கொரோனா வைரஸ் யாருக்கும் வரலாம்: அதீத பயம் தேவையா?

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட  அனைவரையும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று ஒருமித்த கருத்தை மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது தான் நாம் உணர்ந்துள்ளோம்.

By: Published: July 2, 2020, 5:54:35 PM

Dr Satchit Balsari, Dr Zarir Udwadia

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட  அனைவரையும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று ஒருமித்த கருத்தை மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது தான் நாம் உணர்ந்துள்ளோம். எபோலா நோய்த் தாக்குதல் போல கொரோனா நோய்த் தொற்று பரவாது என்பதையும், தடுப்பூசி மருந்து இல்லாத நிலையில் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக விலகல் நெறிமுறை போன்ற தலையீடுகள் சிறந்த பாதுகாப்பாக அமையும் என்பதையும் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே நாம் உறுதியாக அறிந்திருந்தோம்.

ஆயினும், கடந்த நூறு நாட்களாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்ட  அனைவரும் மருத்துவமனைகளில் தான் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த தவறான நடவடிக்கை, இந்தியா சுகாதார கட்டமைப்பை முற்றிலும் முடக்கியது. கோவிட் அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் புறக்கணிக்கப்பட்டன.  தற்போது, கொரோனா வைரஸ்  பரவல்  நாட்டின் தொலைதூரங்களில் உள்ள பகுதிகளிலும் காணப்படுவதால், இந்தியாவின் புறநகர் பகுதிகள்  , கிராமப்புறங்கள் இந்த நோய்த் தொற்றை எவ்வாறு அணுகுகின்றன என்பதனை தெரிந்து கொள்வது முக்கியமானதாக அமைகிறது.

 

 

அறிகுறிகள் இல்லாத நோயாளிகள்: கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்படும் பெரும்பாலான நோயாளிகள் அறிகுறிகள் எதையும் வெளிபடுத்துவதில்லை. ஆனால், இத்தகைய நோயாளிகள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு பரப்புகின்றனர். நோய்த் தாக்குதலின் தன்மை  இவர்களிடம் குறைவாக காணப்படுவதால், இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை என்று எதுவும் தேவைப்படாது.

லேசான அல்லது மிக லேசான பாதிப்பு : கொரோனா அறிகுறிகள் வெளிபடுத்தக் கூடிய அனைத்து நோயாளிகளும் முதலில் அறிகுறிக்கு முந்தைய COVID-19 நிலையில் இருப்பார்கள். இந்த தோராய இரண்டு நாள் இடைவெளியில், அவர்களிடத்தில் நோய்த் தொற்று அதிகரிக்கிறது. தொற்றும் இவர்களிடம் இருந்து பரவுகிறது.  இறுதியில் நாம் அடையாளம் கண்டுள்ள சுவை மற்றும் வாசனை முகரும் திறன் இழப்பு, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்குகிறார்கள். மிகவும் லேசான மற்றும் அறிகுறிக்கு முந்தைய கோவிட் -19 நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தலைத் தேர்வு செய்யலாம், இத்தகைய நோயாளிக்கு கழிப்பறை வசதியுடன் ஒரு அறையும், அவருடன் ஒரு உதவியாளர் மட்டும் போதுமானதாக அமையும்.

கொரோன மிதமான நோய் பாதிப்பு உள்ளானவர்கள்: மிதமான அறிகுறிகள் உடையவர்களுக்கு, ஆக்ஸிஜன் சிகிச்சை (Proning)  மிகவும் பயனுள்ளதாக அமையும். உலக அளவிலான அனுபவத்தின்படி, மருத்துவ முறையில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும் காற்று கொரோனா  நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தேவைப்படுகிறது. தொற்று பாதித்தவர்களில் 14 சதவீதம் பேருக்கு ஏதோ ஒரு வகையிலான சுவாசக்கருவிகள் தேவைப்படுகின்றன.  இருப்பினும், அவசர சிகிச்சைப் படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் போன்ற எதுவும் மிதமான கோவிட்- 19 நோயாளிகளுக்கு தேவையில்லை.

தீவிரத் தன்மையை வெளிப்படுத்தும் கோவிட்- 19 நோயாளிகள்:    

நிமோனியா நோய்த் தாக்குதல்  போலன்றி, கோவிட் -19 நோயாளிகளுக்கு அதிகமான மூச்சுத் திணறல் திடீரென ஏற்படுகிறது. இந்த நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படுகின்றன. இந்த சுவாச இயந்திரங்கள் மிகவும் சிக்கலானவை என்பதால், திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியைக் கொண்டு இயக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோயைக் குணப்படுத்தவோ அல்லது வராமல் தடுக்கவோ மருந்தில்லை. இந்த சூழலில், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க  ஆர்சனிக்கம் ஆல்பம் 30 சி உருண்டை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை விநியோகிப்பதற்கு பதிலாக, ஆபத்து அதிகம் உடைய மக்களுக்கு பல்ஸ்-ஆக்சிமீட்டர் கருவியை  விநியோகிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். இதுவரை, நோயின் தீவிரத்தன்மையை அதிகமாக வெளிபடுத்தும் நோயாளிகளுக்கு ரெமெடிசிவிர் மருந்து சிறிது முன்னேற்றம் தருவதாக கண்டறியப்படுகிறது.    ஆர்.என்.ஏ. வைரஸ் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படக் கூடிய ஃபேவிபிராவிர் மருந்தை மிதமான நோயாளிகளுக்கு கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

கோவிட்- 19 பெருந்தொற்றை பொறுத்த வரையில், உள்ளூர் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் நோய்த் தடுப்பு நடவடிக்கையை சிறந்த உத்தியாக அமையும். தாராவி,  கேரளா போன்ற நாட்டின் வெவ்வேறு பகுதிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அதன் சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்தது. கோவிட் -19 நோய்த் தொற்றை  பெறுபவர்களில் பெரும்பாலானோர் விரைவில்  குனமடைந்து விடுகின்றனர். பல்ஸ் -ஆக்சிமீட்டர் கருவியைக் கொண்டு முடிந்த வரை மிதமான அறிகுறிகள் வெளிபடுத்தும் கொரோனா நோயாளிகளை கண்காணிக்கலாம்  (கருவிகள் இல்லாத பட்சத்தில் அல்லது சுவாச விகிதங்களை மட்டுமாவது   கணக்கிடலாம்). மூச்சுத் திணறல் அதிகம் இருக்குமாயின் ஆக்ஸிஜன் சிகிச்சையை  நிர்வகிக்க வேண்டும்.

இந்தியாவில் குறிப்பிட்ட மக்கள் கொரோனா தொற்றால் அதிகளவு நோய்வாய்ப்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு முக்கியமான கவனிப்பு தேவைப்படுகிறது. இதில், யதார்த்தம் என்னவென்றால், அதிகம் நோய்த் தாக்குதல் அடைந்த பெரும்பாலான மக்களுக்கு தேவையான பராமரிப்பு கிடைக்கவில்லை. நாம் பல ஆண்டுகளாக புறக்கனிக்கப்பட்ட சுகாதார கட்டமைப்பை ஒரு பெருந்தொற்று காலத்தின் போது கட்டமைக்க முடியாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:India coronavirus care demystifying covid 19 care

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X