Advertisment

கோவிட்-19 பாதித்து குணமானவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் ஒரு டோஸ் போதும்; ஆய்வில் கண்டுபிடிப்பு

In Covid-19 survivors, single Pfizer dose boosts response against key strains: study: பார்ட்ஸ் மற்றும் ராயல் மருத்துவமனையில் உள்ள இங்கிலாந்தின் மருத்துவ பணியாளர்களில் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதை பற்றிய கண்டுபிடிப்புகளை சயின்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது

author-image
WebDesk
May 04, 2021 13:54 IST
கோவிட்-19 பாதித்து குணமானவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் ஒரு டோஸ் போதும்; ஆய்வில் கண்டுபிடிப்பு

முதல் வகை கோவிட் -19 பாதித்தவர்களுக்கு, ஃபைசர் தடுப்பூசியின் ஒரு டோஸ், தற்போதைய SARS-CoV-2 கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. அதேநேரம் முன்னர் நோய்த்தொற்று ஏற்படாத மற்றும் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே பெற்றவர்களில், உள்ள வைரஸ் வகைகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இருக்காது.

Advertisment

லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம், இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் யுனிவர்சிட்டி கல்லூரி லண்டன் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையில், பார்ட்ஸ் மற்றும் ராயல் மருத்துவமனையில் உள்ள இங்கிலாந்தின் மருத்துவ பணியாளர்களில் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதை பற்றிய கண்டுபிடிப்புகளை சயின்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசியின் ஒரு டோஸுக்குப் பிறகு, முன்னர் லேசான அல்லது அறிகுறியற்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா வகைகளுக்கு, எதிரான பாதுகாப்பை தடுப்பூசி கணிசமாக மேம்படுத்தியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். முந்தைய கோவிட் -19 இல்லாதவர்களில், முதல் டோஸுக்குப் பிறகு நோயெதிர்ப்பு செயல்பாடு சற்று வலுவாக இருந்தது, இதனால் அவர்களுக்கு மாறுபட்ட வகை வைரஸ்களினால் ஏற்படும் ஆபத்து குறையக்கூடும்.

SARS-CoV-2 இன் உண்மையான வகை, அதே போல் இங்கிலாந்து (B.1.1.7) மற்றும் தென்னாப்பிரிக்கா (B.1.351) ஆகியவற்றின் மாறுபட்ட வகைகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய இரத்த மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆன்டிபாடிகளுடன், ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வகையான இரத்த வெள்ளை அணுக்களிலும் கவனம் செலுத்தினர்: பி-செல்கள், அவை வைரஸை ‘நினைவில் கொள்கின்றன’; மற்றும் டி செல்கள், அவை பி செல் நினைவகத்திற்கு உதவுகின்றன மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டு அழிக்கின்றன.

முந்தைய தொற்று, முதல் டோஸுக்குப் பிறகு, அதிகரித்த டி செல், பி செல் மற்றும் நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் செயல்பாடு, ஆகியவற்றுடன் தொடர்புடையதாகிறது, இது SARS-CoV-2 வகைக்கு மட்டுமல்லாமல் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா வகைகளுக்கு எதிராக பயனுள்ள பாதுகாப்பை வழங்கக்கூடும்.

இருப்பினும், முந்தைய SARS-CoV-2 நோய்த்தொற்று இல்லாதவர்களில், ஒரு தடுப்பூசி டோஸ் SARS-CoV-2 மற்றும் மாறுபாடுகளுக்கு எதிராக குறைந்த அளவிலான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளை விளைவித்தது, இதனால் அவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதால், இரண்டாவது டோஸ் தடுப்பூசி முக்கியத்துவம் பெறுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் குழு வைரஸின் இரண்டு வகைகளையும் உற்று நோக்கியது; இருப்பினும், பிரேசில் (பி .1) மற்றும் இந்தியா (பி .1.617 மற்றும் பி .1.618) வகைகள் போன்ற புழக்கத்தில் உள்ள பிற வகைகளுக்கு இந்த தடுப்பூசி பற்றிய கண்டுபிடிப்புகள் பொருந்தும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.  ஆதாரம்: லண்டன் ராணி மேரி பல்கலைக்கழகம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Covid 19 Vaccine #Pfizer #Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment