9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?

எல்லைக் கட்டுபாட்டு நெடுகே இந்தியா  தொடர்ந்து தனது India India-China standoff: படையைக் குவித்தாலும், சீனா தனது உரிமைக் கோரலில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதே கசப்பான உண்மை

By: July 4, 2020, 5:45:43 PM

Sushant Singh

கிழக்கு லடாக் பகுதியில் இந்திய – சீனப் படைகளுக்கு இடையேயான எல்லை மோதல் தற்போது ஒன்பதாவது வாரத்தை எட்டியுள்ளது. இரு நாட்டு வெளியுறவுத் துறை  அமைச்சர்களுக்கு இடையேயான உரையாடல், படைப்பிரிவு தளபதிகளுக்கு  இடையில் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள், இராஜதந்திர மற்றும் இராணுவ மட்டங்களில் நடந்த பிற விவாதங்கள் எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வர தவறிவிட்டன. வெள்ளிக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி, “அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அதன் பலவீனமாகக் கருதக்கூடாது” என்று எச்சரித்தார்.

எனவே, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பழைய இயல்பு நிலையை மீட்டெடுக்க இந்தியாவிடம் உள்ள வாய்ப்புகள் என்னென்ன ?

வாய்ப்பு 1: தாக்குதல் நடத்தி, சீனர்களை வெளியேற்றுவது  

கடந்த எட்டு வாரங்களாக, இந்திய-சீனா எல்லை கோடு நெடுகே புதிய பகுதிகளை ஆக்கிரமத்துள்ள சீனா துருப்புகள் மீது தாக்குதல் நடத்தி வெளியேற்றுவதும், எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் இந்தியா பகுதிகளில் சீனா ராணுவம் உருவாக்கிய அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் அழிப்பதும்  இந்திய ராணுவத்தின் நேரடியான நடவடிக்கையாக இருக்கும்.

எவ்வாறாயினும், இதுபோன்ற நடவடிக்கை நிச்சயமாக இராணுவ விரிவாக்கத்திற்கும், ஒரு முழுமையான போருக்கும் வழிவகுக்கும். ஜூன் 15 அன்று 14வது எல்லைச் சாவடி அருகே சீனா வீரர்கள் அமைத்த கூடராத்தை அப்புறப்படுத்துவதற்கான ஒரு சின்ன முயற்சி கூட பெரிய மோதலுக்கு வழிவகுத்தது. இதில், இந்தியா ராணுவத்தை சேர்ந்த  20 வீரர்கள்  உயிரிழந்தனர். சீனா தரப்பில் எற்பட்ட உயிரிழப்புகள் குறித்த எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு நெடுகே சீனர்கள் ஊடுருவியுள்ள இந்திய எல்லைக்குள், கடுமையான நிலப்பரப்பு மற்றும் உள்கட்டமைப்பு  பற்றாக்குறை காரணமாக, இலக்குகளை துல்லியமாக தாக்கும் நடவடிக்கையில் இந்திய இராணுவம் சோபிக்க தவறாலம். மேலும், சீனர்கள் நுழைந்த சில பகுதிகள் இரு நாடுகளாலும் உரிமை கோரப்பட்டுவருகின்றன. ஆகையால், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் புதுடெல்லி தனது நடவடிக்கைக்கு சர்வதேச ஆதரவைப் பெறுவது மிகக்  கடினமாக அமைகிறது.

சாத்தியக்கூறுகள்– வாய்ப்பில்லை   

 

 

வாய்ப்பு 2: சீனாவின் எல்லைக்குள் நுழைவது 

எல்லைக் கட்டுப்பாடு கோடு நெடுகே சீனா துருப்புகளால் பாதுகாக்கப்படாத சில பகுதிகள் உள்ளன. அங்கு இந்திய வீரர்கள் நகர்ந்து சீன நிலப்பரப்பை ஆக்கிரமிக்க முடியும். பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினரும் ஆக்கிரமப்பு செய்த பகுதிகளை பரிமாற்றம் செய்து  நிலைமையை மீட்டெடுக்கலாம். 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட அணிசேரா இயக்கம் 2.0 (நாம்) கொள்கை விளக்கக் குறிப்பு உள்ளிட்ட பல உயர் மட்டங்களில் இத்தகையை யுக்தி விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பு வல்லூநர் ஆஷ்லே டெல்லிஸ் கூற்றுப்படி,” சீனா எல்லைக்குள் ‘சுமார்’ எனும் பகுதியில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக நுழைந்த காரணத்தால், 2013ம் ஆண்டு டெப்சாங்கில்  சீன ஊடுருவல் மூன்று வாரத்தில் முறியடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளில், இரு தரப்பினரும் தங்களது முந்தைய நிலைகளுக்குத் திரும்ப ஒப்புக்கொண்டனர்.

லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு முழுவதையும் சீனா  இராணுவம் ஒருங்கே பாதுகாக்க முடியாது என்பதால்,  அதன் எல்லைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை . இருப்பினும், எல்லையில் பதட்டங்கள் உருவாகி எட்டு வாரங்கள் கடந்த நிலையில், இதுபோன்ற நடவடிக்கையின் செயல்திறன் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், தனது எல்லைக்குள்  ஏற்பட்ட ஒரு பெரிய இராணுவத் தாக்குதல் என்று தவறாக  சீனா எடுத்துக் கொண்டால், எல்லையில் மோதல் சம்பவம் அபாய நிலையை அடையும்.

