இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டிடையே ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 30 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை குறிக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் ஏப்ரல் 2ம் தேதி அன்று இந்தியா வருகிறார்.
”என்னுடைய நண்பர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு இணங்க நான் மகிழ்ச்சியுடன் இந்தியா செல்ல இருக்கின்றேன். தொடர்ந்து இருவரும், இதே போன்று எங்களின் நாட்டை வழிநடத்துவோம்” என்று பென்னட் கூறியதாக இஸ்ரேலிய நாடாளுமன்றம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நட்பும் தொடர் வாய்ப்புகளும்
இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அரசு ரீதியான உறவுகள் துவங்கி ஜனவரி மாதம் 30ம் தேதி அன்றுடன் 30 வருடங்கள் ஆனது. இஸ்ரேல் டெல்லியில் பிப்ரவர்இ 1,1992 அன்று தன்னுடைய தூதரகர்த்தை திறக்க அதே ஆண்டு மே 15ம் தேதி அன்று டெல் அவிவில் தன்னுடைய தூதரகத்தை திறந்தது இந்தியா.
அருமையான 30 ஆண்டு உறவுகள், கலாச்சார மற்றும் பொருளாதார தொடர்பு மற்றும் ராணுவ கூட்டுமுயற்சி குறித்து இந்திய மக்களுக்கு தன்னுடைய செய்தியை இந்த ஆண்டு துவக்கத்தில், பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கு பின் பொறுப்பேற்றுக் கொண்ட, பென்னட் அறிவித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஆழமாக இருப்பதைப் போன்றே, இந்த நாடுகளுக்கு இடையே கூட்டு முயற்சி வாய்ப்புகளும் பிரகாசமாக இருப்பதாக கூறினார்.
இந்த உறவை மேற்கொண்டு இட்டுச் செல்ல தேவையான இலக்குகள் குறித்து அப்போது பேசிய மோடி, இந்தியாவில் எந்தவிதமான தீண்டாமைக்கும் ஆளாகமால் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் யூதர்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
பென்னட்டின் இந்திய வருகை குறித்து இஸ்ரேல் நாடாளுமன்றம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவை மோடி மேம்படுத்தினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இரண்டு தனித்துவமான கலாச்சாரங்களைக் கொண்ட நாடுகளின் இணைப்பு இதுவாகும். முழுக்க முழுக்க ஆதரவு மற்றும் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பின் அடிப்படையில் உருவானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மோடி
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கும் மேலாக கண்காணிப்பில் வைக்கப்பட்ட இரு நாட்டு உறவுக்கான உரிமையை, 2017ம் ஆண்டு பிரதமர் மோடி முதன்முறையாக இஸ்ரேல் சென்ற போது, முழுமையாக எடுத்துக்கொண்டார்.
1950களிலேயே இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தாலும் கூட, நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு தான் இரு நாட்டு உறவுகளும் சீரான நிலைமைக்கு வந்தது. மேற்கு ஆசியாவில் அந்த கால கட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேற துவங்கின. குவைத் மீதான ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆதரவு காரணமாக பாலஸ்தீனியத்திற்கான அரபு நாடுகளின் ஆதரவு பலவீனமடையத் தொடங்கியது. பின்பு, இந்தியாவின் ஆயுத மென்பொருள் தேவைக்கான நாடாக செயல்பட்டுக் கொண்டிருந்த சோவியத் யூனியனும் உடைந்தது.
1992ம் ஆண்டு முதல் பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வேளான் ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்த போதும், பாலஸ்தீனியர் விவகாரத்தில் இந்தியா வரலாற்று ரீதியாக கொடுத்து வந்த ஆதரவு மற்றும் கச்சா எண்ணெய்ப் பொருட்களுக்காக அரபு நாடுகளை நம்பியிருந்தது மற்றும் நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், பாலஸ்தீனியர்களின் நலன் மீது கொண்டிருந்த அக்கறை போன்றவை இஸ்ரேலுடனான உறவை கொஞ்சம் மெத்தனமாக இந்தியாவை கையாளவைத்தது.
அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி – 1- ஆட்சியின் போது தான் முதல்முறையாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட தலைவர்கள் இடையான பேச்சுவார்த்தை துவங்கியது. 2000ம் ஆண்டில், எல்.கே. அத்வானி தான் முதல்முறையாக இஸ்ரேல் சென்ற இந்திய அமைச்சரானார். அதே ஆண்டு ஜெஸ்வந்ந்த் சிங் வெளியுறவுத்துறை அமைச்சராக இஸ்ரேல் சென்றார். அதே ஆண்டு இரு நாடுகளும் இணைந்து ராணுவத்திற்கு எதிரான கமிஷன் ஒன்றை துவங்கியது. 2003ம் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷாரோன் இந்தியா வருகை புரிந்தார். இந்தியா வந்த முதல் இஸ்ரேல் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் முன்னாள் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் போல் இல்லாமல் இஸ்ரேலை கவர்ந்திழுக்கும் பணியை மேற்கொண்டாஎர் மோடி. பயங்கரவாதத்திற்கு சிறிதும் இடம் தராத சக்திவாய்ந்த நாடு என்ற இந்துத்துவாவின் இயல்பான செயல்பாடுகளை இஸ்ரேலுடன் விளையாடினார். 2020ம் ஆண்டு அமீரகம், பஹ்ரைன், சூடான் மற்றும் மொரோக்கா போன்ற நாடுகள் இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கும் வகையில் அப்ராமிக் 2020 என்ற உடன்படிக்கையில் கையெழுத்திட, அமீரகம் மற்றும் சவுதியுடனான உறவை இந்தியா புதுப்பிக்க துவங்கியிருந்தது. தற்போது முன்பு எப்போதைக் காட்டிலும் இல்லாத வகையில் மேற்கு ஆசியாவுடனான முக்கிய உறவுகள் குறித்து அதிக நம்பிக்கையுடன் இருக்கிறது.
இந்தியா – பாலஸ்தீன் நிலை
டெல்லி பாலஸ்தீனுத்திற்கு வரலாற்று ரீதியாக அளித்துவந்த ஆதரவு தற்போதைய இந்தியா – இஸ்ரேல் உறவுகள் காரணமாக அழிந்துவிட்டாலும் கூட பாலஸ்தீனுடனான வரலாற்று உறவுகள் மற்றும் இஸ்ரேலுடனான சமீபத்திய உறவுகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும் வகையில் இந்தியா செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல்-பாலஸ்தீன வன்முறை குறித்து இந்தியா வெளியிட்ட அறிக்கையில் இதனை காண முயன்றது. அந்த அறிக்கை கிட்டத்தட்ட பாலஸ்தீனில் நடைபெறும் வன்முறைக்கு இஸ்ரேலைப் பொறுப்பாக்கியது, மேலும் நியாயமான பாலஸ்தீனிய காரணங்களுக்கு இந்தியாவின் வலுவான ஆதரவையும், இரு நாடுகளின் தீர்வுக்கான அசையாத ஆதரவையும் வெளிப்படுத்தியது.
முன்னதாக, பாலஸ்தீனத்துடனான உறவு கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக இந்திய வெளியுறவுக் கொள்கையில் நம்பிக்கையின் ஒரு அங்கமாக செயல்பட்டது. இந்தியா பாலஸ்தீனியர்களின் சுய ஆட்சிக்கான உரிமையை ஆதரித்ததோடு, பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஓ) மற்றும் அதன் தலைவர் யாசர் அராபத்தின் பின்னால் பாலஸ்தீன மக்களின் ஒரே பிரதிநிதியாக அணி திரண்டது.
1975ஆம் ஆண்டு, டெல்லியில் அலுவலகத்தைத் திறக்க பாலஸ்தீனிய விடுதலைக் குழுவிற்கு அனுமதி வழங்கியது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு இராஜதந்திர அந்தஸ்தும் வழங்கப்பட்டது. 1988இல், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அந்த அமைப்பு அறிவித்தபோது, இந்தியா உடனடியாக அந்நாட்டிற்கு அங்கீகாரம் வழங்கியது. அராஃபத் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் அரச தலைவராக வரவேற்கப்பட்டார்.
