Advertisment

இந்தியா-சீனா எல்லை பதற்றம்: தௌலத் பேக் ஓல்டி நெடுச்சாலை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

255 கி.மீ  நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையை முடிக்க இந்திய அரசின் எல்லையோர சாலைகள் நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் எடுத்தன.

author-image
WebDesk
Jun 11, 2020 12:47 IST
இந்தியா-சீனா எல்லை பதற்றம்: தௌலத் பேக் ஓல்டி நெடுச்சாலை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

Nirupama Subramanian

Advertisment

255 கி.மீ  நீளமுள்ள தர்புக்-ஷியோக் தௌலத் பேக் ஓல்டி நெடுஞ்சாலையை இந்திய அரசு சீரமைத்ததன் விளைவு தான், கிழக்கு லடாக் பகுதியில், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் ஊடுருவ முக்கிய காரணமாக அமைந்தது.

13,000 அடி உயரத்தில் தொடங்கும் இந்த சாலை 16,000 அடி உயரம் வரை வளைந்து பயணிக்கிறது. இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு நேர் இணையாக செல்லும் இந்த சாலைப் பணியை முடிக்க இந்திய அரசின் எல்லையோர சாலைகள் நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் எடுத்தன.

காரகோரம் மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் தௌலத் பேக் ஓல்டி விமானத் தளத்தை, லடாக் ஒன்றியப் பகுதியோடு  இணைப்பதால் ராணுவ மட்டத்தில் இந்த சாலை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த காரகோரம் மலைத் தொடர் தான் இந்தியாவின் லடாக் மற்றும் சீனாவின் சின்ஜியாங் உய்கர் தன்னாட்சி பிரதேசத்தை பிரிக்கிறது.

 

தௌலத் பேக் ஓல்டி உலகின் உயரமான விமான ஓடுதளமாக செயல்பட்டு வருகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 16,614 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இதுவரை இந்திய ராணுவத்தின் உயர் தரமான ஹெலிக்காப்டர்களும், ஆன்டனோவன்-32 வகையான உலகுரக விமானங்களும் குறைந்த எடை ராணுவத்தளவாடங்களை மட்டுமே எடுத்துச்சென்று வந்தன.

20.08.2013 செவ்வாய் கிழமை அன்று இந்திய விமானப் படை சரித்திரம் ஒன்றை நிகழ்த்திக் காட்டியது. புதிதாக வாணிய ராணுவ விமானமான சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தை இவ்விமான ஓடுதளத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. அதனால், சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்கு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுவது எளிமையானது.

தர்புக்-ஷியோக் தௌலத் பேக் ஓல்டி நெடுஞ்சாலை  மூலமாக அக்சாய் சின் வழியாக செல்லும் திபெத்-ஜின்ஜெயிங் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை இந்திய இராணுவம் அணுகலாம். 1950-களில் சீனா ஆக்கிரமித்த முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிழக்குப் பகுதியான அக்சாய் சின்-ல் உள்ள இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு இணையாக இந்த சாலை பயணிக்கிறது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு  1962 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு வழிவகுத்தது. இதில், இந்தியா மோசமான தோல்வியை  சந்தித்தது.

இந்தியாவின் தௌலத் பேக் ஓல்டி நெடுஞ்சாலை  கட்டமைப்பு பணிகள், சீனாவிற்கு அழுத்தம் கொடுத்தன. அதன் விளைவாக 2013 ஆம் ஆண்டு, சீனா துருப்புகள்   டெப்சாங் சமவெளிகளில் ஊடுருவினர். இந்த, பதட்டமான சூழல் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் வரை  நீடித்தன.

அக்சாய் சின் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு மேற்கே 10 கி.மீ. குறைவான தொலைவில் தான் தௌலத் பேக் ஓல்டி விமான இயங்குதளம் உள்ளது. அக்சாய் சின் ஆக்கிரமிப்புக்கு  பதிலடி கொடுக்கும் வகையில், தௌலத் பேக் ஓல்டி பகுதியில் இந்திய இராணுவ புறக்காவல் நிலையம் (military outpost) அமைக்கப்பட்டது. தற்போது,லடாக் சாரணர் படைப்பிரிவு  மற்றும் இந்திய-திபெத்திய எல்லை காவல்படை (ஐ.டி.பி.பி) வீர்ர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. இரு படைப்பிரிவு வீரர்களும்  தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தௌலத் பேக் ஓல்டி மேற்கில், சீனாவும் - பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியோடு எல்லையைப் பகிர்ந்துள்ளது. கில்கிட்-பால்டிஸ்தான் முந்தைய காஷ்மீர் மாகாணத்தின் பிராந்தியங்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா நிர்வகிக்கும், சீனா- பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தில் இந்த பகுதிகள் அதிகளவிலான முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியா, இந்த பொருளாதார திட்டத்திற்கு கடுமையான ஆட்சேபனையை  தெரிவித்து வருகிறது.

அதேபோல், இந்த பகுதியில் இருந்து தான், சீன-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின்  கீழ் பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ நிலங்களை சீனா நாட்டிற்கு விட்டுக் கொடுத்தது.

கோடை காலத்தில் ஷியோக் நதி மற்றும் இதர நதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் முந்தைய சாலைகளை இந்திய ராணுவம் பயனபடுத்த முடியாமல் இருந்தது. அதன்  காரணமாக,37 பாலங்ககளின் உதவியோடு தர்புக்-ஷியோக் தௌலத் பேக் ஓல்டி நெடுஞ்சாலை மீண்டும் சீரமைக்கப்பட்டது. அனைத்து வானிலை சூழலிலும்  இந்தியா ரானுவத்திற்கு இணைப்பை வழங்கும் வகையில் இந்த நெடுஞ்சாலை செயல்படுகிறது.

ஷியோக் நதி சிந்துவின் துணை நதியாகும். இது வடக்கு லடாக் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் வழியாக பாய்கிறது.

அக்டோபர் 2019ம் ஆண்டு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த நெடுஞ்சாலையில் ஒரு பகுதியான 500 மீட்டர் நீளமுள்ள பெய்லி பாலத்தை  (முன்னரே தயாரிக்கப்பட்ட ஒரு வகை சிறிய பாலம்) திறந்து வைத்தார்.லடாக்கைச் சேர்ந்த இந்திய ராணுவ வீராங்கனை கர்னல் செவாங் ரிஞ்சன் பெயரை இந்த பாலத்திற்கு சூட்டினார். 14,650 அடி உயரத்தில் அமைந்துள்ள  இந்த பாலம், உலகின் மிக உயர்ந்த பாலம் என்று நம்பப்படுகிறது.

ஆங்கிலத்தில் படிக்க: Explained: The strategic road to DBO

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Ladakh #China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment