Amitabh Sinha
IPCC report message for India - 2040க்குள்ளே 1.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என்ற அறிவிப்பின் மூலம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் வலுவாக பசுமையக வாயுக்கள் வெளியீட்டை உடனே நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது ஐ.பி.சி.சி. அமைப்பு. இந்தியாவைப் பொறுத்தவரை இது நெட் ஜீரோ எமிஷன் இலக்கிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியுள்ளது. கார்பன் சிங்க்குகள் மற்றும் காடுகளை அதிகரித்தலின் மூலமாக, கார்பன் உமிழ்வும் கார்பன் கிரகிப்பும் சமநிலையில் இருக்க ஒரு காலக்கெடுவை இந்த நெட்-ஜீரோ எமிஷன் இலக்கு இந்தியாவிற்கு வழங்கும்.
திங்கள் கிழமை வெளியான ஆறாவது ஐ.பி.சி.சி.மதிப்பானது கொள்கை நடைமுறைப்படுத்தல் என்ற கோணத்தில் அமையவில்லை. உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்று அவைகள் கூறவில்லை. மாறாக, அவர்களின் அறிவியல் உலக நாடுகளில் காலநிலை தொடர்பான நடவடிக்கைகளை வடிவமைக்கிறது. மேலும், உலகளாவிய காலநிலை பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் அமைக்கிறது. இந்த ஆறாவது மதிப்பீட்டு ஆய்வு 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வு நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் மிக விரைவாக ஏற்படக்கூடும் என்பதை உறுதி செய்வதால் உலக அளவில் விரிவுபடுத்தப்பட்ட வலிமையான பசுமையக வாயு உணர்வினை குறைக்க கோரிக்கைகள் வைக்கப்படும் என்பது தெளிவாகிறது.
இதற்கு முன்பு 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை என்று அர்த்தமல்ல. ஆனால் முதல்முறையாக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத சூழல் என ஐபிசிசி வரையறை செய்திருப்பது இதுவே முதல் முறை. அளவுக்கதிகமான பசுமையாக வாயுக்கள் வெளியீடு 2030ஆம் ஆண்டுக்குள் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தி அது 1.6 டிகிரி செல்சியாகவும் உயரக் கூடும். மேலும் 1.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இந்த நூற்றாண்டின் இறுதியில் தான் எட்ட முடியும் என்று மதிப்பாய்வு தெரிவிக்கிறது.
அதிக அளவு பசுமையக வாயுக்களை வெளியிடும் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நூற்றாண்டின் மத்திய காலத்திற்குள் நெட் - ஜீரோ உமிழ்வு இலக்கை அடைவோம் என்று உறுதி கூறியுள்ளது.
உலகளவில் பசுமையாக வாயுக்களை அதிகமாக வெளியிடும் இந்தியா இன்னும் இந்த முடிவை எட்டவில்லை. மற்ற நாடுகளை காட்டிலும் அதிக அளவில் மேலும் சிறப்பாக பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது எனவும் தற்போது ஏதேனும் மாற்றங்கள் செய்தால், லட்சக்கணக்கானவர்கள் வறுமையிலிருந்து மீட்க எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் பயனற்று விடும் என இந்தியா வாதாடி வருகிறது.
1.5 டிகிரி செல்சியஸ் உயர்வை சீராக வைத்திருக்க 2050ஆம் ஆண்டுக்குள் நெட் - ஜீரோ உமிழ்வு இலக்கை அடைவது கட்டாயமாகிறது. இந்தியாவின் உதவி இல்லாமல் இது சாத்தியமாகாது. உலக அளவில் அதிக கார்பன் உணர்வை ஏற்படுத்தும் சீனா கூட 2050ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டும் என நம்பிக்கை அளித்துள்ளது என்று திங்கள்கிழமை வெளியான மதிப்பாய்வு கூறுகிறது.
மற்ற நாடுகளும் அதிக வெப்பத்தை வரக்கூடும் உலக வெப்பமயமாதல் மற்றும் அதன் தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்கான இறுதி இலக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அந்த இலக்கை நோக்கி செல்லும் பயணமும் முக்கியமானது. உடனடியான உமிழ்வு நிறுத்தம் மற்றும் நெட் ஜீரோவிற்கான பாதையில் நிதானமாக செல்வது உள்ளிட்டவை, எப்போதும் போல் இலக்கின் இறுதிக் கட்டத்தில் உமிழ்வு நிறுத்தத்தைக் காட்டிலும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
நெட் ஜீரோ இலக்கிற்கு உறுதியளித்து இருக்கும் நாடுகள் கூட உமிழ்வு நிறுத்தத்தை 2035 மற்றும் அதற்கு பிந்தைய நாட்களை தேர்வு செய்துள்ளது. இதனை மறு ஆய்விற்கு உட்படுத்த அந்த நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளது ஐ.பி.சி.சி.
அறிவியல் மிகவும் தெளிவாக உள்ளது. இப்போது நாம் செயல்படவில்லை என்றால் அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும். வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வாழிடங்கள் இதனால் பெரும் தாக்கத்தை சந்திப்பதை நாம் தொடர்ந்து பார்க்கும் சூழல் உருவாகும் என்று இங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மா கூறியுள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள காலநிலை ஆலோசனை கூட்டத்தில் இவரும் பங்கேற்க உள்ளார்.
ஒவ்வொரு நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் தொழில்துறை மற்றும் சமூக அங்கத்தினருக்கும் நாங்கள் கூறும் செய்தியானது மிகவும் எளிமையானது. அடுத்த பத்தாண்டுகள் மிகவும் முக்கியமானவை. 1.5 டிகிரி செல்சியஸ் என்பதை இலக்காக கொண்டு ஒவ்வொருவரும் அறிவியலின் பாதையில், பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். 2030ம் ஆண்டுக்குள் உமிழ்வைக் குறைத்து 2050ம் ஆண்டுக்குள் நெட் ஜீரோ இலக்கை அடைய நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும். நிலக்கரி எரிசக்திக்கு முடிவு கொண்டு வருதல், எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவு கொண்டு வருதல், காடுகளை மறு உருவாக்கம் செய்தல் மற்றும் மீத்தேன் உமிழ்வை குறைத்தல் ஆகியவற்றை நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஷர்மா கூறினார்.
தேசிய அளவில் உறுதி செய்யப்பட்ட பங்களிப்புகள் (Nationally-determined contributions or NDCs) என்று கூறப்படும் உலக நாடுகளின் இலக்குகளில் புதிய கோரிக்கைகள் மற்றும் மாற்றங்களுக்கு இந்த மதிப்பாய்வு வழி வகை செய்யும். பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ், 2025 அல்லது 2030 ஆண்டுகளுக்குள் உலக நாடுகள் மேற்கொள்ள இருக்கும் காலநிலை நடவடிக்கைகளை என்.டி.சி. மூலம் அறிவித்திருக்கும். 2025ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை வலுவான நடவடிக்கைகளை பட்டியலிட்டு என்.டி.சியை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. என்.டி.சிக்களை 2020க்குள் சமர்பிக்க வேண்டும் என்று பாரீஸ் ஒப்பந்தம் குறிப்பிட்டிருந்தாலும் கொரோனா தொற்றின் காரணமாக அதன் காலக்கெடு 2021 ஜூலை வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகள் தங்களின் என்.டி.சியை அப்டேட் செய்யவில்லை. ஆனால் 110 நாடுகள் புதுப்பித்துள்ளனர். திங்கள்கிழமை இந்த அறிக்கை வெளியான பிறகு சில ஆராய்ச்சியாளர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற நிர்வாக செயலாளர் பட்ரிசியா எஸ்பினோசா உட்பட பலரும் உலக நாடுகளில் பாதி நாட்கள் மட்டுமே மிகவும் வலுவான நடவடிக்கைகளுடன் கூடிய என்.டி.சியை புதுப்பித்துள்ளனர் என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
என்.டி.சியை புதுபிக்காத நாடுகள் அதனை புதுப்பிக்க இன்னும் வாய்ப்புகள் உள்ளது என்றும், என்.டி.சியை புதுப்பித்த நாடுகள் தங்களின் குறிக்கோள்களை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் இன்னும் வாய்ப்புகள் உள்ளது என்று ஐ.நா காலநிலை மாற்றத்திற்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.