டெல் அவிவில் இந்தியா ஒரு தூதரக அலுவலகத்தை திறந்த அதே வேலையில், அது காசாவிலும் ஒரு பிரதிநிதி அலுவலகத்தை அமைத்தது, பின்னர் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் ஹமாஸுக்கும் (காசாவின் கட்டுப்பாட்டைப் பெற்றது) இடையே பிளவுபட்டதால் அந்த அலுவலகம் ரமல்லாவுக்கு மாற்றப்பட்டது.
UPA வின் 10 ஆண்டு கால ஆட்சியின் போது, மேற்குக் கரையை நிர்வகிக்கும் பாலஸ்தீனிய ஆணையத்தின் தலைவரான மஹ்மூத் அப்பாஸ் 2005, 2008, 2010 மற்றும் 2012 ஆண்டுகளில் இந்தியா வருகை புரிந்தார்.
இந்தியா 2011இல் யுனெஸ்கோவின் முழு உறுப்பினராக பாலஸ்தீன் இருப்பதற்கு வாக்களித்தது. மேலும் ஒரு வருடம் கழித்து, ஐ.நா பொதுச் சபையின் பாலஸ்தீனம் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் ஐ.நா.வில் “உறுப்பினர் அல்லாத” பார்வையாளர் நாடாக மாற கூறப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா இணை அனுசரணை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
2015 செப்டம்பரில் மோடி பிரதமராக பதவியேற்று ஓராண்டுக்குப் பிறகு ஐ.நா வளாகத்தில் பாலஸ்தீனக் கொடியை நிறுவ இந்தியாவும் ஆதரவளித்தது.
கொள்கையில் மாற்றம்
இந்தியாவின் கொள்கையில் முதல் பெரிய மாற்றம் 2017 இல் மஹ்மூத் அப்பாஸின் வருகையின் போது ஏற்பட்டது, இந்தியா ஒரு அறிக்கையில் கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனிய அரசின் தலைநகராக ஆதரிப்பதற்கான வழக்கமான வரியை கைவிட்டது. மோடி இஸ்ரேலுக்குச் சென்றபோது, மற்ற தலைவர்கள் வழக்கமாக ரமல்லா செல்வது போல் அவர் அங்கே செல்லவில்லை.
ஆனால் இரு நாட்டு உறவிற்குமான சமநிலையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது இந்தியா. 2018ம் ஆண்டு ரமல்லாவுக்கு தனிப்பயணம் மேற்கொண்ட மோடி, சுதந்திர பாலஸ்தீனத்திற்கு அழைப்பு விடுத்தார்.
2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் யுனெஸ்கோ தீர்மானம் ஒன்றில் வாக்களிக்கவில்லை என்றாலும் கூட, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக டிரம்ப் நிர்வாகம் அங்கீகரித்ததை எதிர்த்து ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
முன்னதாக 2021 இல் ஜெனிவாவில் நடந்த UNHRC இன் 46வது அமர்வில், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை, இஸ்ரேலிய தீர்வு கொள்கை, மற்றும் கோலன் குன்றுகளில் மனித உரிமைகள் நிலைமை விவகாரங்கள் தொடர்பான, இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா மூன்று தீர்மானங்களில் வாக்களித்தது. கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனத்தின் மனித உரிமைகள் நிலைமை குறித்து UNHRC அறிக்கையைக் கேட்ட நான்காவது தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்கவில்லை.
பிப்ரவரி 2021 இல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்குக் கரை மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீனியப் பிரதேசத்தில் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான அதிகார வரம்பைக் கோரியது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மற்றும் ஹமாஸ் ஆகிய இருவரையும் குற்றவாளிகளாகக் குறிப்பிட்டது. ஐசிசியை அங்கீகரிக்காத இந்தியா, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நெதன்யாகு விரும்பினார் ஆனால் முடிவுகள் அவரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்தது.
UNSCயில் இந்திய அறிக்கை இஸ்ரேலுக்கு மற்றொரு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் மேற்கு ஆசியாவின் வேகமாக மாறிவரும் புவிசார் அரசியலுக்கு எதிராக இரு நாடுகளும் நீண்ட கால நலன்களை எடைபோடுவதால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை அது பாதிக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil