கடந்த வாரம், சென்னை உயர் நீதிமன்றம் இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான இளையராஜாவின் மனுவை ஏற்றுக்கொண்டது. 1980களில் தயாரிக்கப்பட்ட 30 படங்களுக்கான தனது இசைப் படைப்புகள் மற்றும் மாஸ்டர் ரெக்கார்டிங்குகள் மீதான தனது காப்புரிமை உள்ளதை தடுத்த தனி நீதிபதி அமர்வின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்த வழக்கு எதைப் பற்றியது?
இளையராஜாவுக்கு எதிரான இந்த உத்தரவு 2020-ல் வந்தது. 30 படங்களில் உள்ள இசைப் படைப்புகள் மற்றும் ஒலிப்பதிவுகளின் (மாஸ்டர் ரெக்கார்டுகள்) முழுமையான காப்புரிமை கோரி, இந்தியன் ரெக்கார்ட் மேன்யூஃபேக்ச்சரிங் நிறுவனம் (INRECO) மற்றும் பிறரால் அவருக்கு எதிராகத் வழக்கு தொடரப்பட்டது. இந்தியன் ரெக்கார்ட் மேன்யூஃபேக்ச்சரிங் நிறுவனம் இந்த இசைப்படைப்புகளின் முதல் உரிமையாளர்களான அந்தந்த திரைப்பட தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளதாகக் கூறியது.
இசையமைப்பாளர் மற்றும் படைப்பாளி என்ற முறையில் தனது இசைப் படைப்புகளின் மீது காப்புரிமை இருப்பதாக இளையராஜா வாதிட்டார். இது படத்தின் உரிமையாளரின் காப்புரிமையை குற்றஞ்சாட்ட முடியாது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு டிஜிட்டல் உரிமைகள் நடைமுறைக்கு வந்ததாகவும், இசை நிறுவனம் அவருடைய படைப்பின் உரிமையை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்றும் அவருடைய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இளையராஜாவின் படைப்புகளுக்கு தார்மீக மற்றும் எழுத்துப்பூர்வ உரிமைகள் இருந்ததைத் தவிர, அவருடைய இசைப் படைப்புகளைப் பயன்படுத்துவதற்கும் பிரத்யேக உரிமையுடன் இந்தியன் ரெக்கார்ட் மேன்யூஃபேக்ச்சரிங் நிறுவனம் பதிப்புரிமைக்கு உரிமையாளராக இருக்கும் என 2020-ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு பாடல் ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கும்போது, அது ஒரு கூட்டுப்படைப்பாகும், தயாரிப்பாளரே உரிமையாளராக இருப்பார் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரத்தில், இசையமைப்பாளரின் அனுமதியின்றி ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வானொலி சேனல்களில் இசையமைப்பாளரின் பாடல்களை இசை நிறுவனங்கள் பயன்படுத்தி லாபம் ஈட்டகூடாது என நீதிமன்றம் தடை விதித்தது.
சட்டப்படி ஒரு பாடல் யாருக்கு சொந்தம்?
ஒரு பாடல் பொதுவாக மூன்று கூறுகளை உள்ளடக்கியது - வரிகள், இசை மற்றும் குரல் என்ற மூன்று கூறுகளை உள்ளடக்கியது. காப்புரிமைச் சட்டம், 1957 (2012 இல் திருத்தப்பட்டது) படி, காப்புரிமைச் சட்டத்தின் கீழ் காப்புரிமையின் உரிமையாளர்களுக்கும் படைப்பாளிக்கும் இடையே தெளிவான வரையறை உள்ளது. சினிமா அரங்குகளுக்கு வெளியே பாடல் ஒலித்தால் பாடலாசிரியர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் ராயல்டி உரிமையை சட்டம் வழங்குகிறது. பிரிவு 2(d)(ii) இன் படி, இசைப் படைப்பின் இசையமைப்பாளர் ஒரு படைப்பாளி மற்றும் பாடலாசிரியர் என்பது பிரிவு 2(d)(i) இன் கீழ் இலக்கியப் பணி (பாடல் வரிகள்) தொடர்பாக ஒரு ஆசிரியர் மற்றும் ஒலிப்பதிவு தொடர்பாக தயாரிப்பாளர் பிரிவு 2 (d)(v) இன் கீழ் படைப்பாளி ஆவார். அந்தப் பாடல் ஒரு படத்தின் பகுதியாக இருந்து அப்படியே ஒலிக்கப் போகிறது என்றால், அந்தப் பாடலின் உரிமையாளர் தயாரிப்பாளர்தான். ரெக்கார்டிங் லேபிளுக்குச் சொந்தமான ஆல்பமாக இருந்தால் விதி ஒன்றுதான்.
ஒரு பாடலில் மூன்று வெவ்வேறு கூறுகள் இருப்பதால், மூன்றையும் தனித்தனியான இலக்கியப் படைப்பு இசைப் படைப்பு மற்றும் ஒரு கலைஞனின் உரிமைகளின் கீழ் பதிவு செய்யலாம். பாடல் முழுவதுமாக (மாஸ்டர் ஒலிப்பதிவு) இன்னும் தயாரிப்பாளரிடம் (இசை லேபிள் அல்லது திரைப்பட தயாரிப்பாளர்) இருக்கும்.
