ஆப்கன் முதல் சீனா வரை… இந்தியா இந்த ஆண்டு எதிர்கொண்ட சவால்கள் என்ன?

இந்த 2021ம் ஆண்டில் அரசு நடவடிக்கைகள் ரீதியில் இந்தியா சந்தித்த சவால்கள், நெருக்கடிகள், மாற்றங்கள் மற்றும் உண்மைகள் என்ன என்பதையும் 2022ம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன என்பதை அலசுகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு

India news, current affairs, challenges from China and Afghanistan

Shubhajit Roy |

challenges from China and Afghanistan : கொரோனா தொற்றின் கடினமான இரண்டு ஆண்டுகளை கடந்த பிறகு மக்கள் தற்போது தொற்றுக்கு அப்பாற்பட்ட வாழ்வை சுவாசிக்க துவங்கியுள்ளனர். இந்த 2021ம் ஆண்டில் அரசு நடவடிக்கைகள் ரீதியில் இந்தியா சந்தித்த சவால்கள், நெருக்கடிகள், மாற்றங்கள் மற்றும் உண்மைகள் என்ன என்பதையும் 2022ம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன என்பதை அலசுகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு

Hard Realities : தாலிபான்களின் எழுச்சி

19 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வெளியேற பிறகு தாலிபான் அந்நாட்டை கட்டுக்குள் கொண்டு வந்தது. இது இந்தியாவிற்கு சவாலான காலத்தை தரும் நிகழ்வாகும். அந்நாட்டுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை மேற்படுத்த டெல்லி முயற்சி செய்தது. அனைத்து தயக்கங்களையும் கைவிட்ட பிறகு இறுதியில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட தொடர்பை ஆப்கானிஸ்தானுடன் மேற்கொள்ள முடிவு செய்தது இந்தியா. தீவிரவாதம் மற்றும் சிறுபான்மையினர், பெண்களின் உரிமைகள் தொடர்பாக தெளிவான எச்சரிக்கைகளை பதிவு செய்த அதே வேளையில் மனிதாபிமான உதவிகளை செய்ய தயாராகவும் உள்ளோம் என்பதை வெளிப்படுத்தியது இந்தியா. கடந்த ஒரு வருடத்தில் 80 மில்லியன் டாலர்களுக்கு மேலாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதி அளித்துள்ளது இந்தியா. கடந்த இரண்டு தசாப்தங்களில் 3 பில்லியன் டாலருக்கு மேலான உதவிகளை இந்தியா புரிந்துள்ளது. இந்தியா தாலிபானை தற்போது ஒரு அரசியல் அமைப்பாக அணுகுகிறது. IC-814 விமானம் கடத்தப்பட்ட பழைய நிகழ்வுகளை புதைக்க விரும்பினாலும், பாகிஸ்தானின் ராணுவத்தினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு தாலிபான் அமைப்பு கட்டுப்படுத்தப்படுவதாக தெரிகிறது. தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை வெளிப்படையாக பாராட்டியது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுடன் போட்டி

ஒன்றரை வருடங்களாக கிழக்கு லடாக்கில் அத்துமீறல்களை அரங்கேற்றி வந்த சீனா இரண்டு இடங்களை தவிர இதர இடங்களில் தன்னுடைய ராணுவ வீரர்களை திரும்பிப் பெற்றது. ஆனால் எல்லைப் பகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை. கொரோனா தொற்றால் உலக நாடுகளே பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தன்னுடைய அதிகாரத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் களம் இறங்கியது சீனா. இந்திய எல்லையில் தாக்குதலை நடத்திய சீனா, புதிய விமான நிலையங்களை கட்டியுள்ளதாகவும், ஹெலிகாப்டர்களை தரையிறக்கியதாகவும் செய்திகள் வெளியாகின.

கடந்த காலங்களில் சீனா வியட்நாமியர்களின் மீன்பிடி படகுகளை தாக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல்களை தாக்கியது. மலேசியாவின் ட்ரிலிங் செயல்களை தாக்கியது. தற்போது பூடான் நாட்டில் புதிதாக நிலம் தொடர்பாக உரிமை கோரி வருகிறது. அருணாச்சலப் பிரதேச எல்லைகளில் கிராமங்களை உருவாக்கி வருகிறது.

ஜோ பைடன் கீழ் செயல்படும் அமெரிக்கா

நான்கு ஆண்டுகள் டொனால்ட் ட்ரெம்பின் ஆட்சிக்கு பிறகு ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்றினார். உலக அரங்கில் அமெரிக்காவை மீண்டும் கொண்டு வரும் வாகியில் பாரீஸ் காலநிலை ஒப்பந்தம், ஐ.நா. மற்றும் அதன் உறுப்பு அமைப்புகளின் நிகழ்வுகளில் பேசினார்.

இந்தியாவின் பார்வையில், சீனா மீதான ட்ரெம்பின் கொள்கைகளையே இவரும் தொடருகிறார் என்பது புலப்படுகிறது. சீனாவின் மீது பொருளாதார தடையை விதித்துள்ள அமெரிக்கா, குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட முதல் குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. பெய்ஜிங்கின் உறுதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட அகுஸ் (AUKUS) ஒப்பந்தத்தை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது மற்றும் அகுஸ் ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அமெரிக்காவின் கூட்டணி நாடுகளில் ஒன்றான ஃப்ரான்ஸை கடுமையாக கோபமூட்டியது. அமெரிக்காவின் நன்பகத்தன்மை குறித்து தற்போது அந்நாடு கேள்வி எழுப்பியது.

அமைதியை இழந்த அண்டை நாடுகள்

பிப்ரவரி 1ம் தேதி அன்று ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு மியான்மரில் பதட்டம் நிலவியது. ஆங் சான் சூ கி உள்ளிட்ட பலரை வீட்டுக்காவலில் வைத்தது ராணுவம். மியான்மரின் ராணுவ ஆட்சியைக் கண்டிப்பதோடு நின்று கொண்டிருந்த இந்தியா, தற்போது வெளியுறவுச் செயலரின் வருகையால் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட துவங்கியுள்ளது இந்தியா. வடகிழக்கில் இந்திய ராணுவ வீரர்கள் கிளர்ச்சிக் குழுக்களால் குறிவைக்கப்பட்ட சம்பவங்களுக்கு பிறகு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது இந்தியா.

2021ம் ஆண்டும் எல்லைக் கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்கும் உறுதிப்பாட்டோடு பாகிஸ்தானுடனான உறவை ஆரம்பித்தது இந்தியா. ஆனால் ஜம்மு காஷ்மீரில் ஜூன் மாதம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது, இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றது மற்றும் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளைக் கொன்றது மற்றும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் பொதுமக்கள் மீதான தாக்குதல் போன்றவை அமைதியை சீர் குலைத்தது.

உதவிக் கொள்கையில் மாற்றம்

கோவிட்19 இரண்டாம் அலையின் போது ஏற்பட்ட மருத்துவ நிலைகளை சமாளிக்க உலக நாடுகளிடம் இருந்து நன்கொடைகளை பெற துவங்கியது இந்தியா. 2004ம் ஆண்டு சுனாமிக்கு பிறகு உலக நாடுகளிடம் இருந்து நன்கொடையை பெற கூடாது என்ற இந்திய அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்தது. சீனாவில் இருந்து ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை வாங்குவதில் இந்தியாவுக்கு “கருத்து சார் பிரச்சனை ஏதும் இல்லை” என்று கூறப்பட்டது. மாநில அரசுகளும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து இவற்றை வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

ரஷ்யாவுடனான உறவு

சீனாவுடனான மோதல் இந்தியாவின் ஸ்ட்ரஜிக் கணக்கில் ரஷ்யாவின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர வைத்தது. அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளிடம் இருந்து ராணுவ உபகரணங்களை பெற்றாலும் 70 ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய ஆயுத சப்ளையராக இருந்து வருகிறது. ஆனால், S-400 வாங்குவது அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளை சோதிக்கும், மேலும் இந்த ஏவுகணை அமைப்பு பயன்படுத்தப்பட்டவுடன் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை சந்திக்கும் சாத்தியமான சூழல் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

அமெரிக்கா வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் தலையீடும் இந்தியாவுக்கு சவாலாக உள்ளது. மாஸ்கோ ஆப்கானிஸ்தானில் முக்கிய பங்காற்றுகிறது, பெய்ஜிங்குடனான அதன் உறவுகள் இந்தியாவின் சில முடிவுகளை பாதிக்கின்றன.

சவால்களும் வாய்ப்புகளும்

தாலிபானை சமாளிக்கும் இந்தியா

ஆப்கானிஸ்தானில் தலைவர்கள் மற்றும் குழுக்களை தேர்ந்தெடுத்து நியமித்து காபூலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ற சூழலில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பிராந்திய மற்றும் உலக நாடுகளுடனான பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு முதல் படியாகும். ஆசிய நாடுகள், ரஷ்யா மற்றும் ஈரானுடனான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட பேச்சுவார்த்தைகள் என அனைத்தும் இந்தியாவை அந்த பாதை நோக்கி பயணிக்க வைக்கும் முயற்சிகளில் ஒன்றாக உள்ளது. அதே இலக்கை நோக்கி மேலும் ஐந்து மத்திய ஆசிய தலைவர்களுக்கு குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமாபாத் அந்த மூலோபாய இடத்தை வழங்குவதற்கான மனநிலையில் இல்லை, மேலும் மனிதாபிமான உதவியை அனுமதிப்பதன் மூலம் தலிபான் ஆட்சிக்கு உதவ அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் தீவிரவாத குழுக்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வுகள் குறித்தும் இந்தியா அச்சம் தெரிவித்துள்ளது.

சீனாவுடனான நிலைப்பாடு

ஒருவரை மற்றொரு நபர் சீண்டும் போது அதனை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் சீனாவை கையாளுகிறது இந்தியா. ஆனால் அதற்காக கிழக்கு லடாக்கில் 2 ஆண்டுகளாக கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியில் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. எல்லைகளை தாண்டியும், இந்தியா சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து தொடர் உதவி தேவைப்படுகிறது. இரண்டாவது குவாட் மாநாட்டில் ஜப்பான் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் திட்டமிடப்பட்டுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உள்ள முட்டுக்கட்டையைத் திறக்கும் வாய்ப்பு இதனால் சாத்தியமாகும். 2017 செப்டம்பரில் சியானில் (சீனா) உச்சிமாநாடு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு டோக்லாம் எல்லைப் பிரச்சனை தீர்க்கப்பட்டது.

பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனா அதிக சக்தி வாய்ந்ததாக மாறி, இந்தோ-பசிபிக் பகுதியில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முற்படுகையில், இந்தியா மற்றும் சீனாவின் நலன்கள் ஒன்றுக்கொன்று எதிராக செயல்படும். இது மேலும் பல பிரச்சனைகள் உருவாக்கும். அது பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கப்படலாம் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் ராணுவ உறவுகள்

நவம்பர் மாதத்தில் பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனெரல் குமர் ஜாவேத் பாஜ்வாவின் பதவி காலம் முடிவுக்கு வரும் நிலையில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த இடத்திற்கான போட்டிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. மேலும் பொதுமக்கள் – ராணுவத்திற்கு இடையேயான உறவுகள் சோதிக்கப்படலாம். . போட்டியானது துணிச்சலான முடிவுகளுக்கு வழிவகுக்கும், இது அக்கம் பக்கத்தில் உள்ள சூழ்நிலையை சிக்கலாக்கும். மேலும் சார்க் மாநாட்டை நடத்த விரும்புவது பாகிஸ்தானின் வெகுநாள் இலக்காகும். 2023 தேர்தலுக்கு முன்பு இம்ரான் கான் இந்த மாநாட்டை நடத்த திட்டமிடலாம்.

இந்தியாவும் அண்டை நாடுகளும்

இப்பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் தடம் காரணமாக இந்தியாவின் சவால்கள் தீவிரமடையும். இலங்கையின் ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான ஆட்சியையும் தமிழர்களையும் கவர்ந்ததோடு, சீனாவும் நேபாளத்தில் அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Carnegie திங் டேங்க் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவில், இந்த அண்டை நாடுகளில் இந்தியாவின் வரலாறு, அரசியல், சமூக ரீதியான தொடர்புகள், , சீனா எவ்வளவு ஆழமாக வேரூன்ற முடியும் என்பதற்கான வரம்புகளாக உள்ளது தெளிவாகிறது என்று ஆராய்ச்சியாளர் தீப் பால் தெரிவித்தார். மேலும், சமநிலை படிப்படியாக சீனாவை நோக்கி நகர்கிறது, வளர்ச்சிக்கு உத்தவாதம் அளிக்கும் நாடாகவும் சமநிலை காரணியாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் சீனாவின் போக்கு பிராந்திய சக்தியான இந்தியாவுக்கு எதிராக திசை திரும்புகின்றன. வங்க தேசம் மற்றும் மாலத்தீவு தேர்தல்கள் அடுத்த ஆண்டுகளுக்கான சவால்களாக இருக்கலாம்.

உலக நாடுகளை நோக்கி இந்தியா

ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மூன்று நாடுகள் உட்பட ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களை குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள அழைத்துள்ளது இந்தியா. இந்த ஆண்டு இறுதிக்குள் 2023ம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டிற்கு தன்னை தயார் செய்து கொள்ளும். ஏப்ரல்-மே மாதங்களில் பிரான்சில் அதிபர் தேர்தலையும், நவம்பரில் நடைபெற இருக்கும் அமெரிக்க இடைக்கால தேர்தலையும் கூர்ந்து நோக்கும் வெளியுறவுத்துறை.

உள்நாட்டு நிலவரம்

உ.பி. மற்றும் பஞ்சாப் போன்ற பெரிய மாநிலங்களில் தேர்தல் என்பது அண்டை நாடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படும் என்று அர்த்தம். இந்தியாவின் உள்நாட்டு அரசியல், சமீபத்திய தரம் சன்சாத் உட்பட, அதன் மதச்சார்பற்ற நற்பெயரை இழப்பதை குறிக்கிறது. இது அண்ஐ நாட்டினரை அச்சம் அடைய வைத்துள்ளது.

இலங்கை மற்றும் மாலத்தீவுகளைப் போலவே, தடுப்பூசி விநியோகம் மற்றும் பொருளாதார உதவிகளில் இந்தியாவை முன்னணியில் உள்ள நாடாக இதர நாடுகள் பார்க்கின்றன. தற்போது பெய்ஜிங்கிற்கு நிகராக டெல்லி இந்த விளையாட்டில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா குவாட் தடுப்பூசி இனிசியேட்டிவுடன் தடுப்பூசிகளின் திறனை இந்தோ பசுபிக் பகுதிகளில் அதிகப்படுத்துவதில் முன்னேறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: In covid shadow challenges from china and afghanistan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com