பிப்ரவரி 13 அன்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் "அரசியல் சட்ட மீறல் மற்றும் ஆளுநரின் அதிகாரம் துஷ்பிரயோகம்" குறித்து விவாதிக்க பாஜக ஆளாத மாநிலங்களின் முதலமைச்சர் கூட்டத்தை ஏற்பாடு செய்ய பரிந்துரைத்தார்.
நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து தெலங்கானா முதல்வர்கே சந்திரசேகர் ராவுடன் பானர்ஜி பேசினார். தொடர்ந்து, பிப்ரவரி 20 அன்று, பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கேசிஆர் சந்தித்தார்.
மேலும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுக்கு பணியமர்த்துவதற்கான விதிகளில் மாற்றங்களை முன்மொழிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கேசிஆர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல தசாப்தங்கள் பின்னோக்கி பயணம்
பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சி முதலமைச்சர்களின் தற்போதைய அழுத்தம், பல தசாப்தங்களுக்கு முன்னர் இதேபோல் எதிர்க்கட்சி முதல்வர்கள் ஒன்றினைந்த நிகழ்வை நினைவுபடுத்துகிறது
1969இல் முதல்வராக பதவியேற்றவுடன், மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைப்பது குறித்து பேசினார். பின்னர் சில மாதங்கள் கழித்து, அவரது அரசாங்கம் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி வி ராஜமன்னார் தலைமையில் குழுவை அமைத்தது. அந்த குழுவினர் 1971இல் சம்ர்பித்த அறிக்கையில், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. நீண்ட விவாதங்களுக்கு பிறகு, 1990 இறுதியில் கவுன்சில் அமைக்கப்பட்டது.
இதையடுத்து, 1983இல் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தார். 1980இல் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, 9 மாநில அரசின் ஆட்சியை கலைத்தார். இது, கிரான்வில் ஆஸ்டின் 1983 இன் அரசியலமைப்பு கிளர்ச்சி என அழைக்கப்பட்டது.
இதையடுத்து, அதே ஆண்டில் மார்ச் 20 அன்று, ராமகிருஷ்ண ஹெக்டே (கர்நாடகா), எம்ஜிஆர் (தமிழ்நாடு), என் டி ராமராவ் (ஆந்திரா), மற்றும் டி ராமச்சந்திரன் (பாண்டிச்சேரி) ஆகியோர் பெங்களூரில் நேரில் சந்தித்து பேசினர்.
அந்த சந்திப்பை தொடர்ந்து வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள், ஆளுநர் பதவியை ரத்து செய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தென் மாநில முதலமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மே 28 அன்று, விஜயவாடாவில் காங்கிரஸ் அல்லாத 14 கட்சிகளின் கூட்டத்தை என்டிஆர் கூட்டினார். இதில் பாஜக சார்பில் எல் கே அத்வானி, சஞ்சய் விசார் மஞ்ச் சார்பில் மேனகா காந்தி, அகாலி தளம் சார்பில் எஸ் எஸ் பர்னாலா, காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சிபிஐ-எம் சார்பில் பசவபுன்னையா, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், 356-வது சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, அக்டோபர் 5-7 தேதிகளில் பரூக் அப்துல்லாவால் கூட்டப்பட்ட கூட்டத்தில் காங்கிரஸ் அல்லாத தலைவர்கள் பங்கேற்றுக்கொண்டனர். இதில் ஏபி வாஜ்பாயும் பங்கேற்றுக்கொண்டார்.
மாறும் காங்கிரஸ், பாஜக ரோல்
மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, தற்போது டெல்லியில் இரண்டு முழு பெரும்பான்மை அரசாங்கங்கள் இதே போன்ற மோதல் போக்கை சந்தித்து வருகின்றன. மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து, வலிமையான முதல்வர்கள் குரல் எழுப்புகின்றனர்.
பா.ஜ.க ஆட்சியில் இருந்ததாலும், காங்கிரஸ் கடுமையாக பலவீனமடைந்ததாலும், அதன் ரோல் மாறியுள்ளன. தற்போது மத்திய அரசுக்கு எதிராக ஒலிக்கும் குரல்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா அரசுக்கு எதிராகவும் ஒலித்தன.
பாஜக அல்லாத முதல்வர்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகளாவது, " கல்வி மையப்படுத்தல், ஆளுநரின் பாரபட்சம், புதிய மின்சாரக் கொள்கை, நிதி, பொருளாதாரம் மற்றும் சட்டமன்றத் துறைகளில் கூட்டாட்சிக் கொள்கைகள் பலவீனமடைதல், வருவாய்ப் பங்கீடு ஆகியவை அடங்கும். அதேபோல், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுக்கு பணியமர்த்துவதற்கான விதிகளில் மாற்றங்களை முன்மொழிவதற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலத்தை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதுவரை மொத்தம் 10 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அப்போது, விமர்சனங்களுக்கு பதிலளித்த இந்திரா, மத்திய-மாநில உறவுகளை ஆராய நீதிபதி ஆர்.எஸ்.சர்க்காரியா கமிஷனை நியமித்தார். 1984 இல் பணியை தொடங்கிய குழுவினர், 1987இல் 600 பக்க அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில்,சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும், பெரும்பாலான கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன. ஆளுநர்கள் தேர்வு மற்றும் நியமனம் குறித்த பரிந்துரைகளை அமல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் பலமுறை மத்திய அரசை வலியுறுத்தி வந்தது.
மத்திய அரசின் அதிகாரத்தை மீண்டும் மீண்டும் தவறாக பயன்படுத்த அனுமதித்துள்ள அரசியல் சட்டத்திலேயே குறைபாடுகள் இருக்கிறதா என சட்ட வல்லுநர் நானி ஏ பால்கிவாலா கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.