இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறித்து கடந்த மாதம் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவில் கடந்த ஆண்டு அதிகளவில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கணக்கீடு படி இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 2,967 என கூறப்பட்டது.
19 வருட கணக்கீடு கொண்டு அதாவாது, 2000 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கீடு படி இதே இந்தியா தான் சட்டத்திற்கு விரோதமாக புலிகளை கடத்தும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. தோல் மற்றும் பிற தேவைகளுக்காக புலிகள் அதிகளவில் சட்டத்திற்கு விரோதமாக கடத்தப்படுவதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.இதில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.
புதிய அறிக்கையின் புள்ளி விவரமானது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தற்போது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தில் செயல்பட்டு வருபவர்கள் ஆகியோர் இணைந்து தொகுக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சர்வதேச இயற்கை பாதுகாப்புக்கான ஒன்றியம் ஆகியோரும் இண்ணைந்து முழு அறிக்கையை தயாரித்துள்ளனர்.
குறிப்பு: இந்த வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரமானது, சட்ட விரோதமாக எந்தெந்த நாடுகளில் புலிகள் கடத்தப்படுகின்றன மற்றும் என்ன தேவைக்காக இந்த புலிகள் கடத்தல் நடைபெறுகிறது என்பது தான்.
ஒட்டுமொத்தமாக, உலகளவில் 2000 ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை 32 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கீடுப்படி 2,359 புலிகள் இந்த சட்ட விரோத கடத்தலால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுவரை பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த 1,142 சம்பவங்கள் இந்த சட்ட விரோத புலி கடத்தலை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிருடன் இருக்கும் புலிகள் மற்றும் சடலமான புலிகளை தவிர புலி பாகங்கள் தோல், எலும்புகள் அல்லது நகங்கள் போன்றவை மட்டுமே தனித்தனியாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான இந்த கடத்தலில், புலியின் பாகங்களான புலித்தோல்கள், உயிருள்ள மற்றும் இறந்த முழுப் புலியின் உடல், மற்றும் புலியின் எலும்புகள் அதிக எண்ணிக்கையில் கடத்தப்படுவது தக்க ஆதாரங்களாகும்.
உதாரணமாக, மூன்று மண்டை ஓடுகள் மற்றும் 74 நகங்கள் கைப்பற்றப்பட்டன என்று எடுத்துக் கொண்டால். ஒரு புலிக்கு ஒரு மண்டை ஓடு மற்றும் 18 நகங்கள் இருப்பதால், மண்டை ஓடுகள் குறைந்தது மூன்று புலிகளையும், 74 நகங்கள் நான்கு புலிகளுக்கு மேல் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் மொத்த இறப்பு குறைந்தபட்சம் 5 ஆவது இருக்கும்.
ஆண்டுதோறும் சராசரியாக 60 இறப்புகள் பதிவாகின்றன, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 124 புலிகளின் உடல்கள் கைப்பற்றப்படுகின்றன. முதல் மூன்று நாடுகள் பட்டியலில் இந்தியா ( 463 அல்லது 40.5%) மற்றும் சீனா (126 அல்லது 11.0%), இந்தோனேசியா (119 அல்லது 10.5%).
சமீபத்தில் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பிடிப்பின் அறிக்கை படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆகும். 4 வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 2,226 என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூல 56% இந்தியாவில் புலிகள் உயர்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இதனுடன் இந்தியா சட்டவிரோதமாக புலி கடத்தலில் முதலிடத்தை பெற்றுள்ளது. இதில் கைப்பற்றப்பட்ட பல்வேறு உடல் பாகங்களைப் பொறுத்தவரை, புலி தோல்கள் (38%), எலும்புகள் (28%) மற்றும் நகங்கள் மற்றும் பற்கள் (42%) ஆகியவற்றுக்கான நாடுகளில் இந்தியா அதிக பங்கைக் கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.