சாத்தியக்கூறுகள்:  நடக்க வாய்ப்பில்லை என்றாலும், சாத்தியம் உண்டு. 

வாய்ப்பு 3: தற்போதுள்ள நிலையை இறுக்கிப் பிடிப்பது

எல்லைப் பகுதியில் இந்திய ரானுவம் தனது படையைக் குவிக்கவும், இந்திய எல்லைக்குள் சீன துருப்புகள் மேலும் ஊடுருவாமல் இருக்கவும் தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இது சீன துருப்புகளின் மேற்படி ஊடுருவலை தடுத்து நிறுத்துவதோடு, எந்த அசாத்திய சூழலை சந்திக்கத் தேவையான ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவும், எல்லையில் போர்ப் படைகளை குவிக்கவும் நேரம் அமைத்து தருகிறது.

 

அதே நேரத்தில் பேச்சுவார்த்தைகள் ஒருங்கே நடைபெற வேண்டும். எல்லைப் பகுதியில் பழைய இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கு, இருநாடுகளின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தையைத்  தொடரலாம். இதற்கிடையே, அண்மையில் அதிகரித்து காணப்படும் சீனாவுக்கு எதிரான பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் முடிக்கி விடலாம்.  இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் ஏற்படும் மோதலில் தீர்வு காண இந்தியா முயல்கிறது என்பதை சீனாவுக்கு  உணர்த்தவும், பொறுப்பற்ற முறையில் இந்தியா செயல்படாது என்பதை உலகிற்கு  உணர்த்தவும் முடியும்.

அனைவருக்குமான ஒரு பொதுவான சவாலாக சீனா உள்ளது என்பதை உலக நாடுகள் அங்கீகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக எடுக்கப்படும்    ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் இந்தியா பயனடையலாம். சீனாவை அழுத்தத்திற்கு உட்படுத்தும்  புதுவகையான இராஜதந்திர, பாதுகாப்பு மற்றும் வர்த்தக கூட்டாண்மைகளில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

இருப்பினும், எல்லை மோதல் குளிர்காலம் வரை நீட்டிக்கப்பட்டால், இந்திய இராணுவத்தின் மீது பெரும்  நிதிச் சுமையை ஏற்படுத்தும். எல்லையில் பதற்றம் நிறைந்த சூழலில் எதிரெதிரே நிறுத்தப்பட்டிருக்கும்  இரு நாட்டு வீரர்களுக்கிடையே ஏதேனும் சின்ன அசாதாரண  சம்பவம் ஏற்பட்டால், பெரிய படைக்குவிப்புக்கு வழிவகுக்கும் .

எல்லைக் கட்டுபாட்டு நெடுகே இந்தியா  தொடர்ந்து தனது படையைக் குவித்தாலும், சீனா தனது உரிமைக் கோரலில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்ற கசப்பான உண்மையையும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லைப்புறக் கட்டமைப்பை  தொடர்ச்சியாக சீனா மேம்படுத்துதல் மூலம் முன்பிருந்த நிலையை நிரந்தரமாக மாற்றக்கூடும்.

சாத்தியக் கூறுகள்அதிகப்படியான வாய்ப்பு

வாய்ப்பு 4: சிறிய மட்டத்திலான போர்

இது புவியியலின் அடிப்படையில் மட்டுப்படுத்த போராக இருக்கலாம். உதராணமாக, லடாக் பகுதியில் மட்டும் இத்தகைய போர் துவங்கப்படலாம்.  இது மிகவும் தைரியமான நடவடிக்கையாக இருக்கும். ஏனெனில், நுட்பமான எதிரியுடன் ஒரு முழுமையான போரை ஏற்படுத்தும் மிகப்பெரிய ஆபத்தை இது கொண்டுள்ளது. மேலும், சீனா தனது படைப் பிரிவுகளை ஒருங்கிணைத்துள்ளது. எனவே, ஒட்டுமொத்த சீன-இந்திய எல்லைப் பகுதியும் மேற்கு படைப்பிரிவின் கீழ் ஒற்றை தளமாக காணப்படுகிறது. எல்லை மோதலை இந்தியா விரும்பும் பகுதிகளுக்கு மட்டுப்படுத்தாமல், ஒட்டு மொத்த இந்திய ராணுவத்தையும் போருக்கு அழைக்கிறது.

பொதுவாக, போருக்கு அதிகளவு ராணுவ வளங்களும், அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார சீரமைப்பு பணிகளில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சீனாவுக்கு எதிரான நேரடியாக அணிசேர உலக நாடுகளிடம் பெரிய வேட்கையும் தற்போது. அதே நேரத்தில், அண்டை நாடான பாகிஸ்தான் மற்றொரு எல்லையில் இருந்து தனது தாக்குதலை முன்னெடுக்கலாம்.

இதில் ஒரு நன்மை என்னவென்றால்,

சாத்தியக் கூறுகள்: சுத்தமாக வாய்ப்பில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:India china face off india strategic options on lac border disputes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X