scorecardresearch

சிவிங்கிப்புலியை மறு அறிமுகம் செய்யும் திட்டம் எளிமையானதா?

மனித-வன உயிரின மோதல் , உணவு பற்றாக்குறை, வாழ்விட இழப்பு, சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகம் போன்ற காரணத்தால் சிவிங்கிப்புலியின் எண்ணிக்கை குறைந்து.

சிவிங்கிப்புலியை மறு அறிமுகம் செய்யும் திட்டம் எளிமையானதா?

சிவிங்கிப்புலி (சீட்டா) பாதுகாப்பு நிதியத்தின் நிறுவனர் மற்றும் ஐ.யூ.சி.என் இனங்கள் சர்வைவல் கமிஷன் பூணை நிபுணர் குழுவில் பணியாற்றும் லாரி மார்க்கர், இந்தியாவுக்கு சிவிங்கிப்புலிகளைக் கொண்டு வருவது தொடர்பான கருத்துகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுடன் பகிர்ந்து கொள்கிறார்.

சிவிங்கிப்புலி எண்ணிக்கையில் உலகளாவிய போக்குகள் என்ன ? 

மனித-வன உயிரின மோதல், உணவு பற்றாக்குறை, வாழ்விட இழப்பு, சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகம் போன்ற காரணத்தால் சிவிங்கிப்புலியின்  எண்ணிக்கை குறைந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.  உதாரணத்திற்கு, நமீபியா நாட்டில் எடுத்தோமென்றால்,  இங்கு வருடத்திற்கு 150 சிவிங்கிப்புலிகள் சட்டப்பூர்வமாக நடத்தப்படும் விளங்கின வேட்டை காரணமாக கொல்லப்படுகிறது. உயிரையும், உடமையையும் பாதுக்காக்க நீங்கள் விலங்கினை கொள்ளலாம் என்று அங்குள்ள சட்டம் கூறுகின்றது. வருடத்திற்கு 300-க்கும் மேற்பட்ட சிவிங்கிப்புலிகள் விவசாயிகளால் கொல்லபடுகிறது. மேலும், வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பரவி வரும் (ஹார்ன் ஆஃப் ஆப்ரிக்கா) சட்டவிரோத வர்த்தகம் சிவிங்கிப்புலிகளுக்கு மிகுந்த அழுத்தத்தை தருகின்றது.

நமீபியாவில் சிவிங்கிப்புலி பாதுகாப்பு நிதியின் பங்கு என்ன  (Cheetah Conservation Fund ) ?

சிவிங்கிப்புலிகளின் புகலிடம், எண்ணிக்கை அடர்த்தி, வாழ்க்கை முறை, அச்சுறுத்தல் போன்றவற்றைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை வேலைகளை நாங்கள் செய்கின்றோம். கால்நடைகளை தாண்டி  சிவிங்கிப்புலிகளின் இரைகளை பராமரிப்பதை நாங்கள் முக்கியமாக கருதுகிறோம். அவைகளின் இரைகளை சமநிலையை பராமரிப்பது மிகவும் முக்கியம். காலநடைகள் அதிகாமாக வேட்டையாடப்பட்டால் வனவிலங்கு பாதுகாப்பு மிகவும் கடினமான ஒன்றாகிவிடும்.

அதேநேரத்தில் சிவிங்கிப்புலி நல்ல வேட்டை விலங்கு. பிற விலங்குகளைக் கொன்று தின்னும். வேட்டை விலங்கு அகற்றப்பட்டால் அதிக சிக்கல்கள் ஏற்படுத்தும். உதாரணமாக, சிவிங்கிப்புலியின் எண்ணிக்கை குறைய…. குறைய, குள்ளநரியின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய நமீபியா நாட்டு விவசாயிகள், ‘ கடவுளே, தொலைதூரத்திலிருந்து மற்ற விலங்குகள்  தங்கள் நிலத்திற்குள் வரும் என்பதால் சிவிங்கிப்புலியை கொல்ல தயங்குகின்றனர்’ என்று தெரிவித்தார்.

குள்ளநரி
குள்ளநரி

 

நமீபியாவில், வனவிலங்கு பாதுகாப்பில் பல சிக்கல்கள் இருந்தாலும், சிவிங்கிப்புலிகளின் அச்சுறுத்தலுக்கு மிக முக்கிய காரணம் மனித-வன உயிரின மோதல் என்பதை  அந்த அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. எல்லோரும் திட்டங்களை உருவாக்கி வருகின்றனர். அணைத்து வனவிலங்கு பாதுகாப்பிற்கும் கல்வி முக்கியமானது. எங்கள் அமைப்பு நமீபியாவில் கடந்த 30 ஆண்டுகளில், 650,000 பள்ளி மாணவர்களுடன் பணியாற்றியுள்ளோம். அவர்கள் இப்போது அரசாங்கத்தை நடத்தி வருபவர்கள்……சுருங்க சொல்ல வேண்டும் என்றால், நமீபியாவில் நாங்கள் மக்களை உறுதிப்படுத்தியுள்ளோம்.

சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை இந்தியா முன்னெடுத்துச் சென்றால், விளைவுகள் எவ்வாறு இருக்கும்?

இந்தியா சிவிங்கிப்புலி மறு அறிமுகம் திட்டத்தை ஒரு பரிசோதனையாக பார்க்கிறது என்று நான் நினைக்கிறன். இந்தியாவில் முற்றிலும் நீக்கப்பட்ட சிவிங்கிப்புலியை இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்த நினைக்கின்றது. இந்தியா இதை முயற்சிக்க விரும்பினால், அது இந்தியாவின் புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புகளின் பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கும் .

சிவிங்கிப்புலிகள் தழுவிக்கொள்ளக்கூடியவை. அவர்கள் வாழ ஒரு இடம் இருக்க வேண்டும். இந்தியா ஒரு புதிய நிலப்பரப்புக்கான வாய்ப்பை வழங்குகிறது.   சிவிங்கப்புலிகள் ஆக்கிரமிப்பு விலங்குகள் அல்ல, எனவே அவை மக்களை சாப்பிடப் போவதில்லை. ஆப்பிரிக்காவில் முள்-முல்லை நிலக் காடு முதல் வறண்ட முல்லை நிலக் காடு வரையிலான  பலவிதமான நிலப்பரப்புகளிலும் இவைகள் காணப்படுகின்றன. இந்தியாவின் இரையின் தளமும் சிவிங்கப்புலிகளுக்கு  மிகவும் ஒத்திருக்கிறது…

இந்தியா எவ்வாறு யோசிக்க வேண்டும்?  

எண்ணிக்கையை மீண்டும் ஸ்தாபிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதை உணர வேண்டும். கலிஃபோர்னியா கான்டார் போன்ற உயிரினங்களுக்கு அமெரிக்காவில் அதிகரித்ததற்கான படிப்பினையை நாம் பார்க்க வேண்டும். அமெரிக்காவில் இந்த பறவை கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. கலிஃபோர்னியா கான்டாரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் 40 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. தற்போது தான் திட்டத்தின் பயன்களை அமெரிக்கா அனுபவித்து வருகிறது.

எனவே, குறுகிய காலத்திற்கேற்ப ஒரு விஷயத்தை சிந்திக்காமால், தொலைதூர பார்வையோடு செயல்பட வேண்டும். சிவிங்கிப்புலிகள் வேகமானவை தான், ஆனால் அதன் மறுசீரமைப்பு வேகமாக இருக்காது, நீண்ட காலமாகும் என்பது தான் உண்மை. வனவிலங்குகளின் முன்னேற்றத்திற்கான ஒரு சுவாரஸ்யமான நீண்டகால பரிசோதனையை இந்தியா ஆதரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதுபோன்ற சிவிங்கிப்புலிகளை மறு அறிமுகத்திற்கான சோதனைகள் வேறு இடங்களில் நடந்திருக்கிறதா?

ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியில் மறு அறிமுகத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.

மலாவி நாட்டில் எங்கள் குழு உறுப்பினர்கள் சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தினர். அங்கு அவை அழிந்துவிட்டன… மலாவி திட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

விஷயங்கள் நேரம் எடுக்கும். ஒரு உயிரினம் அழிவதற்கு நேரம் எடுக்கையில், அதே உயிரினங்களை மீண்டும் கொண்டுவருவதற்கு அதிக நேரமும், அதிக பணமும் தேவைப்படுகிறது… ஆனால் இந்தியாவில் மறு அறிமுகத்திற்கான விருப்பமும் வழியும் இருக்கிறது. தெளிவான யோசனைகளும்,வரைபடங்களும் உள்ளன. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் பயனுள்ளது என்று நான் நம்புகிறேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: India cheetah reintroduction program cheetah conservation