Advertisment

மோடி குறிப்பிட்ட பயொஜெட் எரிபொருள்: விமானத் துறையில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

வரலாற்று சம்பவம்: 10% பயோஜெட் எரிபொருள் கலவை மூலம் ஏஎன் -32 விமானம் ஜனவரி 31ம் தேதியன்று லே நகரின்  குஷோக்பாகுலா ரிம்டோச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மோடி குறிப்பிட்ட பயொஜெட் எரிபொருள்:  விமானத் துறையில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

What is biojet fuel: நேற்று (பிப்ரவரி 23) 'மனதின் குரல்' என்ற மாதாந்திர வானொலி உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விமானப்படை போக்குவரத்து விமானத்தில் உயிரி எரிபொருள் (Biofuel) பயன்படுத்துவதைப் பாராட்டினார். இதுபோன்ற கண்டுபிடிப்புகள் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் எண்ணெய் இறக்குமதி தேவையைக் குறைக்கும் என்று கூறினார்.

Advertisment

10% பயோஜெட் எரிபொருள் மூலம்  இந்திய விமானப்படையின் ஏஎன் -32 விமானம் ஜனவரி 31ம் தேதியன்று லே நகரின்  குஷோக்பாகுலா ரிம்டோச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.  இது வரலாற்று முக்கியத்துவமான சம்பவம் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒரு விமானத்தின் இரண்டு இன்ஜினிலும் பயோஜெட் கலவை எரிபொருள் மூலம் இயக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் பெருமை அடைந்தார்.

பயோஜெட் எரிபொருள் :  பயோஜெட் எரிபொருள் என்பது, 'சில மரங்களில் உற்பத்தியாகும் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படுகிறது.  இந்தியாவின் பல்வேறு பழங்குடியின மக்கள் வாழும்  பகுதிகளிலிருந்தும் இந்த எண்ணெய் கொள்முதல் செய்யப்படுகிறது என்று பிரதமர் தனது உரையில் விளக்கினார்.

சத்தீஸ்கர் பயோடீசல் மேம்பாட்டு ஆணையத்தின் ஜட்ரோபா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த எரிபொருள், (சிபிடிஏ), தேஹ்ரடுன் சிஎஸ்ஐஆர்-ஐஐபி நிறுவனத்தின் மூலம்  பதப்படுத்தப்படுகிறது.

'லே' விமானப் பயணம்:  'லே' நகரம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 10,682 அடி உயரத்தில் உள்ளது, இது உலகின் மிக உயர்ந்த மற்றும் மிகவும் கடினமான செயல்பாட்டு விமானநிலையங்களில் ஒன்றாகும். தெளிவான வானிலையின் போது கூட, லே நகரில் ஒரு விமானத்தை இயக்குவது சவாலான விஷயம். ஏனெனில் அசாதாரன காற்று, சவாலான வளிமண்டலம், விமான என்ஜின்களின் மின் உற்பத்தியை இயல்பாகவே குறைக்கும்.

அது ஏன் முக்கியமானது ? 'லே' போன்ற இடங்களில் பயோஜெட் எரிபொருளின் செயல்திறனை மதிப்பீடு செய்வது செயல்பாட்டு கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பயோஜெட் எரிபொருள் கலவை கொண்ட விமானத்தின் என்ஜின் ஒரு கடினமான சூழல் தன்மைகள் கொண்ட ஒரு இடத்தில் பயணிக்க முடியும் என்ற கருத்தை வெற்றியாகியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த  சிஸ்டம்ஸ் டெஸ்டிங் எஸ்டாபிளிஷ்மென்ட் (ஏ.எஸ்.டி.இ), மற்றும் செயல்பாட்டு படைப்பிரிவுகளின் விமானிகள் அடங்கிய குழுவினர் இந்த சோதனைகளை மேற்கொண்டதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த வெற்றிகரமான சோதனையின்,புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்குவதற்கான திறனை இந்திய விமானப்படை நிரூபித்துள்ளது.

தொழில்நுட்பம்:  இந்த எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.பி 2013 இல் உருவாக்கப்பட்டது.  எவ்வாறாயினும் அந்த தொழில்நுட்பம் சோதிக்கப்படவில்லை,  வணிக பயன்பாட்டிற்க்கான சான்றிதழையும் பெறவில்லை.

2018 ஆம் ஆண்டில், இந்திய விமானப்படை இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளித்தது. தனது மனித வளங்களையும், பொருள் வளங்களையும்  எரிபொருள் சோதனைக்கு முழுமையாக இந்திய விமானப்படை அர்ப்பணித்தது.

அந்த ஆண்டு ஜூலை 27 அன்று, உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது தொடர்பான சிஐஐ-எஸ்ஐடிஎம் (CII-SIDM) நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய அப்போதைய ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ்.தனோவா, இந்திய விமானப்படை பயோஜெட் எரிபொருட்களை ஊக்குவிக்கும்  என்று அறிவித்தார். டிசம்பர் 17, 2018 அன்று, ASTE விமானிகளும், பொறியாளர்களும் பயோஜெட் எரிபொருள் கலந்த முதல் ஏஎன்-32 போர் விமானத்தில் பறந்தனர்.

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment