Advertisment

கொரோனா கண்டறிதலில் வெப்பநிலை சோதனையை விட ஆக்ஸிமீட்டர் சிறந்தது

In older adults, use oximeter rather than temperature to screen for Covid: scientists: வயதானவர்களுக்கு வெப்பநிலையை கணக்கில் எடுத்துக்கொள்வது தொற்றுநோய் கண்டறிதலில் குறைந்த பலனை அளிக்கும், அதற்கு பதிலாக பல்ஸ் ஆக்சிமீட்டர் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவ அறிஞர்கள் முன்மொழிகின்றனர்.

author-image
WebDesk
New Update
கொரோனா கண்டறிதலில்  வெப்பநிலை சோதனையை விட ஆக்ஸிமீட்டர் சிறந்தது

தொற்றுநோய்களின் போது உடல் வெப்பநிலையை பரிசோதிக்க மக்கள் பழக்கமாகிவிட்டனர், ஏனெனில் காய்ச்சல் கோவிட் -19 இன் முக்கிய அறிகுறியாக உள்ளது. இருப்பினும், வயதானவர்களுக்கு வெப்பநிலையை கணக்கில் எடுத்துக்கொள்வது தொற்றுநோய் கண்டறிதலில் குறைந்த பலனை அளிக்கும், அதற்கு பதிலாக பல்ஸ் ஆக்சிமீட்டர் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவ அறிஞர்கள் முன்மொழிகின்றனர்.

Advertisment

வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் நர்சிங்கின் இணைப் பேராசிரியர் கேத்தரின் வான் சோன் மற்றும் மருத்துவ உதவி பேராசிரியர் டெபோரா எட்டி ஆகியோரின் கருத்துக்கள், ஃப்ரண்டீரியர் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய மாதங்களில் கோவிட் -19 இன் கண்டறிதலில் ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டரின் நம்பகத்தன்மை விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கோவிட் நோயாளிகளை அடையாளம் காண பல்ஸ் ஆக்சிமீட்டரின் பயன்பாட்டை ஜனவரி மாதம் உலக சுகாதார நிறுவனம் (WHO) அங்கீகரித்தது.

ஆனால் பிப்ரவரியில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் சில சூழ்நிலைகளில் தவறான முடிவுகளைத் தரக்கூடும் என்று எச்சரித்தது. மேலும் மோசமான சுழற்சி, தோல் நிறமி, தோல் தடிமன் மற்றும் வெப்பநிலை உள்ளிட்ட பல காரணிகள் கணக்கீட்டின் துல்லியத்தை பாதிக்கும் என்றும் எஃப்.டி.ஏ கூறியது.

அதே பிப்ரவரியில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி), ஆக்ஸிமீட்டர் பயன்பாடு குறித்து அதன் சுகாதார நிபுணர்களை எச்சரித்து, புதிய கொரோனா வைரஸ் வழிகாட்டலை வெளியிட்டது. ஏனென்றால், பல ஆய்வுகளின் தரவுகள் தோல் நிறமி, ஆக்ஸிமீட்டர் அளவீடுகளின் துல்லியத்தையும் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றன.

ஆனால் புதிய அறிவிக்கை வெப்பநிலை அளவீட்டுக்கு ஆக்ஸிமீட்டரை பயன்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது அதுவும் குறிப்பாக வயதானவர்களுக்கு. வயதானவர்களில் அடிப்படை வெப்பநிலை குறைவாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. குறைந்த அடிப்படை வெப்பநிலை என சி.டி.சி யின் நிலையான வரையறையான 100.4 ° F அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையை கணக்கிட்டால் ஒருவேளை காய்ச்சல் இருப்பது கவனிக்கப்படாமல் போகலாம் என்று வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

"உண்மையில், கடுமையான தொற்றுநோய் பாதிப்பு உள்ள 30% வயது முதியவர்களுக்கு லேசான அல்லது சுத்தமாக காய்ச்சல் இருப்பதில்லை" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கோவிட்டின் பிற பொதுவான அறிகுறிகளான சோர்வு, உடல் வலிகள் மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு போன்றவை வயது மூப்பு காரணங்களால் நிராகரிக்கப்படலாம் என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். கூடுதலாக, சில கோவிட் -19 நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் போன்ற குறைந்த ஆக்ஸிஜன் அளவைக் காணக்கூடிய அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆனால் 90% க்கும் குறைவான ஆக்ஸிஜன் செறிவு உள்ளது. இத்தகைய அறிகுறியற்ற ஹைபோக்ஸியா மிகவும் மோசமான விளைவுகளுடன் தொடர்புடையது.

வயதான பெரியவர்களின் கோவிட் -19 கண்காணிப்பில் விலை குறைந்த, சிறிய பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் பரவலான பயன்பாட்டிற்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று வான் சோன் மற்றும் எட்டி எழுதுகிறார்கள், ஏனெனில் நோய்த்தொற்றின் பிற அறிகுறிகள் இல்லாமலும் இந்த சாதனங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய முடியும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment