Advertisment

பகல்/இரவு டெஸ்ட் : அந்திப் பொழுது... அதிக அரக்கு... அதிக ஸ்விங் - சவாலை எதிர்நோக்கி இந்தியா

ஒரு இளஞ்சிவப்பு பந்துக்கும் சிவப்பு நிறத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், சிகப்பு பந்தில் அதன் நிறத்தை நீண்ட நேரத்திற்கு தக்க வைத்துக் கொள்ள, கூடுதலாக அரக்கு பயன்படுத்தப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ind vs ban day night test kolkata pink ball cricket - பகல்/இரவு டெஸ்ட் : அந்திப் பொழுது... அதிக அரக்கு.... அதிக ஸ்விங் - சவாலை எதிர்நோக்கி இந்தியா!

ind vs ban day night test kolkata pink ball cricket - பகல்/இரவு டெஸ்ட் : அந்திப் பொழுது... அதிக அரக்கு.... அதிக ஸ்விங் - சவாலை எதிர்நோக்கி இந்தியா!

Shamik Chakrabarty

Advertisment

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் (நவ. 14-18) நடக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நவம்பர் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. இந்த 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக நடத்தப்படுகிறது. இந்திய அணி முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் கால்பதிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கியூரேட்டர்(பிட்ச் தயாரிப்பாளர்) சுஜன் முகர்ஜி தனது முந்தைய அனுபவத்தை ஆண்க்சு பயன்படுத்தப் போகிறார். மோஹுன் பகனுக்கும் பொவானிபூருக்கும் இடையிலான 2016 சிஏபி சூப்பர் லீக் இறுதிப் போட்டி, பகல்-இரவு ஆட்டமாக நடத்தப்பட்டது. பிங்க் பந்து பயன்படுத்தப்பட்டது.

இந்தியா விளையாடப் போகும் முதல் பகல் இரவு டெஸ்ட் குறித்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான அவரது உரையாடல்,

பிங்க் பந்து டெஸ்ட் போட்டிக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு Grass Cover இருக்க வேண்டுமா?

தேவையற்றது. ஈடன் நாட்டின் உயிரோட்டமான பிட்சாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இந்த இடத்தில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு புற்களை ஆடுகளத்தில் வைத்திருக்கிறோம். அதுவே போது. கூடுதலாக எதுவும் தேவையில்லை.

விளக்கம்: இளஞ்சிவப்பு பந்தின் நிறத்தை பாதுகாக்க ஆடுகளத்தில் சில புற்கள் தேவைப்படுகிறது.

publive-image

சூப்பர் லீக் இறுதிப்போட்டியில், பிங்க் கூகபுரா பந்துகள் பயன்படுத்தப்பட்டது, அது சிவப்பு பந்தை விட சற்று அதிகமாக ஸ்விங் ஆனது இல்லையா?

ஆமாம், பிங்க் பந்தின் தன்மை என்னவென்றால், அது இன்னும் சற்று ஸ்விங் ஆகும்.

விளக்கம்: ஒரு பிங்க் பந்துக்கும் சிவப்பு நிறத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், சிகப்பு பந்தில் அதன் நிறத்தை நீண்ட நேரத்திற்கு தக்க வைத்துக் கொள்ள, கூடுதலாக அரக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் வீரர்கள் அதை வெளிச்சத்தின் கீழ் பந்தை சரியாக கணிக்க முடியும். இந்த கூடுதல் அரக்கு காரணமாக, பந்து சிறிது நேரம் கூடுதலாக ஸ்விங் ஆகும். அதேபோல், ஒரு பிங்க் பந்து மேகமூட்டமாக இருந்தால் சிவப்பு பந்தை விட அதிகமாக ஸ்விங் ஆகும்.

இளஞ்சிவப்பு பந்து விரைவாக மென்மையாகிறது என்று கூறப்படுகிறது. எனவே கொல்கத்தாவில் நவம்பர் மாத பனி பெய்யும் போது, குறிப்பாக மாலையில் பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம் தானே.

நான் அப்படி நினைக்கவில்லை. டெஸ்ட் மதியம் 1 மணிக்கு தொடங்கும். கடைசி இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் மட்டுமே இரவில் விளையாடப்படும். ஆம், நவம்பர் மாத தொடக்கத்தில் சூரிய அஸ்தமனம் விரைவாக இருக்கும். ஆனால் என் அனுபவத்திலிருந்து நான் உங்களுக்கு ஒன்று சொல்ல முடியும்... இரவு 7.30 க்கு முன்பு பனி காரணி செயல்பட வாய்ப்பில்லை. எனவே இது சமாளிக்கக் கூடியது தான். இடைவேளையின் போது கயிறு மூலம் மைதானத்தை சரி செய்ய எங்களிடம் போதுமான நபர்கள் உள்ளனர். மேலும் பனி காரணியைக் குறைக்க ஸ்ப்ரேக்களையும் பயன்படுத்துகிறோம்.

விளக்கம்: பனி காரணி ஒரு பிரச்சனை தான். இறுதி செஷனில் செய்யும் பேட்டிங் அணிகள் டிக்ளேர் செய்யாததற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஏனெனில் பந்து சோப்பு கேக் போல மாறக்கூடும். இதனால் பந்து வீச்சாளர்களுக்கு அவர்கள் வாழ்க்கையிலேயே மிகக் கடினமான தருணமாக அமையக்கூடும்.

இந்தியாவும், வங்கதேசமும் முதன் முதலாக பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகின்றன இந்தியாவும், வங்கதேசமும் முதன் முதலாக பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகின்றன

பேட்டிங் கடினமாக இருக்கும் போது பகல்-இரவு டெஸ்ட்களில் ‘twilight zone’ (வெளிச்சம் மங்கிய) என்று ஒன்று இருக்கிறதே.

அந்த காலகட்டத்தில் பந்து இன்னும் கொஞ்சம் நகர்ந்ததால், அது பேட்ஸ்மேன்கள் சற்று சிரமப்படுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. அதன் பிறகு, பேட்ஸ்மேன்கள் சமாளித்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படும்.

விளக்கம்: மாலை நேரத்தில் வெளிச்சம் நீங்கி, விளக்குகள் எரியத் தொடங்கும் போது, பிட்சுக்கு மேலே உள்ள காற்று மேலும் நிலையானதாகி, பந்து கூடுதலாக ஸ்விங் ஆக உதவுகிறது. புள்ளிவிவரங்களின்படி, பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் ஒரு செஷனுக்கு சராசரியாக மூன்று விக்கெட்டுகள் வீழ்கின்றன.

இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டியை நடத்த அதிக முயற்சி மேற்கொண்டவர் கங்குலி மட்டுமே இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டியை நடத்த அதிக முயற்சி மேற்கொண்டவர் கங்குலி மட்டுமே

ஒரு பகல்-இரவு டெஸ்ட், ஸ்பின்னர்களை விளையாடுவதற்கு அனுமதிக்கிறதா?

ஏன் கூடாது? சூப்பர் லீக் போட்டியில் நான் பார்த்தது என்னவென்றால், ஆட்டத்தின் சீரிய போக்கில் சில சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல கொள்முதல்(விக்கெட்டுகள்) கிடைத்தது.

விளக்கம்: பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் மூலம் இந்தியா சொந்த நாடு எனும் சாதகத்தை இழக்கிறது. பாரம்பரியமாக ஸ்பின் தான் இந்தியர்களின் பலம். அதேசமயம், இந்தியா அவர்களின் X-Factor (முக்கிய காரணி (அ)பவுலர்) ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் கூட உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலைக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரின் வெற்றி, பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இருந்ததை உறுதிப்படுத்தியது.

2017 ஆம் ஆண்டில், முதல் பகல் இரவு டெஸ்ட்டை ஆஷஸ் தொடரில் அடிலைட் நடத்தியது, அங்கு ஆஃப்-ஸ்பின்னர் நாதன் லயோன் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

எதிவரும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு இந்தியா விளையாடினால் அது ஆடம்பரமாகும். அந்த சூழல் இந்திய அணி நிர்வாகத்திடம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையும், ஒரு சுழற்பந்து வீச்சாளரையும் கேட்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, இந்தியா ஐந்து சிறப்பு பந்து வீச்சாளர்களை களமிறக்கியது. இருப்பினும் ஈடனில், அந்த ஐந்தில் ஒன்றைக் குறைத்து அதற்கு பதில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் வரக்கூடும்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்தியா உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக விளங்குகிறது. மறுபுறம், பங்களாதேஷ் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தமீம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் அந்த அணியில் விளையாடவில்லை. இருப்பினும், பார்வையாளர்களுக்கு இது மெகா விருந்தாக அமையப் போவது உறுதி.

Bcci Sourav Ganguly Ind Vs Ban
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment