இந்தியாவுடன் மோதலை சீனா ஏன் முன்னெடுக்கிறது?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செய்யப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள்  சீனா மற்றும் பாகிஸ்தானுடனான தற்போதைய பிராந்திய நிலைப்பாட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது

By: Updated: June 16, 2020, 04:54:31 PM

எல்லைக் கட்டுபாட்டு கோட்டில், இந்திய பாதுகாப்புப் படையினருக்கும், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் இடையேயான பதட்டங்கள் உறுதியான பெய்ஜிங்கை புது டெல்லி எவ்வாறு கையாள வேண்டும் என்ற கேள்வியைப் புதுப்பித்துள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநரும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சர்வதேச விவகாரங்களுக்கான பங்களிப்பு ஆசிரியருமான சி.ராஜா மோகன் கூறுகையில்,” சீனாவும் மற்றவைகளும்,ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததை அடிப்படையாக வைத்து, சீனா ராணுவத்தின் அத்துமீறல்களை நியாயப்படுத்துகிறது. காஷ்மீர் சர்ச்சையில், பெய்ஜிங் தன்னையும் இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றது என்று பலர் கருதுகின்றனர்.  ஆனால், இந்த வாதம் அடிப்படையற்றது” என்று தெரிவித்தார்.

ஏனெனில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செய்யப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள்  சீனா மற்றும் பாகிஸ்தானுடனான தற்போதைய பிராந்திய நிலைப்பாட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. உண்மைனியில்,  “லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்தியாவுடன் சீனா ஏன் புதிய ராணுவ சிக்கலை துரிதப்படுத்தியது என்ற கேள்விக்கு, இந்தியாவின் பதில் குறுகிய வட்டத்தில் சுற்றுவது பரிதாபமாக உள்ளது” என்று  ராஜா மோகன் தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய இந்த கட்டுரையில் வாதாடுகிறார்.

உண்மையில், பிராந்திய தகராறை சீனா முன்னெடுக்க வேண்டிய முக்கிய காரணங்கலாக இருப்பது,“ வளர்ந்து வரும் இராணுவத் திறன்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான அரசியல் விருப்பம்” என்று ராஜா மோகன் கூறுகிறார். புதுடெல்லி நீண்டகால பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அதன் சொந்த பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, சீனாவுடன் அதிகரித்து வரும் அதிகார ஏற்றத்தாழ்வை புது டெல்லி சரிசெய்ய வேண்டும். உதாரணமாக, ஜம்மு-காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளை புதுடெல்லி மாற்றவில்லை. ஆனால், தகராறுக்கு உரிய தென் சீனக்கடல் பகுதியில் சீனா துணிவோடும், ஆவலுடனும் அதன் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

 

Violent faceoff on China border: One officer, two Indian soldiers dead; casualties on both sides


முன்னாள் வெளியுறவு செயலாளரும், சீனாவுக்கான இந்தியா முன்னாள் தூதருமான விஜய் கேஷவ் கோக்கலே, இந்தோ-பசிபிக் பகுதியை அதன் செல்வாக்கு மண்டலமாக மறுவரிசைப்படுத்த பெய்ஜிங் முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள  கடல்சார்ந்த நாடுகள் இதுவரை அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பையும் (பிராந்தியத்தில் முதன்மை கடல் சக்தியாக விளங்குகிறது) சீனாவின் பொருளாதார உயர்வாழும் பயனடைந்து வந்தனர்.  இருப்பினும், உடன்படிக்கை அடிப்படையிலும், சட்டபூர்வ அடிப்படையிலும் பெய்ஜிங்கின் சமீபத்திய பிராந்திய உரிமைகோரல்கள் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளது என்று தெரிவித்தார்.

ஆயினும்கூட, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு(ஆசியான்) சீனாவையும், அமெரிக்காவையும் தொடர்ந்து சமநிலைப்படுத்த முயற்சிக்கும். தீவிரமானா பிராந்திய சீரமைப்புகளுக்கு தற்போது சாத்தியமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா-பசிபிக் மற்றும் தென் சீனக் கடல் பிராந்தியங்களில் இந்தியா ஒரு பங்குதாரராக இருந்து வருகிறது. தனது இருத்தலை தக்கவைத்துக் கொள்ள இந்தியாவின் செயல்பாடுகள் அதிகமாக வேண்டும். “சீனாவா? அமெரிக்காவா? என்பதல்ல கேள்வி. சர்வதேச மக்களின் நிலைத்தன்மைக்கு  தேவையான ஒத்துழைப்பை உருவாக்குகிறோமா ? அல்லது  ஒருவரை மட்டும் கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்து நமது உரிமையை ஒப்படைக்கப் போகிறோமா” என்று விஜய் கேஷவ் கோக்கலே தெரிவித்தார்.

தென் சீனக் கடலில் சர்வதேச மக்களின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதிசெய்வதும், சீனா தனது நலன்களை “முறையான முறையில்” தொடர ஊக்குவிக்கப்படவேண்டும். இதற்காக, ஆசியானின் எதிர்பார்ப்புகளுக்கு இந்தியா பதிலளிக்க வேண்டும். RCEP போன்ற பிராந்திய ஏற்பாடுகள் இந்த விஷயத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:India china faceoff line off actual control east ladakh india china border news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X