் அஞ்சு சேத்துக்கும் இடையே கடுமையான பனிப் போர்  நடைபெற்று வருகிறது. அதிகார வரம்புகளை மீறி வருவதாக ஒருவொருக்குவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

கடந்த வாரம் மோதல் நிலை ஒரு புதிய உச்சத்தை அடைந்தது. கொல்கத்தா ஐஐஎம் நிறுவனத்தில்    நியமனங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் இயக்குநரின் முக்கிய அதிகாரங்களை நீக்கும் தீர்மானத்தை வாரியக் குழு நிறைவேற்றியது.

வரலாற்று ரீதியாக, ஐஐஎம் கல்வி நிறுவனங்களின்  தன்னாட்சி எப்படி?

“[ஐஐஎம்] சட்டம் 2017 இல்  இயற்றப்படுவதற்கு முன்பு, ஐஐஎம் நிறுவனங்கள் சமூக அமைப்பாக செயல்பட்டு வந்தன. ​​கல்வி மற்றும் கட்டண மதிப்பு நிர்ணயித்தலில்  தேவைக்கு ஏற்ப முடிவுகளை எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நியாயமான சுயாட்சி இருந்தது. இதன் காரணமாக பழைய ஐஐஎம் (அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர், லக்னோ, கோழிக்கோடு, இந்தூர்) கல்வி நிறுவனங்கள் நிதி விவகாரங்களில் அரசை சார்ந்து இருக்க வில்லை. மேலும் அவர்களின் தன்னாட்சி உறுதிப்படுத்த சிறந்த நிலையில் இருந்தன, ”என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இருப்பினும், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்  நியமனங்களில் அரசின் தலையீடு இருந்தது. இதன் மூலம்   ஐஐஎம் நிறுவனங்கள் மீது அவ்வப்போது தனது  செல்வாக்கை மத்திய அரசு பயன்படுத்தியது,” என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இத்தகையான தன்னாட்சி என்பது மரபு ரீதியான நடைமுறை என்றும்,  மரபை இருதரப்பும் பின்பற்றி மதிக்கும் வரை சிறப்பாக செயல்பட்டு வந்தது . கால சூழல்கள் மாறும்போது,மரபுகள் சமரசம் செய்யப்படும் போதெல்லாம்  ​​உராய்வு ஏற்பட்டது என்றும் அவர்  தெரிவித்தார்.

ஆனால், 2017 வருட புதிய ஐஐஎம் சட்டம் , இந்த தன்னாட்சி முறைக்கு புதிய அடித்தளம் அமைத்தது. “தன்னாட்சியைக் குறைக்கவோ, சட்டத்திற்கு இணங்காத உத்தரவுகளை பிறப்பிக்கவோ முடியாது. இந்திய நாடாளுமன்றம் மூலம் சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் தான் எதுவும் சாத்தியமாகும்,”என்று கூறினார்.

கொள்கை ரீதியான மோதல்? 
ஐஐஎம் நிறுவனங்கள் தங்கள் தன்னாட்சியைப் பாதுகாத்து வருகின்றன. மேலும்,சுதந்திரத்தின் மீதான எந்தவொரு தாக்குதலைம் எதிர்க்க முனைகின்றன.
2003-04 காலகாட்டத்தில், அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் முர்லி மனோகர் ஜோஷி ஆறு ஐஐஎம் கல்வி நிறுவனங்களின் சேர்க்கை கட்டணத்தை  ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ .30,000 வரை குறைத்து உத்தரவு பிறப்பித்தார். இது, அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி தலைமயிலான மத்திய அரசுக்கும், ஐஐஎம் நிர்வாகத்திற்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது. 2004 மக்களவை பொதுத் தேர்தலில் என்.டி.ஏ தோல்வியடைந்து, காங்கிரஸ் அரசு உத்தரவை திரும்ப பெற்றதையடுத்து விவகாரம் தீர்க்கப்பட்டது.
“இந்தியாவிலும் உலகளவிலும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஏதோ ஒரு வடிவத்தில் உதவி செய்து வருகிறது. இருப்பினும், இது பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை பாதிக்கக் கூடாது ”என்று 2014 இல் உயர்கல்வி செயலாளராக ஓய்வு பெற்ற அசோக் தாக்கூர்  தெரிவித்தார்.
தற்போதைய பிரச்சனைகளின் தாக்கங்கள் என்ன? 
கொல்கத்தா ஐஐஎம், அகமதாபாத் ஐஐஎம்  நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலைகள் யாவும் புதிய ஐஐஎம் சட்டம் முன்னெடுத்த அதிகார மாற்றத்தால்  உருவாகியிருப்பதாக ஐஐஎம் சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.
தன்னாட்சி என்பது காகித அளவில் தான் உள்ளது. நிறுவனங்களின் செயல்பாட்டில் வாரியம் அதிக அதிகாரம் செலுத்துவதால் சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் எழுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Iims calcutta iim ahmedabad recent controversies iim autonomy issues