ஒரே நாளில் இரண்டு பருவமழைகள் : ஒன்றின் துவக்கம் – மற்றொன்றின் முடிவு : தாக்கு பிடிக்குமா தமிழகம்?…

Monsoon forecast : அக்டோபர் 16ம் தேதி புதன்கிழமை, வானிலை அறிஞர்களுக்கு ஒரு அரிய நிகழ்வு நாள் ஆகும். ஏனெனில், இந்த நாளில் தான் தமிழகத்தில் தென்மேற்கு பருவழை முடிந்துள்ளது ; வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.

By: Updated: October 19, 2019, 01:05:09 PM

அக்டோபர் 16ம் தேதி புதன்கிழமை, வானிலை அறிஞர்களுக்கு ஒரு அரிய நிகழ்வு நாள் ஆகும். ஏனெனில், இந்த நாளில் தான் தமிழகத்தில் தென்மேற்கு பருவழை முடிந்துள்ளது ; வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.

தென்மேற்கு பருவமழை, ஒட்டுமொத்தமாக நாடு முழுவதற்கும் மழையை தரவல்லது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் நல்ல மழைப்பொழிவு காணப்படும். இருந்தபோதிலும், தமிழகத்தை பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழையின்போதே, இங்கு அதிகமான மழைப்பொழிவு காணப்படுகிறது.

நாட்டின் வருடாந்திர மழைப்பொழிவில், 75 சதவீதம் தென்மேற்கு பருவமழையின் போதும், 11 சதவிதம், வடகிழக்கு பருவமழையின் போதும் கிடைக்கிறது.

பெயர்க்காரணம்

வடகிழக்கு பருவமழையால், நாட்டின் வடகிழக்கு பகுதிகள் பயன்பெறுவதில்லை. அந்த பகுதியில் இருந்து உருவாகி அது பயணிக்கும் திசையை பொறுத்து வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை என்று பெயர் இடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில், வடகிழக்கு பகுதியில் இருந்து தென்மேற்கு பகுதிக்கும் ; தென்மேற்கு பருவமழை காலத்தில், தென்மேற்கு பகுதியில் இருந்து வடகிழக்கு பகுதிக்கும் இடம்பெயர்ந்து மழைப்பொழிவை வெகுமதியாக வழங்குகிறது.

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள், வடகிழக்கு பருவமழை மாதங்கள் ஆகும். பெரும்பாலும், வடகிழக்கு பருவமழை, பெரும்பாலும் அக்டோபர் 20ம் தேதிவாக்கில் தான் துவங்கும். தென்மேற்கு பருவமழை நிறைவடைவதன் காரணமாக, தெற்கு தீபகற்ப பகுதியில், அக்டோபர் முற்பகுதியில் நல்ல மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை, செப்டம்பர் 30ம் தேதிவாக்கில் நிறைவடையும். ஆனால், இந்தாண்டில் தான் ஒரேநாளில் தான் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ளது, அதேநாளில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.

இந்தியாவில் இயங்கிவரும் 36 வானிலை பிரிவுகளில், தமிழகம், (புதுச்சேரி உள்பட), கேரளா, கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா மற்றும் தெற்கு உட்புற கர்நாடகா என 5 பிரிவுகள் மட்டுமே, வடகிழக்கு பருவமழையின் போது மழையை பெறுகின்றன.

வடகிழக்கு பருவமழை, தமிழகத்துக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், தமிழகத்தின் வருடாந்திர மழைப்பொழிவான 914.4 மி.மீட்டர் மழையில், வடகிழக்கு பருவமழையின்போது மட்டுமே 438 மி,மீ. மழையை தமிழகம் பெற்று விடுகிறது. இந்த காலகட்டத்தின் சில மாவட்டங்களில் 60 சதவீதம் வரை அளவிற்கு கூட மழைப்பொழிவு காணப்படுகிறது. ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பிரதேசம் தலா 30 சதவீதமும், தெற்கு உட்புற கர்நாடகா 20 சதவீத அளவிலான மழையையும் இந்த காலகட்டத்தில் பெறுகிறது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை, சீரான அளவில் இருக்கும். மழைப்பொழிவு 100 முதல் 102 சதவீதமாக இருக்கும். நவம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு இருப்பதாக ஐஐடி பாம்பேயில் பருவநிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஸ்ரீதர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Imd weather forecast northeast monsoon southwest monsoon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X