உதாரணமாக, ஒரு உணவகம், ஏ ஆர் ரஹ்மானின் பாடல்களை இசைக்கப் போகிறது அல்லது Spotify ஷங்கர் எஹ்சான் லாய் பிளேலிஸ்ட்டை இயக்கினால், அவை இருக்கும் படங்களின் நோக்கத்திற்கு வெளியே இருக்கும். இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் ராயல்டியில் ஒரு சதவீதத்தைப் பெறுவார்கள். ஏனெனில் Spotify அதன் சந்தாதாரர்கள் மூலம் சம்பாதித்துக்கொண்டிருக்கும்போது, இசையைக் கேட்கும் வாடிக்கையாளர்களிடம் உணவகம் கட்டணம் வசூலிக்கிறது.
திரைப்படம் மற்றும் இசை தயாரிப்பு நிறுவனங்கள், பொது நிகழ்ச்சி உரிமங்கள் மற்றும் கட்டணங்களை வசூலிக்க மூன்றாம் தரப்பினராக கையெழுத்திடுவது அவசியம். இதுபோன்ற சில நிறுவனங்களாக இந்திய பெர்ஃபார்மிங் ரைட்ஸ் சொசைட்டி லிமிடெட் மற்றும் ஃபோனோகிராபிக் பெர்ஃபார்மன்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இதற்கு முன் இளையராஜா காப்புரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டதில்லையா?
ஆம், எல்லா இசை உரிமைகளும் மியூசிக் லேபிள்களுக்குச் சொந்தமான காலத்திலிருந்து, அவருக்கு ராயல்டி கொடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 1981-ம் ஆண்டில், அவருடைய நண்பர் எம்.ஆர். சுப்ரமணியனுடன் சேர்ந்து, அவர் தனது சொந்த நிறுவனமான எக்கோவைத் தொடங்கினார். இது ஐந்தாண்டு ஒப்பந்தத்தின் கீழ் அவருடைய அனைத்து பாடல்களுக்கும் உரிமை பெற்றது. ஆனால், 1992ல் எக்கோவில் இருந்து விலகிய இளையராஜா, 2014ல் கேசட் விற்பனை மூலம் தனக்கு ராயல்டி எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறி, அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். நீதிபதி அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். இளையராஜா தனது இசையை தியேட்டர் அல்லாத பயன்பாடுகளில் மட்டுமே கட்டுப்படுத்த அனுமதித்தார்.
2013-ல், இளையராஜா மலேசியாவைச் சேர்ந்த ஏஜிஐ மியூசிக் என்ற இசை நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அது உரிமை பெற்ற ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆன பிறகு, தனது இசையின் மூலமான பலனைச் சுரண்டுவதாகக் கூறினார். நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. ஒப்பந்தம் ஐந்தாண்டுகளுக்கானது என்றும் ஏஜிஐ கூறியது போல் 10 ஆண்டுகள் அல்ல என்றும் கூறியது.
2017-ம் ஆண்டில், இளையராஜா தனது நீண்டகால நண்பரான எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பினார். அவருடைய ஒப்புதல் மற்றும் உரிமம் இல்லாமல் தனது இசையை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இது பாடலாசிரியருடன் பாலசுப்ரமணியமும் அவர் பாடிய பாடல்களில் ஒரு பகுதியை சொந்தமாக வைத்திருப்பதாக பலர் வாதிட்டதால் விவாதம் எழுந்தது.
2018-ம் ஆண்டில், பி.டி. செல்வக்குமார் தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு, இளையராஜா வசூலிக்கும் ராயல்டியில் ஒரு பகுதியை இந்தப் பாடல்களின் தயாரிப்பாளர்களுக்கு வழங்கக் கோரி வழக்குத் தொடர்ந்தது. தயாரிப்பாளர்கள் இந்தப் பாடல்களுக்கு கமிஷன் கொடுத்து ஒப்பந்தம் செய்து பணம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு, இளையராஜா ஒரு வீடியோ அறிக்கையில், “எனது அனைத்து பாடல்களின் உரிமையும் என்னிடம் உள்ளது… நீங்கள் முன் அறிவிப்பின்றி மேடையில் எனது பாடல்களைப் பாடி இசைக்க விரும்பினால், நீங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு பொறுப்பாவீர்கள்.” என்று அறிக்கை வெளியிட்டார்.
தொடரும் வழக்கு… அடுத்து என்ன?
தனது மேல்முறையீட்டு மனுவில் தனி நீதிபதி அமர்வு படைப்பாளியையும் படைப்பாளியின் உரிமையின் கருத்தை புரிந்துகொள்வதில் தவறு செய்ததாக இளையராஜா வாதிட்டார். ஆதாரம் இல்லாமல், தேவையான தரப்பினரை (திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள்) விசாரிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமவு முன்பு, இந்த வழக்கில் எதிர்தரப்பான சென்னையில் உள்ள INRECO, மலேசியாவில் உள்ள ஏஜிஐ, Music Sdn Bhd மற்றும் ஹரியானாவில் உள்ள Unisys Info Solutions Private Limited ஆகிய நிறுவனங்களுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.